PDA

View Full Version : சொத்து (குமுதம் 6-10-2010) இதழில் வெளிவந்தது



க.கமலக்கண்ணன்
30-09-2010, 04:55 AM
சொத்து

"என்னங்கையா கெட்டுப்போன வெங்காயமா
எடுத்து இருக்கீங்க?'' என்று கேட்டான்
கடைக்காரன்.

"வீட்டுல டி.வி. பார்த்துகிட்டு இருந்த என்னை என்
மனைவி வெங்காயம் வாங்க அனுப்பிட்டா. அதான்
கெட்டுப்போன வெங்காயத்தை வாங்கிட்டு போனா அடுத்த
முறை கடைக்கு அனுப்பமாட்டால்ல'' என்று சொன்னான்
ராமு.

"அய்யா, கெட்டுப்போனதை ஆடுகளுக்கும்
மாடுகளுக்கும் தான் போடுவாங்க. நீங்க வாங்கிட்டு போற
வெங்காயத்தை நீங்கள் மட்டுமில்லை உங்கள் குழந்தைகளும்
சாப்பிடுவாங்க. நம்ம குழந்தைகளுக்கு நாம கொடுக்கின்ற சொத்தே
ஆரோக்கியம் தான்'' என்று சொன்னான் கடைக்காரன்.

ராமுக்கு முகத்தில் 'பளார்' என்று அறைந்தார் போல
இருந்தது. கடைக்காரனுக்கு இருக்கும் அறிவு கூட, நமக்கு
இல்லையே என்று, கெட்டுப்போன வெங்காயத்தை
கொட்டிவிட்டு, நல்ல வெங்காயத்தை வாங்கி சென்றான்...

http://www.tamilmantram.com/vb/photogal/images/2574/large/2_Kumudham_KKK.jpg

ஆதி
30-09-2010, 05:22 AM
வாழ்த்துக்கள் கமலக்கண்ணன் அண்ணா, குமுதமிதழில் வெளி வந்தது போலே பதிந்திருக்கலாம் இங்கும் கதையை.. அதுவே சரியாக இருந்திருக்கும்.....

தீபா
30-09-2010, 05:30 AM
"என்னங்கையா கெட்டுப்போன வெங்காயமா எடுத்து இருக்கீங்க?'' என்று கேட்டான் கடைக்காரன்.

"அய்யா, கெட்டுப்போனதை ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் தான் போடுவாங்க. நீங்க வாங்கிட்டு போற வெங்காயத்தை நீங்கள் மட்டுமில்லை உங்கள் குழந்தைகளும் சாப்பிடுவாங்க. நம்ம குழந்தைகளுக்கு நாம கொடுக்கின்ற சொத்தே ஆரோக்கியம் தான்'' என்று சொன்னான் கடைக்காரன்.

ராமுக்கு முகத்தில் 'பளார்' என்று அறைந்தார் போல இருந்தது கடைக்காரன் கூறியதை கேட்டதும். வெங்காயம் விற்கும் கடைக்காரனுக்கு இருக்கும் அறிவு கூட, பள்ளிப்படிப்பை முடித்த நமக்கு சிறிதும் இல்லையே என்று எண்ணிக்கொண்டு, கடைக்காரனிடமிருந்து கெட்டுப்போன வெங்காயத்தை கூடையோடு வாங்கி கீழே கொட்டிவிட்டு, நல்ல வெங்காயத்தை வாங்கி சென்றான்...



மன்னிக்கணும் கமல் சார்,

கதை எனக்குப் பிடிக்கலை

இப்படி வியாக்கியானம் பேசரவர் கெட்டுப்போன வெங்காயத்தை எதுக்கு விற்பனைக்கு வெச்சு இருக்காராம்? ஆடுமாடுகளுக்குத் தீனியா போடணும்னா அதை தனியா எடுத்து வெச்சிருக்கலாமே?

- தீபா

க.கமலக்கண்ணன்
30-09-2010, 05:30 AM
அப்படியே ஆகட்டும் ஆதன்...


தீபா : தனியா எடுத்து வைத்திருப்பதால் கேட்கிறார்...

Nivas.T
30-09-2010, 05:51 AM
வாழ்த்துகள் கமலகண்ணன்

க.கமலக்கண்ணன்
30-09-2010, 06:03 AM
நன்றி நிவாஸ்

கீதம்
30-09-2010, 06:53 AM
கதை நம்பும்படியாக இல்லைதான். கெட்டுப்போன வெங்காயத்தை வாங்கிப்போனாலும் பொறுப்பான மனைவியாக இருந்தால் அவற்றை சமையலுக்கு உபயோகப்படுத்தவேமாட்டார்.

எனினும் குமுதத்தில் வெளிவந்தமைக்குப் பாராட்டுகள், கமலக்கண்ணன் அவர்களே.

govindh
30-09-2010, 07:13 AM
வாழ்த்துக்கள்....கமலகண்ணன்.

தாமரை
30-09-2010, 08:18 AM
காலையில்தான் குமுதத்தில் இந்தக் கதையைப் படிச்சேன். கமலக்கண்ணன் என்ற பேரைப்பார்த்ததும் தெரிஞ்ச பேரா இருக்கே என்று புன்னகைத்தேன், நீங்கள்தான் என்று அறிந்ததில் சந்தோசம்.

