PDA

View Full Version : அழகிய பிரம்மாக்கள்!!!



sakthiselvi
29-09-2010, 04:40 PM
உடைத்தெறியப்பட்ட பொம்மைகள்
கிழித்தெறியப்பட்ட காகிதங்கள்

டோரா புஜ்ஜி ஸ்டிக்கர்களால்
ஓட்டப்பட்ட பீரோ, மேஜைகள்

பென்சில்களாலும் கிரேயான்களாலும்
கிறுக்கப்பட்டு நவீன ஓவியங்களாய்
காட்சியளிக்கும் சுவர்கள் அவ்வப்போது

மரித்துவிடும் என்
மனதை இதழ் அமுதத்தாலும்
மழலை மொழியாலும் உயிர்தெழவைக்கும்

இவர்கள் எனக்கே எனக்காய்
அற்புதமானதொரு உலகை படைக்கும்
அழகிய பிரம்மாக்கள்.......

கீதம்
29-09-2010, 08:59 PM
குழந்தைகள் படைக்கும் உலகத்தில் குடியிருப்போர் பாக்கியசாலிகள்.

மழலைக்குறும்பை அப்பட்டமாய்ச் சொல்லும் அழகிய கவிதை. பாராட்டுகள், சக்திசெல்வி அவர்களே.

ஆதவா
04-10-2010, 02:56 PM
குழந்தைகள் படைக்கும் உலகில் பயணிகளாய் பெற்றோர்கள்!!
கரு நன்றாக இருக்கிறது.
குழந்தை என்ற பதம் உபயோகிக்காமல் அவர்கள் உபயோகப்படுத்தும் பொருட்களைக் கொண்டே கவிதையைக் கொண்டு சென்றதும் நன்றாக இருக்கிறது.
உடைத்த பொம்மைகள் என்று குழந்தையின் கைங்கர்யத்தோடு ஆரம்பித்ததும் நன்றே.

ஆனாலும் பெற்றோர்களை மரித்து உயிர்த்தெழவைக்கும் இறைவனாக்குகிறீர்கள்!!!
இறைவனின் உலகில், இறைவன்
பிரம்மாக்கள் என்ற தலைப்பு நன்றாகப் பொருந்துகிறது
வாழ்த்துக்கள் ஷக்திசெல்வி!

சிவா.ஜி
04-10-2010, 03:50 PM
குழந்தைகளின் ஒவ்வொரு செயலும் பெற்றவர்களை பரவசமாக்கும். அழகான கவிதை.

வாழ்த்துக்கள் சக்திசெல்வி.