PDA

View Full Version : உடல் பேசுது..அனுராகவன்
03-10-2010, 02:33 AM
நாள்தோறும்
உன்னை தேடி உன்னை நினைத்து
உன் நினைவாக
உன்னுடன் வாழும் உடல்தான் பேசுகிறேன்..

என்னை இங்கனம் குளிப்பாட்டி ,
அலங்காரம் செய்தாய்
நான்
என்னையே கொடுத்தேன்
ஒரு திஸ்டி பொம்மையாக...


இதை யாராவது மன்றத்தில் சீறமைங்குகள்.. விடுப்புக்கு செல்லும் முன் என் சிறு கிறுக்கள்....

சூறாவளி
03-10-2010, 03:46 AM
இதுவரை நான் சொல்ல கேள்விப்பட்டது, யாராவது இணைபிரியா நட்புகள் சில கால இடைவெளிக்கு பிரியும் போது சொல்லும் வரிகள்: "உடல்தான் பிரிகிறது, மனம் இங்கயேதான் இருக்கும்" இப்படிதான் சொல்ல கேட்டுள்ளேன்.. ஆனால் உடல் இக்குள்ளது என கூறி பலமா யோசிக்க வைத்து விட்டிர்கள்..


என்னை இங்கனம் குளிப்பாட்டி ,அனைத்து அலங்காரம் செய்தாய் நான் என்னையே கொடுத்தேன் ஒரு திஸ்டி பொம்மையாக...

இவ்வரிகளில் இருந்து ஒன்று புரிகிறது... இம்மன்றம் உங்களை பல அறிவுகளிலும் பட்டை தீட்டி இங்கு ஜொலிக்க வைத்துள்ளது, அதான் இம்மன்றத்துக்கே சமர்பித்துள்ளிகள் போல...

சில நாள் இம்மன்றம் விட்டு விடுமுறைக்கு செல்லும் இந்த பிரிவை, பள்ளி நாட்களில் பிரியும் அந்த பிரிவை போல், சொல்லில் வடிக்கமுடியாத கனத்த தாக்கத்துடன் இருப்பீர்கள் போல் உள்ளது.. அத்தனைக்கும் ஒன்றுக்குள் ஒன்றாக இம்மன்றத்துடன் கலந்து விட்டீர்கள்..

மீண்டும் வந்து பழைய உற்சாகத்துடன் புது பொழிவுடன் இமன்றத்தில் இணையுங்கள்.. அதுவரை மறக்காமல் எல்லோரும் காத்திருப்போம்..

Nivas.T
03-10-2010, 06:54 AM
விடுப்பு விண்ணப்பம் தெரியும்

விடுப்பு கவிதை இப்பொழுதான் பார்க்கிறேன் :lachen001:

மிக அருமை

பூமகள்
04-10-2010, 08:28 AM
உரையாடல் நடையில் இருந்ததை.. கவிதையாக சரி செய்த அமர் அண்ணாவுக்குப் பாராட்டுகள்..

ஆனாலும் அனு ஒரு நாள் பிரிவுக்கு இது ரொம்ப ஓவர் தான். :cool:

சூறாவளி
04-10-2010, 03:34 PM
ஆனாலும் அனு ஒரு நாள் பிரிவுக்கு இது ரொம்ப ஓவர் தான். :cool:

ஒகோ.... ஒரு நாள்தானா...!!! அப்படி இருக்காதுன்னு தோணுது பூவக்கா...:) கடைசி நிமிடத்திலும் மன்றம் வந்துட்டு போயிருப்பாங்க.. ஆனால் தகவலை ஒரு நாள் முன்பே தந்திருக்கலாம்.. அல்லது லாப்டாப்ல இருந்து ஊருக்கு போய்கிட்டு இருக்கும் போது மன்றம் வந்திருக்கலாம்.. :)

பூமகள்
04-10-2010, 05:18 PM
இதப் பாருங்க சூறாவளி அண்ணா... நீங்களும் பதில் போட்டிருக்கீங்களே.. :confused: ஆனாலும் பூவக்கான்னு என்னைக் கூப்பிட்டு கூப்பிட்டு உங்க வயசைக் குறைச்சுக்கலாம்னு பார்க்கிறதை வன்மையாக கண்டிக்கிறேன். ;) :D


