PDA

View Full Version : பலாச்சுளைக் கணக்கு.

M.Jagadeesan
02-10-2010, 05:31 AM
பாண்டி நாட்டைச் சார்ந்த கொறுக்கையூரில் புத்தன் என்பவரின் மகனாகத் தோன்றியவர் காரியார்.இவர் இயற்றிய நூலே கணக்கதிகாரம்.இந்நூல் 64 வெண்பாக்களையும் 45 புதிர் கணக்குகளையும் கொண்டுள்ளது.இதில் உள்ள ஒரு கணக்கு.

பலாப்பழத்தினுள் இருக்கும் பலாச்சுளைகளின் எண்ணிக்கையை அறுப்பதற்கு முன்பே காண்பது எப்படி?

"பலாவின் சுளையறிய வேண்டுதிரேல்--ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பறுக் கெண்ணி--வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தினுக்கு ஈந்திடவே
வேறுஎண்ண வேண்டாம் சுவை"

விளக்கம்: பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முள்ளுகளை எண்ணி 6 ஆல் பெருக்கி வரும் விடையை 5 ஆல் வகுக்க கிடைக்கும் ஈவே பலாப்பழத்தினுள் இருக்கும் சுளைகளின் எண்ணிக்கையாகும்.

உதாரணமாக காம்பைச் சுற்றியுள்ள சிறு முட்களின் எண்ணிக்கை 100 என்க. இதை 6 -ஆல் பெருக்க விடை 600 . இதை 5 ஆல் வகுக்க விடை 120 . இதுவே பலாப்பழத்தினுள் இருக்கும் சுளைகளின் எண்ணிக்கையாகும்.

கீதம்
02-10-2010, 08:41 AM
இதுவரை அறிந்திராத ஆச்சர்யம் தரும் செய்தி. சுளைகளை எண்ண எத்தனை சுலபமான வழி. பகிர்வுக்கு நன்றி, ஜெகதீசன் அவர்களே.

அன்புரசிகன்
02-10-2010, 10:55 AM
முற்காலத்தில் கணினி இலத்திரனியலின் உதவியின்றி கேள்விஞானம் மற்றும் அனுபவப்பாடங்களால் பல விடையங்களை வெளிப்படுத்தியுள்ளனர். பகிர்தலுக்குநன்றி ஜெகதீசன்.

govindh
02-10-2010, 01:42 PM
அறிந்திராத அரிய செய்தி....
பகிர்வுக்கு நன்றி.

சிவா.ஜி
02-10-2010, 04:42 PM
ஆச்சர்யமான தகவல். முன்னோர்களின் அறிவுத்திறன் அதிசயிக்க வைக்கிறது.
தகவல் பகிர்வுக்கு நன்றி ஜகதீசன்.

சூறாவளி
02-10-2010, 06:25 PM
இப்படியும் கணக்கை அந்த காலத்தில் வகுத்துள்ளார்கள்...

இதுக்காகவே ஒன்னு வாங்கி எண்ணி பாக்க வேண்டியதுதான்..

M.Jagadeesan
03-10-2010, 12:07 AM
இதுவரை அறிந்திராத ஆச்சர்யம் தரும் செய்தி. சுளைகளை எண்ண எத்தனை சுலபமான வழி. பகிர்வுக்கு நன்றி, ஜெகதீசன் அவர்களே.

நன்றி.

M.Jagadeesan
03-10-2010, 12:09 AM
இப்படியும் கணக்கை அந்த காலத்தில் வகுத்துள்ளார்கள்...

இதுக்காகவே ஒன்னு வாங்கி எண்ணி பாக்க வேண்டியதுதான்..

நன்றி.

M.Jagadeesan
03-10-2010, 12:10 AM
ஆச்சர்யமான தகவல். முன்னோர்களின் அறிவுத்திறன் அதிசயிக்க வைக்கிறது.
தகவல் பகிர்வுக்கு நன்றி ஜகதீசன்.

நன்றி.

M.Jagadeesan
03-10-2010, 12:11 AM
அறிந்திராத அரிய செய்தி....
பகிர்வுக்கு நன்றி.

நன்றி.

M.Jagadeesan
03-10-2010, 12:12 AM
முற்காலத்தில் கணினி இலத்திரனியலின் உதவியின்றி கேள்விஞானம் மற்றும் அனுபவப்பாடங்களால் பல விடையங்களை வெளிப்படுத்தியுள்ளனர். பகிர்தலுக்குநன்றி ஜெகதீசன்.

நன்றி.

விகடன்
03-10-2010, 08:19 AM
இதுவரைகாலமும் அறிந்திராத விடயம்.
பகிர்விற்கு நன்றி.

இருந்தாலும் பலாப்பழத்தின் காம்பினை, சுற்றியுள்ள முற்களுடன் படமொன்றினை எடுத்து எண்ணப்படவேண்டிய வலயத்தை குறித்துக்காட்டி ஓர் படத்தையும் போட்டுவிடுவீர்களேயானால் இந்தப்பதிவு பூரணமெய்துவிடுமென்பது எனது எண்ணம்!!!

அன்புரசிகன்
03-10-2010, 08:31 AM
இருந்தாலும் பலாப்பழத்தின் காம்பினை, சுற்றியுள்ள முற்களுடன் படமொன்றினை எடுத்து எண்ணப்படவேண்டிய வலயத்தை குறித்துக்காட்டி ஓர் படத்தையும் போட்டுவிடுவீர்களேயானால் இந்தப்பதிவு பூரணமெய்துவிடுமென்பது எனது எண்ணம்!!!

தேவை தான்.*

M.Jagadeesan
03-10-2010, 08:56 AM
இதுவரைகாலமும் அறிந்திராத விடயம்.
பகிர்விற்கு நன்றி.

இருந்தாலும் பலாப்பழத்தின் காம்பினை, சுற்றியுள்ள முற்களுடன் படமொன்றினை எடுத்து எண்ணப்படவேண்டிய வலயத்தை குறித்துக்காட்டி ஓர் படத்தையும் போட்டுவிடுவீர்களேயானால் இந்தப்பதிவு பூரணமெய்துவிடுமென்பது எனது எண்ணம்!!!

நீங்களே ஒரு பலாப்பழத்தை வாங்கி சோதித்துப் பாருங்களேன்.

விகடன்
03-10-2010, 09:32 AM
சோதித்துப்பார்க்க முதலில் சிறிய முள்ளையும் பெரிய முள்ளையும் பிரித்தறியத்தெரிந்திருக்க வேண்டும். அதை விடக் கடினம், நானிருக்குமிடத்தில் முழுப் பலாப்பழத்தை காண்பது.

இவற்றை படம்மூலமாக விளங்கப்படுத்தின் ஏதோ நாமே செய்துபார்த்ததுபோல உணர்வு இருக்கும். அதுதான் சொன்னேன். முடியாதென்றால் பறுவாயில்லை.