PDA

View Full Version : தலைப்பற்ற கவிதை



ஆதி
05-10-2010, 10:36 AM
அந்த பாதை முழுக்க
சிந்திக் கிடந்த எழுத்துக்களை
அவள் உற்று நோக்கினாள்

பற்பலவாய் அவை நிறமித்துக் கொண்டிருந்தன

அருவெறுப்பும் சிநேகமும் ஈர்ப்பும்
அவற்றின்மேல் உண்டாயின அவளுக்கு

பரிமளத் தைலம் போலவும்
நிணத்தைப் போலவும்
மாறி மாறிக் கமழ்ந்தன

ஊதுவத்தியினதும்
சிகரெட்டினதும்
புகைந்தெரிந்து உதிர்ந்த சாம்பல்
அவ்வெழுத்துக்களின் அடியில் படிந்திருப்பதை
அவள் கவனித்தாள்

போகம் தத்துவம் சாபம்
அகோரம் மரிப்பு தவிப்பு
பிறப்பு ஆன்மீகமென
பலவற்றின் பிம்பங்களை பார்த்தவள்
தனக்கான பிம்பத்தை தேடிய போது
அகப்பட்டது அவளுக்கான புனிதமான ஆடையொன்று..

அதனை அவள் அணிந்த தருணத்தில் ஆனாள்
பூர்வ நிர்வாணமாய்..

தீபா
05-10-2010, 11:38 AM
இதை அப்படியே ரிவர்ஸில் படித்தேன். தலைகீழாகப் படித்தேன் என்று சொன்னால் அர்த்தம் மாறிவிடும் :D
எங்கிருந்து எப்படி மாறுகிறார்கள் என்று புரிந்தது
பிறகு, நீங்கள் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து பார்த்தேன்.. (கிட்டத்தட்ட இரண்டும் ஒன்றுதான்)
எப்படியெல்லாம் மாற்றப் போகிறார்கள் என்று புரிகிறது.
கவிதை ஒரு வட்டத்தில் சுற்றுகிறது.

- Deepa

அல்லிராணி
05-10-2010, 12:18 PM
உரித்தாள் உரித்தாள்
வெங்காயம்...

எங்கே எல்லாம் இருக்கிறது?
எல்லாவற்றிலும் தான்.
எங்கே எதுவும் இல்லை?
எல்லாவற்றிலும்தான்..

இருப்பவைகள் தொலைகின்றன
தொலைந்தவை இருக்கின்றன

இரண்டும் தெரியும்பொழுது
எதுவுமில்லாமல் போகின்றன
எதுவுமில்லை என்று தெரிந்தபின்
எல்லாம் தெரிந்துவிடுகின்றன

இருப்பு தெரிந்தால்
இருப்பு கொள்ளாது
இருப்பு தொலைந்தால்
இருப்பு இருக்கும்

வழியை தேடிச் சென்றால்
இருப்பு கரையும்
வலியை ஏற்றுக் கொண்டால்
இருப்பு புரியும்

தீபா
05-10-2010, 12:35 PM
அல்லியக்கா, உங்க கவிதை படிச்சுட்டு தலைசுத்திட்டிருக்கு.... ஃபேன் மாதிரி!! ஹாஹா
நல்ல பதில்கவிதைங்க.

தீபா.

அல்லிராணி
05-10-2010, 12:46 PM
அல்லியக்கா, உங்க கவிதை படிச்சுட்டு தலைசுத்திட்டிருக்கு.... ஃபேன் மாதிரி!! ஹாஹா
நல்ல பதில்கவிதைங்க.

தீபா.

அப்போ உங்க வீட்டு கரண்ட் பில் குறையும்னு சொல்லுங்க....:icon_b:

அல்லிராணி
05-10-2010, 05:21 PM
உரித்தாள் உரித்தாள்
வெங்காயம்...

எங்கே எல்லாம் இருக்கிறது?
எல்லாவற்றிலும் தான்.
எங்கே எதுவும் இல்லை?
எல்லாவற்றிலும்தான்..