நல்ல வெங்காயங்களுடன் அழுகிய வெங்காயங்களைக் கலந்து வைத்தால் நல்ல வெங்காயமும் கெட்டுப் போய்விடுமே. அதனால்தான் தீபா கேட்கிறார். எனக்கும் கதையைப் படித்தவுடன் அதுதான் தோன்றியது.. அழுகிய வெங்காயங்கள் இருக்கும் கூடையில் நல்ல வெங்காயம் இருந்தால் கூட வாங்க மாட்டோமே..

கடைக்காரர்கள் காய்கறி அடுக்கி வைக்கும்போது எதை முதலில் விற்றுத் தீர்க்க வேண்டுமோ அதைத்தான் மேலோடு எடுத்து வைப்பார்கள். ஒரு பழம் அழுகினால் உடனடியாக அதை அப்புறப்படுத்தி விடுவார்கள்.. மேலோடு இருப்பவைதான் முதலில் அழுகும். அவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்துவார்கள். இல்லைன்னா எல்லா வெங்காயமும் கெட்டுப் போய் அவர்களுக்கு பெரிய நஷ்டமாகும்.

அடுக்கை கலைக்காதீங்க என அவர்கள் மன்றாடுவதும் அதுக்குத்தான், நம் தெய்வ பத்தினிகள் நீண்ட நாளைக்கு வரணும் என்பதால் வம்படியாக கலைத்துதான் எடுப்பார்கள். நாம் மேலிருந்து எடுப்போம் பழம் கெட்டுப் போகாம இருந்தா நமக்கு ஓகே...

சொல்ல வந்த கருத்து நல்லா இருக்கு. சொல்லியவரும் ஓ.கே.. ஆனால் அந்த அழுகிய வெங்காயம்தான் சரியில்லை.:D:D:D

க.கமலக்கண்ணன்
30-09-2010, 08:30 AM
கீதம் கோவிந்த் தாமரை

உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி...

rajesh2008
30-09-2010, 11:59 AM
கதை பிரபல நாளிதழில் வெளிவந்ததுக்கு வாழ்த்துக்கள்.

aren
30-09-2010, 12:10 PM
பாராட்டுக்கள் கமலக்கண்ணன். இன்னும் நிறைய எழுதுங்கள். நீங்கள் இன்னும் மேன்மேலும் முன்னேற்றப்பாதையில் செல்ல என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இன்னும் எழுதுங்கள்.

xavier_raja
30-09-2010, 01:21 PM
வெங்காயம் உரிக்க உரிக்க ஒன்னும் இல்லைங்கிற மாதிரி இந்த கதையிலும் எதுவும் இல்லை..

சிவா.ஜி
30-09-2010, 04:11 PM
வாழ்த்துக்கள் கமலக்கண்ணன்.

SathyaThirunavukkarasu
30-09-2010, 04:25 PM
வாழ்த்துக்கள் அண்ணா

Narathar
30-09-2010, 04:35 PM
கமலக்கண்ணா!
வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்...........
இன்னும் இன்னும் நிறைய எழுதி பிரபலமாக வாழ்த்துக்கள்

ரங்கராஜன்
30-09-2010, 05:13 PM
வாழ்த்துக்கள் கமலகண்ணன்

கதை குமுதம் இதழில் வெளிவந்ததற்கு பாராட்டுக்கள்... இந்த கதை வெளிவந்ததால் உங்களுக்கு பொறுப்பு அதிகமாகி விட்டது, இன்னும் சிறப்புடன், தேர்ந்த முறையில் எழுந்துங்கள். விரைவில் முழுநீள சிறுகதையுடன் உங்களை எதாவது ஒரு பிரபல இதழில் சந்திக்கிறேன்.....

வாழ்த்துக்கள் கமலகண்ணன்.

அன்புரசிகன்
01-10-2010, 01:14 AM
சொல்லவந்த நீதி அருமை. தப்புக்கு தப்பு தீர்வு கிடையாது. வாழ்த்துக்கள்.*

சன் டீவீயில் குங்குமம். ________. கமலக்க்ண்ணனின் பரபரப்புத்தொடர். என்று வர வாழ்துக்கள்.*

க.கமலக்கண்ணன்
01-10-2010, 05:24 AM
ராஜேஸ், அரென் உங்களுக்கு நன்றிகள் பல...

சேவியர் ராஜா : வெங்காயம் உரிக்க உரிக்க ஒன்னும் இல்லைதான் அது இல்லாமல் சமையலே இலை தெரியுமா உங்களுக்கு....

சிவா.ஜி, சத்யா, நாரதர் உங்களுக்கு நன்றிகள் பல...

டக்ஸ், அன்புரசிகன் : உங்களின் வாழ்த்துரைக்கு எனக்கு தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை ஆனாலும் முயற்சிக்கிறேன். உங்களின் வார்த்தைகளை வாழ்க்கையாக்க முயற்சிக்கிறேன்