நண்பர்களே!! ........உங்கள் பிரியமான உங்கள் சகோதரி சில நாட்கள் வெளியூர் செல்ல இருப்பதால் என்னை மன்றத்தில் தேட வேண்டாம் என்று தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்............என்னுடன் சமரமாக பழகிய உங்கள் விட்டு 24 மணிநேரமும் எப்படி கழியுமோ..........என் உயிர் இங்கே!! என் மட்டுமே என்னோடு...............மன்றத்தை பத்திறமாக பார்த்துக்கொள்ளுங்கள்...........என் நெட்வொர்க் கூட சரியாக வரல....அதில் எண்டர் பட்டனை அழுத்தினால் கீழே போகுது....ஆனால் இந்த Message (Drafts enabled): மட்டும் வேலை செய்யல.. பிறகு முகப்பில் உள்ள சில பகுதி தெரியல... என்னடாது இங்கு வந்து கணினி வேலை செய்யல சொல்கிறாலே நினைக்க வேண்டாம்... ஏன் என்றால் என்னால் எனக்கு பிடித்த மாதிரி இப்போது இந்த பிரச்சனையால் எழுத முடியல..........................என் உயிர் மன்றத்தில்..உங்கள் நட்பு என் இதயத்தில்.... சென்று வருகிறேன்...... .................................................................................................................................அது வரை உங்கள் நட்பு....நடப்பு தோழி அனு.....(ம்ம் வருகிறேன்,,,மறாவாமல் உங்கள் உயிர் சகோ)


உங்கள் பணிகள் செவ்வனே நடந்து நீங்கள் முழு மகிழ்ச்சியுடன் மன்றம் திரும்ப வாழ்த்துக்கள். ஆனாலும் 24 மணிநேரத்துக்கு இந்த பில்டப்பு ரொம்பவே ஓவர்தான். :lachen001::lachen001::lachen001:

சூறாவளி
04-10-2010, 06:56 PM
இதப் பாருங்க சூறாவளி அண்ணா... நீங்களும் பதில் போட்டிருக்கீங்களே.. :confused: ஆனாலும் பூவக்கான்னு என்னைக் கூப்பிட்டு கூப்பிட்டு உங்க வயசைக் குறைச்சுக்கலாம்னு பார்க்கிறதை வன்மையாக கண்டிக்கிறேன். ;) :D

:fragend005: இதான்... எப்பவும் இந்த சின்ன பசங்க இப்படிதான் இதுமாதிரி கவனக்குறைவா படிச்சி, படிச்ச அதே வேகத்துல ஆர்வக்கோளாருல முதல் பதிவா பதிலையும் போட்டு அப்புறம் பெரியவங்க கிட்ட வாங்கி கட்டிகிவாங்க..;)

இதோ நானே இப்ப உங்ககிட்ட வசமா வாங்கி கட்டிகிட்டேனே...:fragend005: பூவக்கான்னா கொக்கா..!!! :icon_b:

கீதம்
04-10-2010, 09:27 PM
ஒவ்வொருநாளும் எப்படிப் போகுமோ என்பதைத்தான் அனு அவர்கள் அப்படிக் குறிப்பிட்டுள்ளதாக எண்ணுகிறேன். ஒருநாளைக்காகவா இவ்வளவு பெரிய விடுப்பு விண்ணப்பம் அளித்திருப்பார்?:confused:

சூறாவளி
05-10-2010, 03:30 AM
ஒவ்வொருநாளும் எப்படிப் போகுமோ என்பதைத்தான் அனு அவர்கள் அப்படிக் குறிப்பிட்டுள்ளதாக எண்ணுகிறேன். ஒருநாளைக்காகவா இவ்வளவு பெரிய விடுப்பு விண்ணப்பம் அளித்திருப்பார்?:confused:


சரியா சொன்னிங்க.. நான் எடுத்துக்கொண்ட அர்த்தமும் அப்படியே..