இருப்பவைகள் தொலைகின்றன
தொலைந்தவை இருக்கின்றன

இரண்டும் தெரியும்பொழுது
எதுவுமில்லாமல் போகின்றன
எதுவுமில்லை என்று தெரிந்தபின்
எல்லாம் தெரிந்துவிடுகின்றன

இருப்பு தெரிந்தால்
இருப்பு கொள்ளாது
இருப்பு தொலைந்தால்
இருப்பு இருக்கும்

வழியை தேடிச் சென்றால்
இருப்பு கரையும்
வலியை ஏற்றுக் கொண்டால்
இருப்பு புரியும்

பாவமா இருக்கு.. அதனால விளக்கமா குழப்பறேன். முடிஞ்சா தெ(ளி)ரிஞ்சுக்குங்க தீபா, ஆதன்...

உரித்தாள் உரித்தாள்
வெங்காயம்...

--- இருபொருள்..

1. ஒரு சில சொட்டுகள்.. அதை மேலும் மேலும் ஆராய்ந்து கொண்டே இருந்தாள். பலப்பல விஷயங்கள் வந்தன. ஆனால் முடிவில் ஒன்றுமில்லாமல் போனது...

2. அவள் தன் ஆடைகளை ஒவ்வொன்றாய் உரித்தெறிந்தால். போலியாய் போர்த்திக் கொண்டிருந்த ஆடைகள் களைந்த பின் தெரிந்தது வெண்மையான உடல்..

இதைச் சொல்லக் காரணமிருக்கு, ஒரு பார்வையில் அவள் ஜென் துறவி போல் ஞானம் பெற்றாள் என்று சொல்லுது உங்கள் கவிதை..

இன்னொரு பக்கம் அவள் பிடித்தவர்களுடணும் பிடிக்காதவர்களுடணும் களி(ழி)த்தாள்.. பின்னர் எல்லாம் அலசிப் பார்த்த போது உணர்வில் நிவாணமானாள் என்கிறது உங்கள் கவிதை.. அதனால்தான் வெங்-காயம்.

எங்கே எல்லாம் இருக்கிறது? எல்லாவற்றிலும்தான்.
எங்கே எதுவும் இல்லை? எல்லாவற்றிலும்தான்.

உங்கள் கவிதையை எடுத்துக் கொள்ளுங்கள் சில சொட்டுகளில் எல்லாம் இருப்பதாக நம்பப் பட்டது. ஆனால் பகுத்து பகுத்து ஆராய்ந்தபோது கடையில் ஒன்றுமில்லாத வெளிக்குப் போய்விடுகிறது.

ஒன்றுமே இல்லாத ஒன்றிலிருந்து உலகம் தோன்றியது, அது ஒன்றுமே இல்லாத ஒன்றில் அடங்கப் போகிறது என்பது தத்துவம்.

இந்தச் சொட்டுகளைப் போல எதை ஆராய்ந்தாலும் அதில் எல்லாம் கிடைக்கும். கிடைக்கக் கிடைக்க கிடைக்க தோண்டத் தோண்ட ஒரு சமநிலை மாறிப் போகும் போது கிடைத்ததெல்லாம் அர்த்தமிழந்து போய் ஒன்றுமே இல்லை என்பது புரியும். உங்கள் கவிதையும் அதைத்தான் சொல்ல நினைச்சது. (சொன்னதா என்பது வேறுவிஷயம்)


இருப்பவைகள் தொலைகின்றன
தொலைந்தவை இருக்கின்றன

இப்படி மாறுபட்ட கண்ணோட்டத்தில் காணும் பொழுது அங்கே இருக்கும் வார்த்தைகள் தொலைந்து விடுகின்றன.

வார்த்தைக் கட்டுகளில் தொலைந்து போன கருத்துகள் இருக்கின்றன,

உள்ளிருந்து வெளிநோக்கும் பொழுதும், வெளியிலிருந்து உள்நோக்கும் போதும் கருத்துகள் வேறு வேறு தோற்றம் காட்டுகின்றன.

இது உடல் என்கிறது வெளிநோக்குப் பார்வை.
இது ஆன்மா என்கிறது உள்நோக்குப் பார்வை.

