PDA

View Full Version : எடிசனின் அறியாமை

M.Jagadeesan
03-10-2010, 06:09 PM
மெத்தப்படித்த மேதைகள் கூட சிலசமயங்களில் அறிவிலிகளாக நடந்துகொள்வதுண்டு. சாதாரண மக்களுக்குப் புரிகின்ற உண்மைகள் கூட அவர்களுக்குப் புரிவதில்லை.இதைத்தான் வள்ளுவரும்.

அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.

என்று கூறுகின்றார்." கற்றற்கு அறிய நூல்களைக் கற்றவர்களிடம் கூட சிலசமயங்களில் அறியாமை தோன்றும்" --என்பது இக்குறளின் பொருள்.

அமெரிக்காவில் பிறந்த தாமஸ் ஆல்வா எடிசன் மிகச்சிறந்த அறிவியல் அறிஞர் என்பதை நாம் அறிவோம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை கண்டறிந்தவர்.அவர் ஒருசமயம் பூனை ஒன்றை வளர்த்து வந்தார்.அது அவரிடம் செல்லமாக விளையாடும். எடிசன் ஆராய்ச்சியில் ஈடுபடும்பொழுது அறைக்கதவை மூடிவிடுவது வழக்கம்.அப்பொழுது பூனை வந்து போவதற்காக அறைக்கதவில் வட்டமாகத் துளையிட்டு வைத்தார். அந்த ஓட்டை வழியாக பூனை வந்து அவரிடம் சிறிது நேரம் விளையாடிவிட்டுப் பிறகு அதே ஓட்டை வழியாக வெளியே சென்றுவிடும். இது வழக்கமாக நடைபெற்று வந்தது.

சிலநாட்கள் கழித்து அப்பூனை இரண்டு குட்டிகளை ஈன்றது.அக்குட்டிகளும் தன்னுடைய அறைக்கு வந்து போவதற்காக கதவில் பெரிய ஓட்டைக்கு அருகில் இரண்டு சிறிய ஓட்டைகளைச் செய்து வைத்தார்.

ஒருநாள் எடிசனைப் பார்ப்பதற்காக அவர் நண்பர் ஒருவர் வந்தார். கதவிலே இருந்த ஓட்டைகளைப் பார்த்தார். அதன் காரணத்தைக் கேட்டார். அதற்கு எடிசன் "நான் ஒரு பூனையை வளர்த்து வருகிறேன். அது தற்சமயம் இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது.நான் ஆராய்ச்சியில் ஈடுபடும்பொழுது கதவை சாத்திவிடுவது வழக்கம். பூனைகள் மட்டும் வந்து போவதற்காக ஓட்டைகளைச் செய்துள்ளேன்" என்று சொன்னார். அதற்கு அவருடைய நண்பர் "எதற்காக மூன்று ஓட்டைகள்? " என்று கேட்டார்.அதற்கு எடிசன் "பெரிய பூனை வந்து போவதற்காக பெரிய ஓட்டை. குட்டிகள் வந்து போவதற்காக இரண்டு சிறிய ஓட்டைகள்." என்று சொன்னார். அதற்கு அவருடைய நண்பர் "பெரிய ஓட்டை வழியாகவே குட்டிகளும் வந்து போகலாமே'-என்று சொன்னார். சிறிது நேரம் பேசாமலிருந்த எடிசன் தன்னுடைய அறியாமையை எண்ணி வெட்கமடைந்தார்.

விகடன்
04-10-2010, 05:57 AM
சகோதரர்கள் இருக்கும் வீட்டில் எல்லா விடயத்திலும் தமக்கென பிரத்தியேகமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது வழமையே. அதே போல இந்த பூனைக்குட்டிகளும் தமக்கென பிரத்தியேகமான பாதையை எதிர்பார்க்கும் என நினைத்து எடிசன் அவ்வாறு செய்திருக்கலாம். நண்பனின் அறியாமையை நினைத்து வெக்கி தலைகுனிந்திருக்கலாம் (ஹா...ஹா...ஹா...).

பூனையோடு விளையாடினால் விஞ்ஞானியாக வந்திருக்கமுடியுமா?
இதனால்த்தான் என்னமோ எஙப்பா என்னை பூனையோடெல்லாம் விளையாட விடுவதில்லை... (உங்கள் நலன் கருதி!)

நாஞ்சில் த.க.ஜெய்
21-12-2010, 08:49 AM
மிகவும் சுவாரஸ்யமான பதிவு இது வரை நான் அறிந்திராதது பதிவுக்கு நன்றி நண்பரே
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

Ravee
29-04-2011, 07:35 AM
அது சரி பெரிய ஓட்டைக்கு பக்கத்தில் சின்ன ஓட்டை போட்டதுகூட சரி அதுவும் ரெண்டு ஓட்டை போட்டதுதான் கொஞ்சம் ஓவர் .... கதை சொல்லுறதுன்னு வந்துட்டா எல்லோரும் இப்படித்தான் .... ம்ம்ம் எடிசனின் ஆவி உங்கள் எல்லோரையும் மன்னிக்கட்டும் .... :lachen001: :lachen001: :lachen001:

M.Jagadeesan
29-04-2011, 08:39 AM
பழைய பதிவைத் தேடி எடுத்துத் தூசி தட்டி பின்னூட்டமிட்ட நண்பர்கள் விகடன், ஜெய், இரவி ஆகியோருக்கு நன்றி!

