PDA

View Full Version : எந்திரன் - 'தினமணி' கட்டுரை



குணமதி
05-10-2010, 10:07 AM
இன்றைய (5-10-2010) 'தினமணி'யில் இடம்பெற்றுள்ள கட்டுரை


எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!

சமஸ்

ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.

தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ""ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?''

படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது "ஜெமினி ஸ்டுடியோ'. "சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்!

ஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்...

வரலாறுதானா "சன் பிக்சர்'ஸின் "எந்திரன்'?

நிச்சயமாக "எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.

மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. "சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான "கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை "எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?

ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; "வால்மார்ட்'டுக்கும் "கோகோ கோலா'வுக்கும் "ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் "எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.

சென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் "எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.

இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு "எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.

படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட "எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் "எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் "ஏகபோக' (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.

தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, "எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன்? பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா!

"எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். "எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் "எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்!

பூமகள்
05-10-2010, 10:19 AM
நல்ல கட்டுரை.. பகிர்ந்தமைக்கு நன்றிகள் குணமதி அண்ணா.

இதையெல்லாம் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை ரசிகர்கள்.. என்பது எனது கனத்த ஆதங்கம். அப்படி புரிந்து கொண்டிருப்பார்களேயானால் முட்டாள் தனமான பால் அபிசேகங்களும், மொட்டையடி பச்சை குத்தல்களும் இல்லாத நல்ல இளைய தலைமுறை உருவாகிவிடுமே... தன் சுய முன்னேற்றத்திலும், குறைந்த பட்சம் தன் வீட்டின் நிலையையும் புரிந்து கொண்டு அக்கறை உள்ளவர்களால் இவற்றைச் செய்வதற்கான நேரம் இருக்காது..

என்ன சொன்னாலும், திருந்தாத மக்கள் கூட்டம்.. விழிப்புணர்வு என்பது சுத்தமாக இந்த விடயத்தில் கிடையாது. என்ன சொல்லி என்ன செய்ய..

நானும் நீங்களும் வருந்துவது தான் மிஞ்சும்.

தாமரை
05-10-2010, 11:00 AM
எதையுமே நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் இருக்கிறது.

படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட "எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது.

இது வேணும்னா நிஜமா இருக்கலாம்.

புதுக்கோட்டை ஒரு மாவட்டத் தலைநகரம். 4 தியேட்டர் மட்டுமே உள்ள பேரூராட்சிகளில் கூட 2 தியேட்டர்களில் எந்திரன் ரிலீஸ்.


ஏன் இதை எழுதியவர் என்னை மாதிரி சரி இரண்டு வாரம் கழிச்சு பார்ப்போம் என இருக்கக் கூடாது?

திணமணி போட்ட கணக்குக்கே வருவோம்.

3000 தியேட்டர், 500 சீட்டுகள், 4 காட்சிகள்.. அப்படியென்றால் ஒரு நாளில் 60 இலட்சம் பேர் இந்தப் படத்தைப் பார்த்திடுவாங்க. உலகத்தில் மொத்தமா இந்தப் படத்தைப் பார்க்கப் போகிறவர்கள் 12 கோடி என்று வச்சுகிட்டாலும் 20 நாளில் எல்லோரும் படத்தை பார்த்து முடிச்சிருவாங்க இல்லியா? அப்புறம் அய்யா வாங்க அம்மா வாங்க என்று கூவிக் கூவி கூப்பிட்டுத்தான் படம் காட்டணும்.

பெங்களூரில் டிக்கெட் விலை முதல் மூன்று நாட்களுக்கு மட்டும் 400 ஆக இருந்தது. இப்போ 250 தான். அடுத்த வாரம் சராசரியான 200 ரூபாய்க்கு வந்திடும்.


இவர் போட்ட கணக்கின்படி பார்த்தால் 30 நாளில் எந்திரன் படத்தை பார்க்க ஆள் வராது. அதனால் தீபாவளிக்கு பல படங்கள் வெளியாகி ஓடலாம். இரண்டு மூணு மாசம் என்பதெல்லாம் ஓவர்.

எல்லோரும் எந்திரன் பார்த்தே ஆகணும்னு வீட்டுக்கு வீடு ஆளனுப்பி கழுத்தைப் பிடிச்சு தள்ளிகிட்டுப் போனா தப்புதான்.

எந்தச் செய்தியை வாசிக்க விரும்புகிறோம். எந்திரன் திரையிடப் பட்ட தியேட்டரில் நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிர் ஊசல்...

எந்திரன் சினிமா டிக்கெட் தகராறில் கத்திக் குத்து. வாலிபர் உயிர் ஊசல்..

இப்படியா?

சில தியேட்டர்கள் மட்டுமே என்றிருந்தால் பிளாக்கில் டிக்கெட் விற்பார்கள். பாதி இலாபத்திற்கு மேல் அனாமத்தாக சில வேலையத்தவங்களுக்குப் போயிருக்கும். ஆனால் இப்போ முறையா டிக்கெட் கிடைப்பதால் அரசுக்கு வரி வருமானம். யார் முதல் போடறாங்களோ அவங்களுக்கு வருமானம் என ஞாயமா போகுது இல்லியா?