இருப்பவை தொலைத்தால் - உடலை மறைத்துப் பார்த்தால்
தொலைந்தவை இருக்கின்றன - வார்த்தைகளில் தொலைந்து போன ஆன்மா இருக்கிறது (என்ன வார்த்தைகள் என்பது ஆதனுக்கே தெரியும் என்று நினைக்கிறேன்)



இரண்டும் தெரியும்பொழுது
எதுவுமில்லாமல் போகின்றன
எதுவுமில்லை என்று தெரிந்தபின்
எல்லாம் தெரிந்துவிடுகின்றன

இப்படியாகப் பட்ட இருபொருள்களும் புரிந்து விட்ட பிறகு ஒன்றுமில்லை என்ற தத்துவம் புரிபடத் தொடங்குகிறது.

ஒன்றுமில்லை என்பது புரிந்தவுடன் எல்லாம் புரிகிறது.. (ஆதன் உங்க கையெழுத்தில் உள்ள சாக்ரடீஸ் இதையே தான் கொஞ்சம் மாத்திச் சொல்லி இருக்கார் -
எனக்கொன்றும் தெரியாது என்பதை உணர்வதிலேயே இருப்புற்றிருக்கிறது மெய்யறிவு... )


இருப்பு தெரிந்தால்
இருப்பு கொள்ளாது
இருப்பு தொலைந்தால்
இருப்பு இருக்கும்



இதில் இரு பொருள்..

1. கையில் பணம் எவ்வளவு இருக்கிறது என்று தெரிந்தால் அதை எப்படிச் சேமிப்பது, செலவு செய்வது என மனம் அலைபாயும். அதை எதாவது செய்யும் வரை அடங்காது. அதைச் செலவு செய்து முடித்து விட்டால் மனம் ஒரு நிலைப்பட்டு விடும்..

2. கவிதையில் மறைபொருள் இருப்பது தெரிந்தால் அதை அறியும் வரை தூக்கம் வராது. ஆனால் இப்பொழுதைய உங்கள் கவிதையில் இருக்கும் சில வார்த்தைகளைத் தொலைத்தால், அதன் கரு இருக்கும்,


வழியை தேடிச் சென்றால்
இருப்பு கரையும்
வலியை ஏற்றுக் கொண்டால்
இருப்பு புரியும்

இருபொருள்...

1. என்றும் யார் யாரோ வழிகாட்டுவார்கள் என்று தேடிக் கொண்டே இருந்தால் மனதில் உறுதி குலையும். அதே சமயம் இதுதான் வழி இதுதான் பயணம் என்று உறுதியாய் வரும் கஷ்டங்களை தாங்கி உறுதியுடன் நடந்தால் என்ன இருக்கிறது என்று புரியும் (அது கடவுளில் தொடங்கி வாழ்க்கை வரை எதுவாக இருந்தாலும்)

2. உங்கள் வார்த்தைகள் கூட்டிச் செல்லும் வழியில் சென்றால் கவிதையின் கரு மயங்கி ஒரு விலைமகளைக் காட்டுகிறது.
இந்தக் கடினமான விமர்சன வலியைத் தாங்கி சில வார்த்தைகளை மாற்றினீர்கள் என்றால், கவிதையிம் கரு எல்லோருக்குமே புரியும்....

Ravee
05-10-2010, 05:41 PM
அல்லியக்காவிற்கு சரணம் சரணம் .... என் கண்ணுக்கு நூறு ஆதவா இரு நூறு தாமரை அணிவகுத்து எந்திரன் ஸ்டில்ஸ் போல தெரியுது ... நல்லா விளக்கிடீங்க ....:mini023:

ஆதி
06-10-2010, 11:15 AM
அக்கா கொஞ்சம் பழுது பார்த்திருக்கிறேன்..

போதுமா னு பாருங்களேன்

அல்லிராணி
06-10-2010, 12:26 PM
சொட்டுகளை எடுத்தெறிந்ததற்கு ஷொட்டுகள்.

பிச்சி
09-10-2010, 02:32 PM
அய்யய்யோ தெரியாமல் வந்துவிட்டேன் :D