அனு அவர்கள் குறிப்பிட்டது 24 மணி நேரமும் என்றுதான்.. 24 மணி நேரம் என்றிருந்தால், அது ஒரு நாளை மட்டும் குறிக்கும்.. 24 மணி நேரமும் என்றிருந்தால் அது தொடர் நாள்களை குறிக்கும்.. இன்னும் கொஞ்சம் ஆழமாய் ஆராய்ந்து பார்த்ததில் கீழே கோட் பண்ணிருக்கேன் பாருங்க..


நண்பர்களே!! ........உங்கள் பிரியமான உங்கள் சகோதரி சில நாட்கள் வெளியூர் செல்ல இருப்பதால் என்னை மன்றத்தில் தேட வேண்டாம் என்று தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்............என்னுடன் சமரமாக பழகிய உங்கள் விட்டு 24 மணிநேரமும் எப்படி கழியுமோ......

அதிலயே சில நாட்கள் என குறிப்பிட்டுள்ளார்கள்... அதை கவனத்தில் யாருமே கவனிக்கலையா...!!!

அப்பாடா... இப்போ தெளிவான முடிவுக்கு வந்தாச்சி...

அனு பல நாட்கள் விடுமுறையில் சென்றுள்ளார்.. சென்றுள்ளார்..:icon_b:

அனுராகவன்
07-10-2010, 08:19 PM
மீண்டும் வந்து பழைய உற்சாகத்துடன் புது பொழிவுடன் இமன்றத்தில் இணையுங்கள்.. அதுவரை மறக்காமல் எல்லோரும் காத்திருப்போம்..
நன்றி சகோ....


விடுப்பு விண்ணப்பம் தெரியும்

விடுப்பு கவிதை இப்பொழுதான் பார்க்கிறேன் :lachen001:

மிக அருமை

நன்றிகள் நிவாஸ்..
சிறு முயற்சிதான்..
உங்கள் ஊக்கத்தால் மேலும் வரலாம் என்னுள்...ஆனாலும் அனு ஒரு நாள் பிரிவுக்கு இது ரொம்ப ஓவர் தான். :cool:
பூ....பிரிவு ஒரு நாள் பல அது முக்கியமல்ல..
என் மீது நட்பு வட்டாரம் இல்லையேல் அது கோடி வருடங்களுக்கு சமமே..
நான் ஒவ்வொறுவரையும் என் உயிராக பார்க்கிறேன்...


லாப்டாப்ல இருந்து ஊருக்கு போய்கிட்டு இருக்கும் போது மன்றம் வந்திருக்கலாம்.. :)
ஆமாம் என் நண்பரின் கணினிதான் நான் இறுதி நிமிடம் வந்தேன்..


ஒவ்வொருநாளும் எப்படிப் போகுமோ என்பதைத்தான் அனு அவர்கள் அப்படிக் குறிப்பிட்டுள்ளதாக எண்ணுகிறேன். ஒருநாளைக்காகவா இவ்வளவு பெரிய விடுப்பு விண்ணப்பம் அளித்திருப்பார்?:confused:

ஆமாம் தோழி மன்றமே என் உடலும் ,உயிராக காண்கிறேன்..
அதனால் இங்கே ஒரு நிமிடமும் பல வருடங்கள்..


அதிலயே சில நாட்கள் என குறிப்பிட்டுள்ளார்கள்... அதை கவனத்தில் யாருமே கவனிக்கலையா...!!!

அப்பாடா... இப்போ தெளிவான முடிவுக்கு வந்தாச்சி...

அனு பல நாட்கள் விடுமுறையில் சென்றுள்ளார்.. சென்றுள்ளார்..:icon_b:
சரியாக சொன்னீர்கள் நான் விடுப்பு எடுத்துக்கொண்டது நான்கு நாட்கள் மட்டுமே....
ஆகவே எல்லோரும் என்னை வரவேற்க வாங்க...

சூறாவளி
08-10-2010, 04:14 AM
அனு வந்தாச்சின்னு சொல்லவேண்டியதே இல்லை... மன்றம் திறந்ததும் நியுபோஸ்ட் எல்லாத்துலயும் "அனு" ன்னு பதிவுகள் இருக்கும் போதே தெரிஞ்சிடுதே..:)