இன்னொரு பக்கம் பாருங்க. புதுப்பட ரிலீஸில் பணம் பார்ப்பது யார்? சொகுசு தியேட்டர் முதலாளிகள். இந்தப் படத்தில் காமா சோமா தியேட்டர் முதலாளி கூட இலாபமடைகிறான் இல்லியா? அதை ஏன் கணக்கில எடுத்துக்க மாட்டேங்கறாங்க.

வயித்தெரிச்சல் படாம பார்த்தா இந்த சைடும் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கு. அதனால.. "சும்மா திட்டாதீங்க"

ஸ்ரீதர்
05-10-2010, 11:40 AM
இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு "எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.

இக்கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஏதோ வேறு படங்களே எந்த தியேட்டரிலும் ஓடாதமாதிரி இருக்கிறது.

இந்த ஆட்சியின் / அவர் குடும்பத்தினரின் அட்டகாசங்கள் ஏற்றுக்கொள்ள முடியாததுதான் அதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால் சிவாஜி மற்றும் சந்திரமுகி ரிலீஸ் ஆனபோது இதே போல் ஆனதே .... அப்போது தினமணி ஏன் வாய் மூடி இருந்தது?

எந்த தியேட்டர் காரரும் நிறைய கலக்ஷன் பார்பதையே விரும்புகிறார்கள். காற்றுள்ளபோதே துற்றிக்கொள்கிறார்கள் அவ்வளவுதான்.

எந்த ஒரு திரைப்படமாக இருந்தாலும் வெறும் தியேட்டரில் போட்டு விட்டாலே ஓடிவிடாது. மக்கள் ஆதரவு என்பது எவருடைய படத்திற்கும் மிகவும் முக்கியமான ஒன்று. இதே ரஜினியின் குசேலன் பிளாப் ஆனது . அதையும் இங்கே நினைவில் கொள்ளுங்கள்.

மற்ற படங்களுக்கு இல்லாத சலுகை எதற்கு ரஜினி படத்திற்கு மட்டும் என்று கேட்கலாம். தான் நடித்த படங்கள் (பாபா , குசேலன்) தோல்வியடைந்தபோது அதில் ஒரு பகுதி நட்டத்தை திருப்பிக் கொடுத்தார் ரஜினி. வேறு எந்த கதாநாயகனும் செய்யாதது இது. அதை ஒப்புக்கொண்டால் இதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் நன்றாக இல்லையென்றால் அதை தியேட்டருக்கு சென்று பார்க்காமல் திருட்டு வி சி டி யில் பார்த்து மக்கள் தண்டனை கொடுத்து விடுகிறார்கள் .

ரஜினி படம் என்பது எப்போதுமே ஹாட் டாபிக். மற்ற பத்திரிகைகள் போல் அதை போற்றி எழுதி விளம்பரம் தேடிக்கொள்வது ஒரு வகை. அதை தூற்றி எழுதி விளம்பரம் தேடிக்கொள்வது இன்னொரு வகை. தின மணி செய்திருப்பது இரண்டாவது வகை.

மற்றபடி , பாலபிஷேகம் , ஆயிரம் ரூபாய் கொடுத்து டிக்கட் வாங்குவது , போன்ற மடத்தனங்கள் ஏற்றுக்கொள்ள முடியாததுதான்.

M.Jagadeesan
05-10-2010, 12:14 PM
நிழலை நிஜமென்று எண்ணும் மக்கள் கூட்டம் இருக்கின்றவரையில் இது போன்ற அவலங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும்.

அறிஞர்
05-10-2010, 01:43 PM
பத்திரிக்கை துறையில் எதிர் குழு படம் வெளியிட்டதற்காக.... இப்படியா...
--------
காற்றுள்ள போதே தூற்றிக்கனும்.....

ரசிகர்களின் எதிர்பார்ப்பு... இருக்கையில் படம் வெளியிட்டு சம்பாதிப்பதில் தவறில்லை. இதனால் பல குடும்பங்கள் பயனடையும்.

வாசன் போன்று வரும் லாபத்தில் கீழ் நிலையுள்ள ஊழியர்களுக்கு ஊக்கப்பரிசை சன் நிறுவனம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

இன்பா
05-10-2010, 01:54 PM
சன் டீவி ஒரு லாப நோக்கு நிறுவனம், ஒரு ரூபாய் போட்டாலே நூறு ரூபாய் எதிர்பார்பார்கள்... சரி அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், எப்படி எல்லாம் ரஜினியை டம்மியாக்கலாம் என்று ஒவ்வொரு படம் வரும்போது ஒரு கூட்டம் கிளம்பிவிடுகிறது...

காலுல கல்லு பட்டா வாயிலருந்து பல்லு விழுததாம்.

மதி
05-10-2010, 02:42 PM
கட்டுரை ஆசிரியர் ஏனோதானோவென்று எழுதியிருக்கிறார் என்று மட்டும் புரிகிறது. போட்ட முதலை எடுக்கவேண்டும் என்பது சன் டிவிக்கு மட்டுமல்ல வியாபாரம் செய்யும் எல்லோருக்கும் இருக்கும்.

