PDA

View Full Version : கிள்ளை உள்ளம்..!!பூமகள்
29-09-2010, 04:25 PM
கிள்ளை உள்ளம்..!!


http://3.bp.blogspot.com/_ATCRNmCxu-E/TKQtLcpLX9I/AAAAAAAACGk/_CXPkSMsg3E/s1600/outdoorsbaby1.jpg


மற்றோர் இருக்க
எனை நாடி
என்னோடு இருக்க
எங்கோ நின் கவனம்..!

என் அருகாமை
கிட்டியதும்
அடுத்தது நோக்கி
உன் மனம்..!

என் முக பாவங்கள்
உனை முற்றுகையிட்டும்..
முகம் நோக்காமல்
சிதறும் உன் ஆட்டச் சிந்தை..!

எப்படியாகினும்
என் மென்கோபம் தோற்கடிக்கும்
பொக்கைவாய்ப்
புன்னகைப்பூவின் முகம்..!!

சூறாவளி
29-09-2010, 06:03 PM
நான்கு நான்கு வரிகள் நல்கி அதில் பல அர்த்தங்கள் சிந்திக்க வைத்து விட்டிர்கள்.

குழந்தையை மனதில் வைத்து தோன்றிய கவிதையா!!! எனக்கு முதலில் தோன்றியது ஒரு குழந்தையின் நிழலே..

அதிலும் இரண்டாம் கவிதை வரிகள் வேறு பார்வையில் சிந்திக்க வைத்தன.. எப்போதும் மனித மனம் என்பது... ஒன்று கிடைக்கும் வரைதான் அதன் மீது உள்ள நாட்டம் ஈடுபாடு இருக்கும், அது கிடைத்ததும் பின் மனம் வேறு நோக்கி தாவி விடும்.. இந்த அர்த்தம் தான் அந்த இரண்டாம் கவிதை படிக்கும் போது மனதில் கூடுதலாய் வந்தது..

மனம் ரசித்தது... ரசிக்க வைத்தமைக்கு பாராட்டுக்கள் நன்றிகள்..

கீதம்
29-09-2010, 09:13 PM
கோபத்தைக் குளிர்விக்கும் வித்தை தெரிந்தவர்கள் அவர்கள். ஒரு புன்னகையாலே வசியம் செய்து நம்மைக் கட்டுக்குள் கொணர்ந்துவிட்டு தாங்கள் மட்டும் எந்தக்கட்டுக்கும் அடங்காமல் மனம்போல் உலா வருபவர்கள்.

பாராட்டுகள், பூமகள். இதுபோல் ஒவ்வொரு நாளும் தோற்கட்டும் உங்கள் செல்லக்கோபம் சின்னப்பூவிடம்.

nambi
30-09-2010, 12:25 AM
கவிதை அருமை! பகிர்வுக்கு நன்றி!

தாமரை
30-09-2010, 01:31 AM
அங்க கேள்வி.. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=24184

இங்க பதில்...

பூமகள்
30-09-2010, 05:21 PM
@சூறாவளி,

சரியாகக் கவிதைக் கரு பிடித்துவிட்டீர்கள்.. வியந்தேன்.. முதல் பின்னூட்டமே முத்தாக.. மிக்க மகிழ்ச்சி அண்ணா.. :)

குழந்தையெனவும் கொள்ளலாம்.. மனித மனம் எனவும் கொள்ளலாம்..

@கீதம் ,

நன்றிகள் அக்கா. நம்மை நெகிழ்ச்சியில் கட்டி தாம் மட்டும் கட்டவிழ்ந்து ஆடும் ஆட்டம் சொற்களில் அடைக்க இயலாது.. அந்தத் தருணங்கள் திரும்பக் கிடைக்காத இனிமை வாய்ந்தவை.. அனைத்தையும் அனுபவிக்கிறேன். :)

அனுராகவன்
30-09-2010, 07:33 PM
பூ நல்ல கவி ..என் பாராட்டுக்கள்..
முதல் வரி ஆரம்பித்து .....
கடைசி வரி வரை ......
அருமையான மன ஓட்டம்..
நல்ல கரு அமைப்பு...’
கலக்கல் பூ!!!

ஆதவா
04-10-2010, 02:20 PM
நல்லா இருக்குங்க பூமகள். எப்பொழுதுமே கிடைக்கும் வரைதான் ஆவலெல்லாம். கிடைத்தபிறகு?? வெகுசிலருக்குத் தேவையற்றதாகியும் விடுகிறது.
குழந்தையைப் பொறுத்தவரையிலும் அப்படித்தான்.... என் அக்காவின் குழந்தை கொஞ்சம் வித்தியாசமானது. அம்மாவைப் பார்த்துவிடாதவரைக்கும் அக்குழந்தையோடு எவ்வளவு நேரம்வேண்டுமானாலும் விளையாடலாம். பார்த்துவிட்டால் அவ்வளவுதான்..... நீங்கள் என்னதான் சமாதானம் செய்தாலும் அழுகையை நிறுத்த முடியாது..... தூக்கிக் கொண்டே இருக்கவேண்டும்... யாரையும் திரும்பிப் பார்க்க மாட்டாள். குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காணுங்கள் எனும் தொன்மையான வழக்கை இக்கவிதையில் பார்க்க முடிகிறது.
படிமங்களால் நிறைந்து வரும் பொழுது சில இடறல்கள் இருப்பதாக நிதானிக்கிறேன். ”பொக்கைவாய் புன்னகைப் பூவின் முகம்” ஒரு குறிப்பிட்ட அடையாளத்தைக் குறிப்பிடுவதாக இருக்கிறது. “ஆட்டச் சிந்தை” எனும் மாற்று சொல் வழுக்கட்டாயத் திணிப்பாக உணர்கிறேன்.. (இது என்னோட வாசிப்பின் அனுபவம்தான்...)

அந்த குழந்தையின் ஓவியம் மிகவும் சிறப்பாகவும் பல விஷயங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது
வாழ்த்துக்கள்!

அன்புடன்
ஆதவா

அமரன்
08-10-2010, 09:54 PM
கி(ள்)ளை அல்லவா..

அப்படித்தானிருப்பேன்.


காற்றின் இசைக்குத்
தலை அசைப்பேன்..

மேகத்தின் பாட்டுக்கு
தாளம் போடுவேன்..

சூரிய விரல்களுக்கு
இதழ் முத்தம் கொடுப்பேன்..

அப்போதெல்லாம்
கால்கள் மட்டும்தான்
உன்னுடன்
ஒட்டி இருக்கும்..

புயலடித்தாலோ
முழுமையாய் ஒட்டி விடுவேன்..

எப்படி ஆடினாலும்
என்னில் பூத்த பூவில்
வடிகிறது
உந்தன் பூரிப்பு....!