PDA

View Full Version : காலத்தை வென்றவன்



M.Jagadeesan
30-09-2010, 03:22 PM
காலத்தை வென்றவன் நீ--உன்
கோலத்தை மாற்றியது மதுரை மண்

இளமையின் அழகு முதுமையில் மறையும்--ஆனால்
இளமையில் இல்லாத அழகை முதுமையில் காட்டினாய்

திருக்குறள் படிக்க விரும்பினாய் நீ--ஆனால்
உன் வாழ்வே திருக்குறள் என்பது உனக்குத் தெரியாது

துறவிகள் எல்லாம் இல்லறம் நடத்தும் இந்நாளில்
இல்லறத்தில் இருந்து துறவறம் நடத்தியவன் நீ.

ஆயிரம் காந்திகள் இருக்கலாம்--ஆனால் "மகாத்மா" என்ற
அடைமொழி உனக்கு மட்டுமே

மூன்றாம் வகுப்பிலேயே பயணம் செய்தாய்--புகைவண்டியில்
நான்காம் வகுப்பு இல்லாததால்

நாங்கள்
உண்ணாநோன்பு இருந்தால் கைகால்கள் நடுங்கும்-- ஆனால்நீ
உண்ணாநோன்பு இருந்தால் உலகமே நடுங்கியது

கோடிகளில் நீ புரளவில்லை--ஆனால் உன் பொருட்களோ பல கோடிகளுக்கு ஏலம் போகின்றன

நந்தா விளக்கே, நானிலத்தின் தந்தாய்- என்றும்
நெஞ்சினிலே உன் நினைவை வைத்திடுவோம்.

அனுராகவன்
30-09-2010, 07:41 PM
காலத்தை வென்றவர்கள் பலரை ஞாபகம் படுத்தியது....
பலே !! தொடருங்கள்...

கீதம்
30-09-2010, 09:49 PM
மகாத்மாவுக்கொரு மணிக்கவிதை படைத்த உங்களுக்குப் பாராட்டுகள், ஜெகதீசன் அவர்களே.