தாமரை சொன்னது போல ஒரு தியேட்டர் மட்டும் கொள்ளை லாபாம் பார்க்காமல் நிறைய தியேட்டர்கள் லாபம் பெற இம்முறை வழிவகுக்கிறது. மேலும் பத்து நாள் ஓடினால் போதும் என்ற நிலை வரும் போது அடுத்தடுத்து நிறைய படங்கள் வெளியாகும். கஷ்டப்பட்டு நூறு நாட்கள் படத்தை ஓட்டும் கட்டாயமில்லை..

ஒரே ஒரு கோணத்தில் மட்டும் பார்த்துவிட்டு கட்டுரையா எழுதி பத்திரிக்கையில் வெளியிட்டுடுறாங்க.. என்னத்த சொல்ல... :eek::eek::eek:

சிவா.ஜி
05-10-2010, 02:55 PM
எதையுமே நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் இருக்கிறது.


சில தியேட்டர்கள் மட்டுமே என்றிருந்தால் பிளாக்கில் டிக்கெட் விற்பார்கள். பாதி இலாபத்திற்கு மேல் அனாமத்தாக சில வேலையத்தவங்களுக்குப் போயிருக்கும். ஆனால் இப்போ முறையா டிக்கெட் கிடைப்பதால் அரசுக்கு வரி வருமானம். யார் முதல் போடறாங்களோ அவங்களுக்கு வருமானம் என ஞாயமா போகுது இல்லியா?

இன்னொரு பக்கம் பாருங்க. புதுப்பட ரிலீஸில் பணம் பார்ப்பது யார்? சொகுசு தியேட்டர் முதலாளிகள். இந்தப் படத்தில் காமா சோமா தியேட்டர் முதலாளி கூட இலாபமடைகிறான் இல்லியா? அதை ஏன் கணக்கில எடுத்துக்க மாட்டேங்கறாங்க.

வயித்தெரிச்சல் படாம பார்த்தா இந்த சைடும் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கு. அதனால.. "சும்மா திட்டாதீங்க"

அசத்தல். நீங்க சொல்றத...நூத்துக்கு நூறு அப்படியே ஒத்துக்கறேன்.
அதென்னவோ ரஜினி படம்ன்னாலே சில ஆளுங்களுக்கு புகைச்சல் அதிகம். நாலு பேரு அவரை பாராட்டிடக்கூடாது....


நீங்க கடைசியா சொன்னது "நச்"

Ravee
05-10-2010, 06:10 PM
வாசன் சந்திரலேகா வெளியிட்ட காலத்தில் திருட்டு டிவிடி இல்லை , சின்னத்திரை இல்லை , ஆனால் வாசன் தியேட்டர் தொழிலாளர்களுக்கு பங்கு பிரித்து கொடுத்துக்கொண்டு இருந்த போது, நாடக அரங்கை சேர்ந்த கலைஞர்கள் அழுது கொண்டுதான் இருந்தார்கள் எங்கள் வயிற்றில் இப்படி அடிக்கிறீர்களே என்று .... புதுமைகளும் மாற்றங்களும் வரும் போது பெரிய டைனசார்களும் மடிந்துதான் போகின்றன . இந்த தத்துவம் ரஜினிக்கும் சன் குழுமத்துக்கும் கூட பொதுவானதே .

இந்த உலகத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது .

ஆதவா
06-10-2010, 06:44 AM
எந்திரன் என்ற பெயருக்குக் கீழ் எத்தனை எதிர்ப்புகள்!! ஒருபக்கம் படம் ஒரு அபத்தத்தின் உச்சம் என்றும் இன்னொரு பக்கம் ஏகாதிபத்தியம் என்றும்... ஒரு கடையில் மொத்தமாக தினமணி பேப்பர் மட்டுமே விற்பதால் மற்ற பேப்பர்களின் விற்பனை பாதிக்கிறது என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பார்களா? இல்லை கடையின் இலாபத்தைப் பார்ப்பார்களா?

படையப்பா படம் எங்கள் ஊரில் நான்கு தியேட்டரில் ரிலீஸ் என்று நினைக்கிறேன். நான் மூன்றாம் நாள் டைமண்ட் தியேட்டரில் சைக்கில் டோக்கனுக்குக் (அப்போது சைக்கிலில் வந்திருந்தால் டிக்கெட்டும் டோக்கனும் ஒன்றாகத் தருவார்கள்) காத்திருந்து வாங்கிச் சென்றேன். ஆனால் கவுண்ட்டரில் முந்திச் சென்றவர்களுக்கு போலீஸ் தடியடி நடத்தியது. கிட்டத்தட்ட பத்து இருபது பேருக்கும் மேலே காயப்பட்டுதான் படத்தைப் பார்த்தார்கள். ஆனால் இன்று நிலைமையே வேறு. ஒன்பது தியேட்டரில் ரிலீஸ், கவுண்டரில் இரண்டாம் நாள் சாவகாசமாகத்தான் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. தடியடி கிடையாது.

ஒன்பது தியேட்டரில் ரிலீஸ் செய்து ரசிகர்களுக்கு சுலபமாக டிக்கெட் பெறச் செய்து முப்பது நாற்பது நாட்களில் வசூலித்துவிட்டு படம் தூக்குவது சரியா? இல்லை
ஒரே தியேட்டரில் ரிலீஸ் செய்து மிகுந்த சிரமங்களுக்கும் அடிதடிகளுக்கும் இடையே டிக்கெட் பெறச் செய்து வசூலை இருநூறு நாட்கள் கழித்து எடுப்பது சரியா?
எப்படிப் போனாலும் கணக்கு ஒன்றுதான்...

சென்னையைச் சுற்றியிருக்கும் தியேட்டர்களில் எந்திரன் நூறு சதவிகித பார்வையாளரின்றி சாவகாசமாகச் செல்லுவதாக செய்தி படித்தேன். ”ஏகாதிபத்திய” எந்திரனுக்கே அப்படியென்றால் மற்ற தியேட்டர்களில் ஈ கொசு கூட இல்லை என்று சொல்வார்கள் போலிருக்கிறதே?

திருப்பூர் மட்டுமல்ல, எல்லா மாநகராட்சியிலும் சரி, நகராட்சியிலும் சரி, அதிக தியேட்டர்கள் ரிலீஸ் என்றால் முதல் மூன்று நாட்களுக்கு டிக்கெட் விலை அதிகமாகத்தான் இருக்கும். பார்ப்பது அவரவர் இஷ்டம். அடுத்த பத்து நாட்களில் நூறு சத கூட்டம் தியேட்டரில் இருக்காது. நீங்கள் நம்புவீர்களோ மாட்டீர்களோ, திங்கள் கிழமை அன்றே திருப்பூரில் விலை குறைந்துவிட்டது. ஒரு தியேட்டரில் நூறு ரூபாய் வரை குறைந்துவிட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் ஐம்பதுக்கு வந்துவிடும். பிறகு எந்திரனும் மற்ற படங்களைப் போல ஆகிவிடும்.

தாமரை, ஸ்ரீதர் , ரவீ ஆகியோரின் கருத்துக்கள் ஏற்கத்தக்கது!!

ஓவியன்
06-10-2010, 07:31 AM
எந்திரன் குழுவில் இருந்த எல்லோருடைய உழைப்பும் அபரிதமானது, அது திரைப்படத்தில் தெரிகிறது. அந்த பிரமாண்ட உழைப்பினை அங்கீகரிக்கவே எந்திரனில் இருந்த சின்ன, சின்ன குறைகளை நாம் மறந்து விட வேண்டும். ஏனென்றால் அப்படி செய்யாது போனால் (இது போன்ற கடும் உழைப்பினை ஆதரிக்காது போனால்) இது போன்ற முயற்சிகள் தமிழில் இனி இல்லாமலே போகலாம்.

சரி, அதிருக்கட்டும் இப்போது நான் மேலே கூறிய கருத்து எந்திரனுக்கு மட்டுமல்ல, இதுவரை வந்த, வரப் போகும் எல்லாத் திரைப்படங்களுக்கும் பொருந்தும்.

அதனை விட்டு அந்த படைப்பிலுள்ள உழைப்பினை அறியாது கண்ணை மூடிக்கொண்டு நமக்கு பிடிக்காதவர் படைத்த படைப்பென்ற ஒரு காரணத்தை மட்டும் உள்ளே வைத்துக் கொண்டு சகட்டு மேனிக்கு விமர்சிப்பதே தப்பு. இது சன் குழுமத்துக்கும் பொருந்தும்.

விகடன்
06-10-2010, 07:40 AM
கலாநிதி மாறனை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டாய் போல ;)

ஓவியன்
06-10-2010, 07:51 AM
கலாநிதி மாறனை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டாய் போல ;)

அவங்களுக்கு ஒரு நியாயம், மற்றவங்களுக்கு ஒரு நியாயம்னு இருக்கக் கூடாதிலே... :cool:

nambi
06-10-2010, 08:33 AM
இதில் முதலீடு அதிகம், நடிகர் நடிகையருடைய ஊதியம், இயக்குநருடைய ஊதியம் தொழில் நுடபவியலாளர்களின் ஊதியம்...என்று எல்லா முதலீடுகளும் அதிகம் இதை இப்படித்தான் ஒரே சமயத்தில் வெளியிட்டு எடுப்பார்கள். இதில் கருப்பு வெள்ளை என்று இருவேறான ஊதியங்கள் வேறு.

இதில் அதிகபட்சமான முதலீடு...ஏற்கனவே தயாரிப்பில் இருந்த ஒரு இன்டர்நேஷனல் (மொசாபீர்...சரியாக நினைவில்லை) தயாரிப்பு நிறுனத்தாலேயே சமாளிக்க முடியாமல் சில பல காட்சிகள் துவக்கப்பட்டு கைமாறிய படம் தானே இது. வேறு யாரும், அதாவது ஏற்கனவே இருந்த தயாரிப்பு நிறுவனங்கள் எதுவுமே இந்த அளவு மூதலீட்டுடன் எடுக்க முன் வரவில்லையே. எல்லோரும் சங்கரை பார்த்து பயந்து தானே ஒடினார்கள். அப்படித்தானே செய்தி வந்தது.

என்னதான் பிரமாண்டமென்றாலும், முதலீடு என்றாலும் அதை மக்களிடம்..இவ்வளவு மூதலீட்டுக்கும் சேர்த்து வட்டியுடன் இருமடங்காக வசூலிக்கத்தான் படநிறுவனம் ஆசை படும் (இது வணிகம்)......இதை பார்வையாளர்களிடமிருந்து தான் வசூலித்து சரிகட்ட வேண்டும் என்ற கட்டாயம். இதன் காரணமாகவே ஒரே நேரத்தில் படத்தை திரையிடவேண்டிய கட்டாயம். இது ஏற்கனவே தயாரிப்பாளர்கள் மத்தியில் ஏற்றுகொண்ட விஷயம் தானே. பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு இப்படி இல்லையே. இப்போது எல்லா படங்களும் அப்படித்தானே வெளியிடப்படுகிறது. அப்போதும் தள்ளித்தான் ஓட்டப்படுகிறது என்ற தகவல்கள் தான் வருகிறது. அதாவது முன்பு எதிர்பார்த்த அளவு இருமடங்கான லாபம் வருவதில்லை. நட்ட்மும் வருவதில்லை. (இருமடங்கிற்கு குறைவு என்றோலே தயாரிப்பாளர்களுக்கு வணிக ரீதியில் நட்டம் என்று தான் கூறுவார்கள், இந்த படத்திற்கு அப்படியும் வாய்ப்பில்லை....யூகம் தான்)

இதன் முதலீடு அதிகமென்பதால் சற்று எல்லா வித்த்திலும் எல்லை மீறியிருக்கும், அதுவும் பேசித்தான் அனுமதித்திருப்பார்கள். எப்படி பார்த்தாலும் தோழர்கள் கூறியது போல் திரைப்படத் தொழில் சார்ந்தவர்களுக்கும், அரசுக்கும் என சேர்த்து எல்லா தரப்பினருக்கும் தானே இலாபம்.

நடுத்தர, சாமான்ய ஏழை மக்கள்களில் (இளைஞர் பட்டாளங்களைத் தவிர) வேறு எவரும் இந்த விலையில் டிக்கெட் கொடுத்து திரைப்படம் பார்க்கப்போவதில்லை. ஒன்று ''இந்திய தொலைக்காட்சியில் முதன்முறையாக'' இன்னொன்று 40 ரூபாய் சீடி மூலமாக....... அதுவும் ஒரு சீடி வாங்கினால் ஊரே பார்க்கலாம். அதை கருத்தில் கொண்டு தானே ஒரே நாளில் வெளியிட்டு முதல் வாரத்தில் முதல் எடுத்தல்..... அடுத்த வாரத்தில் இலாபம் எடுத்தல் என்று ஒரே சமயத்தில் திரையிட தயாரிப்பாளார்கள் மத்தியில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த விமர்சனத்தில் நேர்மையாக தெரியாத விஷயம் ஒன்றையும் அலசியதாக தெரியவில்லை.

aren
06-10-2010, 08:46 AM
இவ்வளவு பணத்தைப் போட்டு படம் எடுப்பவர்கள் பணத்தை எவ்வளவு சீக்கிரமாக எடுக்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் எடுக்கவே முற்படுவாரகள். அப்படியில்லையெனில் திருட்டு விசிடி வந்து முதலுக்கே மோசமாகிவிடும் நிலைமை வந்துவிடும்.

எனக்குத் தெரிந்து தயாரிப்பாளர் செய்தது சரியே. இதன்மூலம் அனைவருக்கும் நல்லதே நடந்திருக்கிறது.

தினமணி வேறு வழி தெரியாமல் முழிப்பதாகவே எனக்குப்படுகிறது.

விகடன்
06-10-2010, 08:48 AM
முதலீடு இலாபம் என்று ஒன்று இல்லாமல் செய்வதற்கு இதென்ன திரைப்பட சேவையா நடத்துகிறார்கள்.
இன்னொரு விடயம். தமிழர்கள் எல்லோரும் கட்டாயம் பார்க்க வேண்டும். தவறுவோர் தண்டிக்கப்படுவர் என்ற சட்டம் போட்டா படம் ஓட்டுகிறார்கள். விரும்பினால் பாருங்கள். அதீதமாக விரும்பின் பலதடவையேனும் பாருங்கள். இது ஒரு பொழுதுபோக்கு. அவ்வளவுதான். தரத்திற்கேற்ப விலை. கட்டுபடியானால் பாருங்கள். முடியாவிட்டால் பொறுத்திருந்து கட்டுபடியாகும் நேரத்தில் பாருங்கள்.
------------
எல்லாத்திரையரங்குகளிலும் ஒரேதடவையில் திரையிட்டால்த்தான் கள்ள சீடிகளின் பாதிப்பிலிருந்து ஓரளவேனும் தப்பமுடியும்.

இந்தப் படத்தயாரிப்பால் பயனுற்றோர் எவ்வளவு ஆயிரம் பேர் தெரியுமா? எத்தனைபேரிற்கு ஊதியம் அளித்திருக்கிறது? நாட்டின் வேலையில்லாப்பிரச்சினையின் வீதத்தை குறைத்திருக்கிறது? இதெல்லாம் இலவசமாக செய்ய கலாநிதிமாறன் நாட்டிற்கு இலவச சேவையா செய்கிறார்?