Nivas.T
29-04-2011, 08:40 AM
:eek::eek::eek:

இந்தக்கதையை நான் ஐன்ஸ்டீன்:sprachlos020:

என்று கேள்வி படிருக்கிறேன் :confused:
பவம் எடிசனுமா ? :confused:

:D:D

சூரியன்
29-04-2011, 10:39 AM
சகோதரர்கள் இருக்கும் வீட்டில் எல்லா விடயத்திலும் தமக்கென பிரத்தியேகமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது வழமையே. அதே போல இந்த பூனைக்குட்டிகளும் தமக்கென பிரத்தியேகமான பாதையை எதிர்பார்க்கும் என நினைத்து எடிசன் அவ்வாறு செய்திருக்கலாம். நண்பனின் அறியாமையை நினைத்து வெக்கி தலைகுனிந்திருக்கலாம் (ஹா...ஹா...ஹா...).

பூனையோடு விளையாடினால் விஞ்ஞானியாக வந்திருக்கமுடியுமா?
இதனால்த்தான் என்னமோ எஙப்பா என்னை பூனையோடெல்லாம் விளையாட விடுவதில்லை... (உங்கள் நலன் கருதி!)

நல்ல வேளை நாங்க தப்பிச்சோம்..

aathma
29-04-2011, 10:58 AM
இந்தக்கதையை நான் ஐன்ஸ்டீன்

என்று கேள்வி படிருக்கிறேன்
பவம் எடிசனுமா ?

அப்போ ஐன்ஸ்டீனா ? எடிசனா ? யார் ன்னு சரியா சொல்லுங்கப்பா

Ravee
29-04-2011, 11:42 AM
அப்போ ஐன்ஸ்டீனா ? எடிசனா ? யார் ன்னு சரியா சொல்லுங்கப்பா

ரெண்டு பேருமே இல்லை நம்ப தாமரை அண்ணாதான் .... இவரை வம்புக்கு இழுத்து ரொம்ப நாள் ஆகுதே ..... :lachen001: :lachen001: :lachen001:

Nivas.T
29-04-2011, 12:02 PM
ரெண்டு பேருமே இல்லை நம்ப தாமரை அண்ணாதான் .... இவரை வம்புக்கு இழுத்து ரொம்ப நாள் ஆகுதே ..... :lachen001: :lachen001: :lachen001:

:eek:

இதுக்கு பேருதான் சொந்த செலவுல சூனியம் வச்சுகிறதுன்னு சொல்லுவங்களோ :confused::icon_rollout:

:D:D:lachen001::lachen001:

Ravee
29-04-2011, 12:33 PM
:eek:

இதுக்கு பேருதான் சொந்த செலவுல சூனியம் வச்சுகிறதுன்னு சொல்லுவங்களோ :confused::icon_rollout:

:D:D:lachen001::lachen001:

ரொம்ப அனுபவப்பட்டு இருப்பீங்க போல இருக்கு .............. :lachen001:
அடிபட்டாலும் ஆடிக்காரில் அடி படனும் பாஸ் .... ஆஸ்பத்திரி செலவை அவங்களே பார்த்துபாங்க ........அம்பாசிடரில் அடிபட்டா டெட்டாலும் டிஞ்சரும் தான் . :icon_b:

Nivas.T
29-04-2011, 01:16 PM

அவர்தான் எப்போ எந்த அவதாரம் எடுப்பார்னு யாருக்கும் தெரியாதே

பாலிசி நல்லாத்தான் இருக்கு ஆனா வலிய நெனச்சாத்தான் கொஞ்ச இல்ல ரொம்பவே பயமா இருக்கும்

ஏன்னா? அவரு கடிச்சா அப்டி வலிக்கும்

aathma
29-04-2011, 02:25 PM
அவரு கடிச்சா அப்டி வலிக்கும்

அனுபவம் பேசுகிறது :lachen001:

அன்புரசிகன்
30-04-2011, 03:27 AM
இதனால்த்தான் என்னமோ எஙப்பா என்னை பூனையோடெல்லாம் விளையாட விடுவதில்லை... (உங்கள் நலன் கருதி!)
ஒரு சின்னமாற்றம் வரவேணும். அது உங்கள் நலன் கருதி என்றல்ல. அந்த அப்பிராணியின் நலன் கருதி.

Nivas.T
30-04-2011, 05:24 AM
ஒரு சின்னமாற்றம் வரவேணும். அது உங்கள் நலன் கருதி என்றல்ல. அந்த அப்பிராணியின் நலன் கருதி.

:lachen001::lachen001: