PDA

View Full Version : பாதுகாப்பான இணையதளம்- உதவி தேவை



ஸ்ரீதர்
30-09-2010, 02:25 AM
அன்பு நண்பர்களே ,

என்னுடைய இணையதளம் இன்று ஹேக் செய்யப்பட்டு Home பக்கம் மாற்றப்பட்டு இருந்தது.

இஸ்லாம் பற்றிய தகவல்களும் சில அறுவறுக்கத்தக்க வார்த்தைகளும் இடம் பெற்றிருந்தன.

நல்ல வேளையாக Hosting பாஸ்வேர்டு மாற்றப்படாமல் இருந்தது.

மற்ற பக்கங்கள் பிரச்சனையின்றி இருக்கிறது.

இவ்வாறு ஹேக் செய்யாமல் இருக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கலாம்???

தெரிந்த நண்பர்கள் உதவவும்

கீழ்கண்டவற்றை இப்போதைக்கு செய்து இருக்கிறேன் :-

Hosting பாஸ்வேர்டு மாற்றிவிட்டேன்,

என்னுடைய FTP யில் சேமித்து வைத்திருந்த பாஸ்வேர்டையும் நீக்கி விட்டேன்.

Hosting நிறுவனத்திற்கு இதை தெரியப்படுத்தி இருக்கிறேன்.

நன்றி....

praveen
30-09-2010, 03:33 AM
12 எழுத்துக்கு மேலே பாஸ்வேர்டு (alpha + numerical + Non usable character like ~ #)மற்றும் முக்கியமான ஒவ்வொன்றிக்கும் தனித்தனி பாஸ்வேர்டு வைத்துக்கொள்ள வேண்டும், எக்காராணம் கொண்டும் பொதுக்கனினியில் இந்த பாஸ்வேர்டு மூலம் லாகின் ஆக கூடாது, கம்ப்யூட்டரில் தேவையில்லாமல் ப்ரிவேர்/டிரைல்வேர் பதிதலும் கூடாது.

மீட்டெடுத்ததற்கு வாழ்த்துக்கள், இனி உங்கள் ஹோஸ்டிங் நிறுவனம் சில பாதுகாப்பு வழிமுறை வழங்குவார்கள், அதனையும் மறக்காமல் பின்பற்றுங்கள்.