PDA

View Full Version : உணர்வின் உறவு..!!பூமகள்
03-10-2010, 05:39 PM
உணர்வுகளால் சுற்றப்பட்ட
பந்தொந்தொன்று கொண்டு
நாம் இருவரும் விளையாட
எத்தனித்தோம்..

உருண்டு திரண்டு
இருந்த அதுவோ
அழகான தன்
விசையால் நம்மை
பிணைத்துக் கொண்டே இருந்தது..

இருவரிடமும் மாறிமாறி
இடம் பெயர்ந்து ஒரு நாள்
ஓய்ந்து கொஞ்சம்
துயில் கொண்டது..

வேடிக்கைப் பார்க்கும்
வேண்டிய கூட்டம்
தருணம் பார்த்து
அதைச் சுட்டுச் சென்றது..

உணர்வுகள் தொலைத்த நம்மில்
உறவுகளின் தூபம்
தூவப்பட்டது..

வார்த்தைகள் வலிக்க
வரையப்பட்டது உறவுகளுக்காக
ஓர் அக்னியுத்தம்..

உடைந்து அழும் குரலொன்று
இடையிடை நம்மில் வந்தமர்ந்தது..
எங்கென ஆராய
ஓர் மூலையில் உறவுகளால்
கிழிக்கப்பட்ட நம் உணர்வுப் பந்து
செயலற்றுக் கிடந்தது..!!

கீதம்
04-10-2010, 02:57 AM
தினம் தினம் பின்னப்படும்
சிலந்திவலைபோன்று
நாமும் பின்னுவோம்
நமது மென்னுணர்வுகொண்டு
நித்தமொரு வன்பந்து.

பாஞ்சாலி துகிலினும்
பன்மடங்கிருக்கட்டும் அது!
அழிப்போரும், பறிப்போரும்
அசந்துபோம்வரை
ஆக்கிக்கொண்டிருப்போம்
அறுபடா இழைகளாலொரு
அற்புத உணர்வுப்பந்து!

மிகுந்த பாராட்டுகள், பூமகள்.

சூறாவளி
04-10-2010, 04:06 AM
பூமகள் அக்கா நலம்தானா...? இம்மன்றத்தில் நான் இப்போதும் இளம்புயல்தான்.. நீங்கலெல்லாம் மன்றத்தின் சுடர்.. அப்போ எப்பிடி நான் அண்ணணாவது..!!;)

வீதியில் இருக்கும் கற்கள் என் கையில் இருக்கும் வரை கற்களே... அதே கற்கள் உங்களை போல் கவிஞர்கள் கையில் கிடைக்கும் போது அது சிற்பமாகிவிடுகிறது..

இக்கவிதையில், அதே தான்... களிப்பாட்டமாகிய விளையாட்டு பொருளுக்கு கூட உணர்வுகள் கொடுத்து உயிர் கொடுத்து சித்தரித்த விதம் அருமை..

இக்கவியை சுவாசிக்கையில் என்னுள் பழைய அந்த கூட்டுகாரர்களோடு கூட்டுக்காரிகளொடு கொட்டமடித்த பழைய நினைவுகள் பசுமை படுத்தி விட்டிர்கள்..

இன்னொன்று.. இக்கவியை வேறு பார்வையில் சிந்தித்தேன்...


உணர்வுகளால் சுற்றப்பட்ட
பந்தொந்தொன்று கொண்டு
நாம் இருவரும் விளையாட
எத்தனித்தோம்

இக்காலத்தில் சகஜமாகிப்போன,
வேறு பிரிந்த ஒரு தம்பதியரின் - ஒரே மகளை,
இங்கு ஒரு நாள் வாழ்,
அங்கு ஒரு நாள் வாழ் என கூறி
உணர்வுகளால் விளையாட எத்தணித்துள்ளார்களோ!!!


உருண்டு திரண்டு
இருந்த அதுவோ
அழகான தன்
விசையால் நம்மை
பிணைத்துக் கொண்டே இருந்தது..


பாசம் நேசம் என்ற உணர்வால்
அவள் அவர்களை இணைத்துக்கொண்டே இருக்கிறாள்..