இன்பா
06-10-2010, 02:41 PM
இந்தப் படத்தயாரிப்பால் பயனுற்றோர் எவ்வளவு ஆயிரம் பேர் தெரியுமா? எத்தனைபேரிற்கு ஊதியம் அளித்திருக்கிறது? நாட்டின் வேலையில்லாப்பிரச்சினையின் வீதத்தை குறைத்திருக்கிறது? இதெல்லாம் இலவசமாக செய்ய கலாநிதிமாறன் நாட்டிற்கு இலவச சேவையா செய்கிறார்?

நாட்டிற்கு சேவை செய்ய வேண்டியவர்களே ஸ்வாஹா செய்கிறார்கள்...

உண்மையில் உங்கள் ஆதங்கம் தான் என்ன என்றே புரியவில்லை...

ரஜினியா? ரசிகர்களா? திரைப்படங்களா? கலாநிதி மாறனா?

விகடன்
06-10-2010, 03:00 PM
ஆதங்கமா? எனக்கா? அப்படி ஒன்றிருக்கிறதா இல்லையா? இருக்கிறதென்றால் அது எதில் என்பதை ஆராய்வதற்கு முன்னர் உங்களிடமிருந்து சில விடயங்களை எதிர்பார்க்கிறேன்...

எந்தவகையில் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டியவர்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
யார் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

ரஜினியா? ரசிகர்களா? திரைப்படங்களா? கலாநிதி மாறனா?

அப்படி என்னத்தைத்தான் ஸ்வாகா செய்துவிடுகிறார்கள்?

இன்பா
06-10-2010, 04:27 PM
எந்தவகையில் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டியவர்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
யார் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

ரஜினியா? ரசிகர்களா? திரைப்படங்களா? கலாநிதி மாறனா?

அப்படி என்னத்தைத்தான் ஸ்வாகா செய்துவிடுகிறார்கள்?

நான் கேட்ட கேள்விகளின் பதிலாக அந்த கேள்வியையே என்னிடம் கேட்டு பதிலை எதிர்பார்கிறீர்கள், இதற்காக உங்களின் திறமையை பாராட்டுகிறேன். அதே சமயம் நழுவ நினைக்கும் உங்கள் உள்நோக்கத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

மதுரை மைந்தன்
06-10-2010, 07:41 PM
எந்திரன் என்று படத் தலைப்பில் தமிழ் இருப்பதால் தமிழாக அரசு இந்த படத்திற்கு வரி விலக்கு அளித்திருப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார். அப்படியும் ஏன் டிக்கெட் விலை இத்தனை உயர்வு?

அமரன்
06-10-2010, 08:23 PM
எங்க கை வைச்சா அது செய்தி ஆகும் என்று நன்றாகத் தெரிந்து வைத்திருக்கும் பத்திரிக்கையும் கட்டுரை ஆசிரியரும் சிறந்த ஊடகவாசிகள்தான்.

விகடன்
06-10-2010, 08:54 PM
இன்பா!
எனது கேள்வியும் உங்களது கேள்வியும் ஒன்றல்ல... இதுபற்றிய உங்களுக்கு இருக்கும் அறிவு எந்தளவிலிருக்கிறது என்று எனக்கு தெரிந்தால்த்தானே மேற்கொண்டு எதைச் சொல்ல வேண்டுமென்று எனக்குத்தெரியும். ஆகையால் மேலிடப்பட்ட பதிவுகளை மீள ஒருதடவை படித்துவிட்டு எனது கேள்விக்கு பதிலுரையுங்கள். மிகுதியை நான் தெளிவுபடுத்துகிறேன்.

அன்புரசிகன்
06-10-2010, 09:07 PM
இன்பா!
எனது கேள்வியும் உங்களது கேள்வியும் ஒன்றல்ல... இதுபற்றிய உங்களுக்கு இருக்கும் அறிவு எந்தளவிலிருக்கிறது என்று எனக்கு தெரிந்தால்த்தானே மேற்கொண்டு எதைச் சொல்ல வேண்டுமென்று எனக்குத்தெரியும். ஆகையால் மேலிடப்பட்ட பதிவுகளை மீள ஒருதடவை படித்துவிட்டு எனது கேள்விக்கு பதிலுரையுங்கள். மிகுதியை நான் தெளிவுபடுத்துகிறேன்.

டேய் நீ இன்னமும் தூங்கலயா???:eek:

நான் இங்க வேலைக்கு கிளம்பப்போறேன்..

இன்பா
07-10-2010, 02:54 AM
இதுபற்றிய உங்களுக்கு இருக்கும் அறிவு எந்தளவிலிருக்கிறது என்று எனக்கு தெரிந்தால்த்தானே மேற்கொண்டு எதைச் சொல்ல வேண்டுமென்று எனக்குத்தெரியும்.

நான் சாதாரணமாகத்தான் கேட்டேன், ஏன் வீண் வாக்குவாதம்....


நான் இங்க வேலைக்கு கிளம்பப்போறேன்..

எனக்கும் வேலை இருக்கிறது... கிளம்புகிறேன்... :)

joy001
07-10-2010, 07:40 AM
ரசிகர்களாலும், மீடியாக்களாலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் எந்திரன். ர*ஜினி, ஷங்கர், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் போன்ற பிரமாண்ட பெயர்களால் எந்திரன் மீதான எதிர்பார்ப்பு வேறு எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்ததை சாதாரண ரசிகர்களும் அறிவர். என்டிடிவி உள்ளிட்ட ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்கள் எந்திரனை மகத்தான திரைப்படம் என்று வர்ணித்து வரும் நிலையில் இப்படத்தை விமர்சனம் செய்வதென்பது சவாலான விஷயமாகும்.


WDமுதலில் எந்திரன் கதையை பார்ப்போம். வசீகரன் என்ற விஞ்ஞானி பத்து வருடங்கள் உழைத்து மனிதன் போலவே இருக்கும் ரோபோ ஒன்றை உருவாக்குகிறார். இந்த ரோபோவை ஒத்துக்கொள்ள மறுக்கிறார் வசீகரனுக்கு குருவாக இருக்கும் நபர். தனது சிஷ்யன் தன்னால் முடியாததை சாதித்துவிட்டான் என்ற கோபமே இதற்கு முக்கிய காரணம். இரண்டாவது இந்த ரோபோவுக்கு மனித உணர்வுகள் என்னவென்று தெ*ரியாது. சொன்னதை செய்யும். மனித உணர்வுகள் இதற்கு பொருட்டல்ல.

இந்த ஒரு பலவீனத்தை வைத்து வசீகரனின் மகத்தான கண்டுபிடிப்பை நிராக*ரிக்கிறார் குரு. இதனால் தனது கண்டுபிடிப்பான மனித ரோபோவை இந்திய ராணுவத்தில் பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், உயி*ரிழப்பை குறைக்க வேண்டும் என்ற வசீகரனின் கனவு நிராக*ரிக்கப்படுகிறது.

இதனால் தன்னால் கண்டுபிடிக்கப்பட்ட எந்திரத்துக்கு மனித உணர்வுகள் கிடைக்கச் செய்கிறார் வசீகரன். மனித உணர்வு கிடைக்கப் பெற்ற எந்திர மனிதன் தன்னை உருவாக்கிய வசீகரனின் காதலியையே காதலிக்கிறது. இதனை விரும்பாத வசீகரன் எந்திரனை கண்டம் துண்டமாக வெட்டி குப்பையில் எறிகிறார். இதனை அறிந்த வசீகரனின் குரு மனித எந்திரனுக்கு உதவி செய்து அவனை மீண்டும் முழுமையான எந்திரனாக்குவதுடன் அவனுக்குள் அழிக்கும் சக்தியையும் புகுத்துகிறார்.

அழிக்கும் சக்தி பெற்ற எந்திரன் வசீகரனின் காதலியை கவர்ந்து செல்ல, வசீகரன் அதன் கொட்டத்தை அடக்கி காதலியை எப்படி மீட்டுக் கொள்கிறார் என்பதே எந்திரன் படத்தின் கதை.

படத்தின் கதையை படிக்கும் போதே எந்திரனை எப்படி உருவாக்கியிருப்பார்கள், அதனை எப்படி தத்ரூபமாக உலவவிட்டிருப்பார்கள் என்று பார்க்க ஆவலாக இருக்கும். இந்த வேலையை ஹாலிவுட்டின் பிரபல நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு மட்டும் ஏறக்குறைய அறுபது கோடிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. படத்தின் ஹீரோ ர*ஜினியை தத்ரூபமாக எந்திரனாக காட்டுவது, கிளைமாக்ஸில் எந்திரன் ர*ஜினி தனது ஒவ்வொரு பார்ட்ஸையும் தனித்தனியாக கழற்றுவது போன்ற காட்சிகளை அச்சு அசலாக காட்டியிருக்கிறார்கள்.

வசீகரன் (ர*ஜினி) பத்து வருடங்கள் இந்த மனித ரோபோவை உருவாக்க கஷ்டப்பட்டதாக சொல்கிறார்கள். இதற்கு காட்சி எதுவும் வைக்கவில்லை. வசீகரனே இந்த*த் தகவலை சொல்கிறார். பத்து வருஷம் கஷ்டப்பட்டதை காட்ட இயக்குனர் தனது கற்பனையிலிருந்து செலவழித்தது வசீகரனின் ஒட்டுத் தாடியும் நீண்ட தலைமுடியும் மட்டுமே. இந்த பத்து வருட இடைவெளியில் இவர் ஐஸ்வர்யா ராயையும் காதலிக்கிறார். காதலிக்கு நேரம் செலவழிக்காததை காட்ட ஒரு காட்சியும் அதனைத் தொடர்ந்து ஒரு டூயட்டும் படத்தில் உள்ளது. ஒட்டுமொத்த படத்தைப் பார்க்கும் போது காதலிக்கு நேரம் செலவழிக்காததை காட்ட அல்ல, டூயட்டுக்காகவே இந்த காட்சி வைக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

மனித எந்திரன் (இதுவும் ர*ஜினியே) செய்யும் சாதனைகளும், அசட்டுத்தனங்களும் படத்தின் முன்பகுதியில் பிரதானமாக வருகிறது. டிவியை போடு என்று சொன்னால் டிவியை ஆன் செய்யாமல் கீழே போடுகிறது. தீயில் சிக்கியவர்களை காப்பாற்று என்ற சொன்னால் இளம் பெண் குளித்துக் கொண்டிருக்கும் போது நிர்வாணமாக காப்பாற்றி எல்லோருக்கும் முன்பாக கொண்டு வந்து நிறுத்துகிறது. எந்திரத்துக்கு மனித உணர்வுகள் இல்லை என்பதை காட்டும் இந்தக் காட்சிகள் படத்தில் அத்தனை உறுத்தாமல் பொருந்திப் போவதை பாராட்டியே ஆக வேண்டும்.


