PDA

View Full Version : ஆங்கில வழியில் தமிழ் கற்க உதவுங்கள்..



பூமகள்
04-10-2010, 02:18 PM
அன்பு மன்ற உறவுகளே..

ஆங்கில வழியில் தமிழ் கற்பது பற்றிய திரி கண்டதும் தமிழ் கற்க ஆங்கில வழியில் ஏதேனும் வழியுண்டா என்று தேடுவோர் நினைவு வந்தது..

அவர்களுக்கு உதவவே இத்திரி..

ஆங்கில வழியில் தமிழை எழுத, படிக்க, பேச கற்க வழி இருந்தால் உதவுங்களேன்.

குறிப்பு: எனக்காக இல்லை மக்களே.. பின்னே எனக்கு தமிழ் கொஞ்சமே கொஞ்சமேனும் தெரியுமில்ல.. :rolleyes::)

பாரதி
06-10-2010, 05:24 PM
இணையத்தில் ஆங்கிலம் மூலம் தமிழ் கற்க ஏராளமான இணையத்தளங்கள் இருப்பதாக கூகிள் கூறுகிறது. இருப்பினும் பல தளங்களும் பலனளிக்கக்கூடியதாக தெரியவில்லை.

ஓரளவுக்கு நல்ல தளமாக எனக்குத் தெரிவது தமிழ் விர்ச்சுவல் யுனிவர்சிட்டி.

இத்தளத்தில் எழுத்துக்கள் மூலம் தமிழைப்படிக்க இயலும் என்றாலும் கூட இங்கேயே ஒளி/ஒலிப்படமாக ஆங்கில மொழி வாயிலாக தமிழ் கற்றுத்தருவது நன்றாக இருக்கிறது. இவ்வகை முயற்சி புதிதாக கற்பவர்களுக்கு ஓரளவுக்கு எளிதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

http://www.tamilvu.org/coresite/html/cwhomepg.htm தளத்திற்கு சென்ற பின்னர் Virtual class room என்ற தொடுப்பை அழுத்தினால் வீடியோவில் தமிழ் கற்றுத்தரும் பாடங்கள் வரிசைக்கிரமமாக தரப்பட்டிருக்கின்றன.

வழக்குத்தமிழ் (கலோக்கியல் தமிழ்) என்று ஆங்கிலத்தில் இருந்து தமிழ் கற்பிக்கும் புத்தகம் கீழ்க்கண்ட சுட்டியில் கிடைக்கிறது. சுமார் 2.98 எம்.பி அளவு கொண்ட பிடிஎஃப் கோப்பாக கிடைக்கிறது.

http://www.filefactory.com/file/8d64d7/n/0415187885_zip

ஓரளவுக்கு நல்ல தளங்களாக தோன்றும் சிலவற்றின் சுட்டிகள்:

http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/

http://www.duke.edu/~skc9/tamilclass/

http://www.unc.edu/~echeran/paadanool/ இந்த தளத்தை சரியாகக் காண வேண்டுமெனில் boopalam.ttf, mtcorsva.ttf, spacetoa.ttf, pristina.ttf ஆகிய எழுத்துருக்களை நிறுவ வேண்டியதிருக்கும்.

யூடியுபிலும் சில ஒளி/ஒலிப்படங்கள் ஆங்கிலம் மூலம் தமிழ் கற்றுக்கொள்ளும் வகையில் கிடைக்கப்பெறுகின்றன.

பூமகள்
09-10-2010, 06:31 AM
சுட்டிகள் சுட்டியமைக்கு நன்றி.

aren
09-10-2010, 03:08 PM
எனக்கு கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசைதான் ஆனால் அதற்கு ஆங்கிலம் முதலில் தெரிந்திருக்கவேண்டுமே, அதுதான் கவலை எனக்கு.

அனுராகவன்
09-10-2010, 07:21 PM
எனக்கு கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசைதான் ஆனால் அதற்கு ஆங்கிலம் முதலில் தெரிந்திருக்கவேண்டுமே, அதுதான் கவலை எனக்கு.
எனக்கும்தான் நாமும் ஆங்கிலம் கற்க வழிதெரிந்தால் நல்ல இருக்கும்..
நமக்கு ஆங்கிலம் சுட்டாலும் வராதுப்பா....

பூமகள்
10-10-2010, 02:10 PM
எனக்கு கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசைதான் ஆனால் அதற்கு ஆங்கிலம் முதலில் தெரிந்திருக்கவேண்டுமே, அதுதான் கவலை எனக்கு.
அப்போ உங்களுக்கு ஒரு புதிய திரி கீழ்க்கண்ட மாதிரி ஆரம்பித்திட வேண்டியது தான்..

"மேண்டரின்/மலாய் வழியில் தமிழ் கற்க உதவுங்கள்" என்று..... :rolleyes::D:D

ஏதாவது சீன/மலேசிய பெண் உதவாமலா போயிடுவாங்க?? :rolleyes::icon_b::icon_b:

kathir_tamil
12-11-2010, 04:44 AM
மிக பயனுள்ள இணையத்தளங்கள்...

srivinoth
21-12-2010, 04:50 PM
இவ்வாறான இணையதளங்கள் தமிழைக்காப்பதில் பங்களிப்புச்செய்வது மிகநல்ல விடயம்.