இருவரிடமும் மாறிமாறி
இடம் பெயர்ந்து ஒரு நாள்
ஓய்ந்து கொஞ்சம்
துயில் கொண்டது..

அங்கு இங்கு என மாறி மாறி
தனி தனியாய் கிடைக்கும் பாச
பலுவினால் ஒய்ந்து இளைப்பாறுகிறாள்..


வேடிக்கைப் பார்க்கும்
வேண்டிய கூட்டம்
தருணம் பார்த்து
அதைச் சுட்டுச் சென்றது..

உணர்ச்சிகளின் வயதில் புதிய
உணர்வுகளின் ஆர்வத்தில்
உள்ளம் கனிந்து காதலில் விழுந்து
காதலன் அவளை சுட்டுச் செல்கிறான்.. அவர்களிடமிருந்து..


உணர்வுகள் தொலைத்த நம்மில்
உறவுகளின் தூபம்
தூவப்பட்டது

பாலமாய் இருந்த மகளின் பாசம் போனதும்
நேசத்தின் துக்கம் என்னெவென்று அவர்கள் மேல் தூவப்பட்டது..


வார்த்தைகள் வலிக்க
வரையப்பட்டது உறவுகளுக்காக
ஓர் அக்னியுத்தம்..

தாம்பத்திய வாழ்வின் ரகசியமே...
வலிகள் வரும் போதும்
துக்கம் வரும் போதும்
இயலாமை வரும் போதும்தான் - அந்த ரகசியம்
பிரகாசமாய் அறியவரும்..

ம்ம்ம்ம்... உங்க கவிதையில் ஒரே அர்த்தம் மட்டும் பார்க்காமல் அதில் இன்னும் எதாவது இருக்கா என யோசிக்க வைத்து விடுகிறிர்கள்..

எனிவே பாராட்டுக்கள்... மீண்டும் அடுத்த கவியில் சந்திப்போம்.. பூவு அக்கா...

பூமகள்
04-10-2010, 04:29 AM
@கீதம்,


பாஞ்சாலி துகிலினும்
பன்மடங்கிருக்கட்டும் அது!
அழிப்போரும், பறிப்போரும்
அசந்துபோம்வரை
ஆக்கிக்கொண்டிருப்போம்
அறுபடா இழைகளாலொரு
அற்புத உணர்வுப்பந்து!

அருமை அருமை... கவிப்பொருள் கொணர்ந்த அர்த்தம் பற்றி ஆறுதல் கவி வரிகள்.. கலக்கல்ஸ் அக்கா.

மிகுந்த நன்றிகள். :)

@சூறாவளி,

நலமா அண்ணா? நான் நலமே. பதிவுகளின் எண்ணிக்கை கொண்டோ கவித்திறன் கொண்டோ அக்கா ஆகிவிட முடியாதே அண்ணா... :icon_ush:

அனைத்தையும் புரிந்து புதுப்புது அர்த்தங்கள் பயிற்றுவிக்கும் உங்களைப் போன்ற சான்றோர் மத்தியில் நான் என்றும் தங்கையே. :)

--

கவிதைக்கு வருவோம்.. பந்தாட்ட நினைவுகளில் உங்களில் வந்தாடச் செய்தது கண்டு மகிழ்கிறேன்.

உண்மையில் நான் எழுதியது ஓர் கோணம்.. நீங்கள் புதுக் கோணத்தில் சிந்தித்திருக்கிறீர்கள்.. மிகுந்த மகிழ்ச்சி மற்றும் வியப்பு மேலிடுகிறது. அதன் அர்த்தம் அப்படியே பற்றிய கீதம் அக்கா.. நீங்கள் மாறுபட்டு சிந்தித்து மற்றொரு அர்த்தத்தோடு வந்து நிற்கிறீர்கள்... அருமை சூறாவளி அண்ணா..