WDவசீகரன் எந்திரனுக்கு மனித உணர்வுகளை ஒரு கணிதம் போல் எழுதி காண்பிக்கும் காட்சிக்கு இரண்டு முகங்கள் உள்ளது. நகைச்சுவை உணர்வு உள்ளவர் அதனை அந்த கோணத்தில் எடுத்துக் கொள்ளலாம், சீ*ரியஸான ஒரு மனிதர் அதனை சீ*ரியஸாக எடுத்துக் கொள்ளலாம். ஆக, இப்போது எந்திரனுக்கு மனித உணர்வுகள் வந்துவிட்டது. அது வசீகரனின் காதலியை காதலிக்க*த் துவங்கிவிட்டது. கல்யாணத்தன்று அது காதலியை கடத்தியும்விட்டது. இனி கிளைமாக்ஸ்.

படத்தின் முக்கால்வாசி பட்ஜெட் இந்த கிளைமாக்ஸுக்கு செலவிடப்பட்டிருக்கும் என்பதை படத்தின் பின்னணி இசையை கேட்கும் ஒரு குருடன்கூட உணர்ந்து கொள்வான். எந்திரனின் கொட்டத்தை அடக்க வசீகரன் பல விஷயங்கள் சொல்கிறார். மியூட் செய்யப்பட்ட இந்தக் காட்சியை பார்க்கும் போது ஒருவர் பெ*ரிதாக எதிர்பார்ப்பது தவறல்ல. ஆனால் வசீகரன் சிட்டியின் மின்சார சப்ளையை கட் செய்ய*ச் சொல்வதும், எந்திரனைப் போலவே இருக்கும் நூற்றுக் கணக்கான எந்திரன்கள் கார் பேட்ட*ரியிலிருந்து **ரீசார்**ஜ் செய்துக் கொள்வதும் குழந்தைகளை குதூகலிக்கச் செய்யும் சமாச்சாரங்கள். இறுதியில் எந்திரன்கள் பந்தாகவும், பாம்பாகவும், ராட்சஸ மனிதனாகவும் மாறி அட்டகாசம் செய்யும் காட்சிகள் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட பல படங்களின் சாயல்.

ர*ஜினி என்ற மாஸ் பிம்பம் இல்லாமலிருந்தால் எந்திரனை பற்றி நினைப்பதே ஒரு தயா*ரிப்பாளருக்கு வாழ்நாள் துர்சொப்பனமாக இருந்திருக்கும். இதிலிருந்தே படத்தின் திரைக்கதை தரத்தை ஒருவர் தெ*ரிந்து கொள்ளலாம். ரஹ்மானின் இசையும், பின்னணி இசையும் பாஸ் மார்க்கை*த் தாண்டவில்லை. இதனை பு*ரிந்து கொள்ள முடியாதவர்களும், பு*ரிந்து கொள்ள மறுப்பவர்களும் அவ*ரின் ஸ்லம்டாக் மில்லியன*ரின் பின்னணி இசையை மீண்டும் ஒருமுறை கேட்கவும் (கவனிக்க, பாடல்களை அல்ல, பின்னணி இசையை).

மிகப் பெ*ரிய சாதனை செய்யும் விஞ்ஞானியின் இரு அசட்டு அசிஸ்டெண்டுகள் (சந்தானம், கருணாஸ்), நம்ம கூட்டத்துல ஒரு கறுப்பு ஆடு என்று எந்திரன் கர்*ஜிப்பது (அப்படியே அசோகன் பட எஃபெக்ட்), வசீகரனின் குருவுக்கு சர்வதேச தீவிரவாதிகளுடன் தொடர்பு.... திரைக்கதையின் அத்தனை நூலிழையும் நொந்து நூலானவை.

ர*ஜினியின் மாஸை மட்டும் தவிர்த்தால் எந்திரன் - வெறும் ஆட்டுக்கல்

நன்றி வெப்துனியா தமிழ். .இந்த படத்தை நானும் பார்த்தன் இதை நான் வழிமொழிகிறேன் .

aren
07-10-2010, 07:45 AM
உங்களுடைய சொந்த விமர்சனமோ என்று படிக்க ஆவலுடன் வந்தேன்.

விகடன்
07-10-2010, 08:14 AM
டேய் நீ இன்னமும் தூங்கலயா???:eek:

நான் இங்க வேலைக்கு கிளம்பப்போறேன்..

நகருலா சென்றுவிட்டு அரண்மனை திரும்பியபோது நேரம் 11:50. அப்படியே இணையத்திலும் ஒருதடவை உலாவிவிட்டு போகலாம் என்று வந்தபோது பதித்ததடாப்பா. "நளைக்கு இந்த வாரத்திற்கான இறுதி வேலை நாள்த்தானே" என்ற எண்ணந்தான் ;)