PDA

View Full Version : உண்மையான துறவு.M.Jagadeesan
04-10-2010, 10:06 AM
முற்றும் துறந்த நிலையே "துறவு" எனப்படும்.உடைமைகளை மட்டுமல்லாது தன் உடலின் மீதுள்ள பற்றுகளையும் துறந்தவன்தான் உண்மையான துறவி. இதையே வள்ளுவர்,

மற்றும் தொடர்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.
என்றார்.பிறப்பு வேண்டாம் என்று எண்ணும் துறவிகளுக்கு அவர்களுடைய உடம்பே சுமை. இந்நிலையில் இவ்வுலகத் தொடர்பாடு எதற்காக? என்பது இக்குறளின் கருத்து.

"காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே"-என்று செல்வத்தின் நிலையாமையை உணர்ந்த பட்டினத்தார், துறவறம் மேற்கொண்டார். ஊர் ஊராக அலைந்தார்,கிடைத்ததை உண்டு நினைத்த இடத்தில் படுத்து உறங்கினார்.ஆடையின்றி இடையில் ஒரு கோமணம் மட்டும் அணிந்திருந்தார்.
ஒருசமயம் களைப்பு மேலிட, ஒரு வயல்வெளியில் ,கட்டாந்தரையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார்.தன்னுடைய கையை மடித்துத் தலைக்குக் கீழே தலையணையாக வைத்துக் கொண்டிருந்தார்.
அவ்வழியே சென்ற இரு பெண்கள் அவரைப் பார்த்தனர்.அவர்களில் ஒருத்தி "ஐயோ பாவம், கல்லிலும், மண்ணிலும் படுத்து உறங்கும் இவர்தான் உண்மையான துறவி" என்றாள். அதற்கு மற்றவள், "உண்மையான துறவிக்கு சுகம் என்ன வேண்டிக்கிடக்கு? கையைத் தலையணையாக வைத்துக் கொண்டு உறங்கலாமா?"-என்று கேட்டாள்.
இந்த உரையாடலைக் கேட்ட பட்டினத்தாருக்கு மனதில் "சுரீர்" என்று தைத்தது.உடனே கையை எடுத்துவிட்டுத் தலையைத் தரையில் வைத்து உறங்கிக்கொண்டிருந்தார்.சிறிது நேரம் கழித்து மீண்டும் அப்பெண்கள் அவ்வழியே வந்தனர்.
"இப்பொழுது என்ன சொல்கிறாய்? தலையணை கூட இல்லாமல் உறங்கும் இவர் உண்மையான துறவிதானே?'-என்று கேட்டாள். நாம் பேசியதை ஒட்டுக்கேட்ட பிறகுதானே தலையணை இல்லாமல் உறங்குகிறார்? துறவிக்கு ஒட்டுக்கேட்கும் பழக்கம் எதற்கு?'-என்று கேட்டாள்
துறவறம் எவ்வளவு கடுமையானது என்பதைப் பட்டினத்தார் தெரிந்துகொண்டார்.

அன்புரசிகன்
20-10-2010, 04:56 AM
சரியான கஷ்டமான விடையம் போல தான்... பகிர்வுக்கு நன்றிகள்.

ஆதி
20-10-2010, 05:14 AM
உண்மையான துறவின் பொருள் உணர்ந்து கொள்ளுவதில் உள்ள தடுமாற்றத்தை இந்த கதை சொல்கிறது..

இன்னும் சொல்லனும் னா மனமிலா துறவிக்கு மற்றவர் மனம் பற்றி கவலை ஏன் ?

துறவு என்பது மற்றவர்கள் சொல்படியோ ? மற்றவர் விரும்பியபடியோ நடக்க இயலாது, துறவுக்கு கட்டுபாடுகள் தேவையில்லை, கட்டறுத்தலே தேவை..

தூங்கி கொண்டிருந்தது பட்டினத்தார் அல்லவே அவரின் உடல் தானே ?

M.Jagadeesan
20-10-2010, 05:31 AM
சரியான கஷ்டமான விடையம் போல தான்... பகிர்வுக்கு நன்றிகள்.

நன்றி.

M.Jagadeesan
20-10-2010, 05:33 AM
உண்மையான துறவின் பொருள் உணர்ந்து கொள்ளுவதில் உள்ள தடுமாற்றத்தை இந்த கதை சொல்கிறது..

இன்னும் சொல்லனும் னா மனமிலா துறவிக்கு மற்றவர் மனம் பற்றி கவலை ஏன் ?

துறவு என்பது மற்றவர்கள் சொல்படியோ ? மற்றவர் விரும்பியபடியோ நடக்க இயலாது, துறவுக்கு கட்டுபாடுகள் தேவையில்லை, கட்டறுத்தலே தேவை..

தூங்கி கொண்டிருந்தது பட்டினத்தார் அல்லவே அவரின் உடல் தானே ?

நன்றி.

கீதம்
07-11-2010, 09:12 PM
அடுத்தவர் பற்றிய அவதானிப்பு இருக்கும்வரை, துறவறம் உண்மையாய் இன்னும் ஏற்கப்படவில்லை என்பது புரிகிறது. எல்லாம் துறந்தும் எதையும் துறவாத நிலை.

பகிர்வுக்கு நன்றி ஜெகதீசன் ஐயா.

ரங்கராஜன்
08-11-2010, 01:54 PM
ஜெகதீசன்

உங்களின் பகிர்வு நன்றாக இருக்கிறது, சுவாரஸ்யமாக இருக்கிறது. தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள் இதனை சிறுகதையான வடிவமாக என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை, இந்த பதிப்பை படித்ததில் பிடித்தது என்ற திரியிலோ, அல்லது, நிஜ சம்பவங்கள் திரியிலோ பதித்து இருக்கலாமே...

நீங்கள் சொல்லவந்த விஷயத்தையே கதாபாத்திரங்களை சேர்த்து சிறுகதையாக பதித்து இருந்தால், நல்ல கருத்தை முன்வைத்த சிறந்த கதையாக அது விளங்கி இருக்கும்.

வானவர்கோன்
08-11-2010, 04:32 PM
உண்மை தான் துறவறம் என்பது கடுமையானதும் மிகவும் கொடுமையானதும் ஆகும்!