நான் கவிதை எனும் பெயரில் முயன்று கொண்டிருக்கிறேன்.. அதற்குள் இப்படியான பாராட்டுகள் என்னைக் கூசச் செய்கின்றன அண்ணா..:icon_ush:

விமர்சன ஊக்கத்துக்கு மிகுந்த நன்றிகள் அண்ணா. :)

ஆதவா
04-10-2010, 03:06 PM
உணர்வுப் பந்து, களவாடியபின் உணர்வற்ற மனிதர்கள், அதனால் யுத்தம்
கிழிந்த உணர்வு...
என்று நன்றாகப் பயணிக்கிறது பூமகள்!

அழும் குரலொன்று என்ற ஒற்றை வரியை மையமாக்கி பல அர்த்தங்கள் பொருத்திக் கொள்ளலாம்!! சமீபத்தில் உங்கள் ”கிள்ளை” கவிதை படித்ததாலோ என்னவோ, அந்த குரல் எடுத்த எடுப்பிலேயே குழந்தையென்று சொல்லிவிடுகிறது. பின்னர் அது ”யோசிக்கும் அறிவு” என்று என் அறிவு யோசிக்கிறது.. தட்டச்சும் பொழுது ”கோபம்” என்றது.
பதிவிடுகையில் “அறியாமை:” என்று அழுதது!!! இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!! :icon_b:

உணர்வுகளைக் கழற்றாதவரை எந்த பிரச்சனையுமில்லை... அதே உணர்வுகள் ஓவர்ரைட் ஆகவும் கூடாது!! :eek:

இனிமே பந்துக்குள்ளல்லாம் யாரும் உணர்வைக் கழற்றி வைக்காதீங்க.... சரியா? :D

சூறாவளி.... உங்கள் பார்வையும் நன்று!!:icon_b:

சூறாவளி
04-10-2010, 03:40 PM
அக்கா.

அண்ணா...

ம்ஹும்.. எல்லாரையும் அக்கா அண்ணான்னு சொல்லி சொல்லி தங்கச்சியாவே இருங்க பூவு...;)

உங்ககிட்டயெல்லாம் பேசி ஜெயிக்கமுடியாதுப்பா... :icon_b:

சிவா.ஜி
04-10-2010, 04:04 PM
இரண்டு மென்னுணர்வுகளின் நல்லுலகம், நன்றாய் இருப்பதைப் பார்க்கப்பிடிக்காதக் கூட்டத்தை....உறவுகள் என சொல்லிக்கொள்ள வேண்டியக் கட்டாயம்.

ஆதவா சொன்னதைப்போல உணர்வுகளைப் பந்தாக்காமல்..(சில சமயம் உருவாக்குபவர்களே அதை விளையாடிக் கிழித்துவிடும் வாய்ப்பிருக்கிறது)...விதையாக்கி உள்ளத்துக்குள் ஒளித்து வைத்தால்....வெட்டியெறிய வெளியாட்களுக்கு வழியில்லை.

அழகான கவிதை, வாழ்த்துக்கள்ம்மா பூ.

அமரன்
08-10-2010, 10:13 PM
இலக்கை நோக்கி அடிக்கா விட்டால் இப்படித்தான் விபரீதம் நிகழும்.

.................................................

பந்து கிழிந்ததும்
ஆட்டம் கைவிடப்பட்டதும்
ஆரவாரக் கூட்டம்
தேடப்படுவோர் பட்டியலில் சேர்ந்ததும் தெரியாமல்
பந்துக்காக் காத்திருக்கின்றன
வலை கட்டிய கம்பங்கள்..

கிழிந்த கட்டுப் பந்தும்
நசிபட்ட புற்களும் மிச்சமாகக் கிடைக்கின்றன
அடையாளமாக...!

வேண்டவே வேண்டாம் இந்நிலை.

//////////////////////////////////////////////////////

பூவின் பரிதவிப்பும்
கீதத்தின் பாச அணைப்பும்
பூங்கீதம்..

பிச்சி
09-10-2010, 02:29 PM
உங்களது பழைய கவிதைகள் போல் இல்லாமல் வித்தியாசமாக புதுமையாக உள்ளது பூ அக்கா.

நட்புடன்
பிச்சி