PDA

View Full Version : பழம் பெறும் மன்னன்



M.Jagadeesan
03-10-2010, 12:11 PM
முன்னொரு காலத்தில் மன்னன் ஒருவன் இருந்தான்.அவன் பழங்கள் சாப்பிடுவதில் பெருவிருப்பம் கொண்டவன்.அவன் வினோத அறிவிப்பு ஒன்றைச் செய்தான்.

இதுவரையில் தான் கண்டிராத, சாப்பிடாத பழத்தைக் கொண்டு வருபவர்களுக்குத் தன்நாட்டில் பாதியைக் கொடுப்பதாக அறிவிப்புச் செய்தான். அவர்கள் கொண்டுவரும் பழம் ஏற்கனவே தான் பார்த்த பழமாக இருந்தால், அப்பழத்தை அவர்கள் வாயிலே திணித்து ஐந்து கசையடி கொடுக்கப்படும் என்றும் அறிவித்தான்.

மறுநாள் அரண்மனை வாசலில் பெருங்கூட்டம் கூடிவிட்டது. ஒவ்வொருவரும் கையில் ஒரு பழத்தை வைத்திருந்தார்கள். மன்னன் ஒவ்வொருவராக உள்ளே அனுப்பும்படிக் காவலாளிக்கு ஆணையிட்டான்.

முதலில் வந்தவன் கையிலே ஒரு திராட்சைப் பழம் இருந்தது. அவன் மன்னனைப் பார்த்து "மன்னா, இப்பழம் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். இதன் பெயர் திராட்சை" என்று சொன்னான். அதைக் கேட்ட மன்னனுக்குக் கோபம் வந்து விட்டது.'திராட்சையைக் கூடப் பார்த்திராத மடையனா நான்? இந்த முட்டாளுக்குத் தண்டனையை நிறைவேற்றுங்கள்' என்று ஆணையிட்டான். உடனே பணியாட்கள் அப்பழத்தை அவன் வாயிலே திணித்து, ஐந்து கசையடி கொடுத்துத் தண்டனையை நிறைவேற்றினார்கள்.

இரண்டாவதாக வந்தவன் கையில் வாழைப்பழம் இருந்தது.அதைக் கண்ட மன்னன் தண்டனையை நிறைவேற்றுமாறு ஆணையிட்டான்.உடனே வாழைப்பழத்தை அவன் வாயிலே திணித்து ஐந்து கசையடிக் கொடுத்து அனுப்பிவைத்தனர்.

மூன்றாவதாக ஒருவன் வந்தான். அவன் கையில் மாம்பழம் இருந்தது.அதைக்கண்ட மன்னன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான். " இந்த மாங்கா மடையனுக்கு உடனே தண்டனையை நிறைவேற்றுங்கள்" என்று ஆணையிட்டான்.உடனே பணியாட்கள் மாம்பழத்தை அவன் வாயிலே திணித்தனர். மாம்பழம் பெரியதாக இருந்த காரணத்தினால் அவன் வாய் கிழிந்து இரத்தம் கொட்டியது.மறுபுறம் கசையடி விழுந்து கொண்டிருந்தது.அந்த நிலையிலும் அவன் வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தான்.அதைக்கண்டு அனைவரும் வியப்படைந்தனர். உடனே மன்னன் அவனை நோக்கி "இந்த வலியிலும், வேதனையிலும் உன்னால் எப்படி சிரிக்க முடிகிறது? என்று கேட்டான்.உடனே அவன் மன்னனை நோக்கி "மன்னா வாசலில் ஒருவன் பெரிய பலாப்பழத்தை சுமந்துகொண்டு காத்திருக்கிறான், அவனை நினைத்தேன். சிரிப்பு வந்தது" என்று சொன்னான்.

நன்றி;குமுதம் இதழில் பல ஆண்டுகளுக்கு முன்பு படித்தது.

joy001
03-10-2010, 02:46 PM
ஒருவன் பெரிய பலாப்பழத்தை சுமந்துகொண்டு காத்திருக்கிறான், அவனை நினைத்தேன். சிரிப்பு வந்தது" என்று சொன்னான்......
நல்ல நகைசுவை நண்பரே..........:lachen001::lachen001:

nambi
03-10-2010, 03:35 PM
''பழம்'' பெறும் மன்னனின் நகைச்சுவை நிகழ்வை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

M.Jagadeesan
03-10-2010, 03:53 PM
ஒருவன் பெரிய பலாப்பழத்தை சுமந்துகொண்டு காத்திருக்கிறான், அவனை நினைத்தேன். சிரிப்பு வந்தது" என்று சொன்னான்......
நல்ல நகைசுவை நண்பரே..........:lachen001::lachen001:

நன்றி.

M.Jagadeesan
03-10-2010, 03:55 PM
''பழம்'' பெறும் மன்னனின் நகைச்சுவை நிகழ்வை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

நன்றி.

விகடன்
07-10-2010, 09:32 AM
ஞானப்பழத்தை கொண்டுபோனவர்கள் கதி????