PDA

View Full Version : வழு தொடர்பாக...! - 2



குணமதி
29-09-2010, 12:53 PM
திணைவழு
திணை வழாநிலை
திணைவழுவமைதி

சொல்லியங்களில், எழுவாய் எந்தத் திணையில் அமைந்துள்ளதோ அத்திணைக்கு உரியவாறே முடிக்க வேண்டும். அவ்வாறு முடிக்காவிட்டால், அது திணை வழுவாகும்.

எடுத்துக்காட்டு: அண்ணன் வந்தது.

இச் சொற்றொடரில் ‘அண்ணன்' என்னும் உயர்திணை எழுவாயாக வந்துள்ளது. ‘வந்தது' என்பது அஃறிணைச் சொல், அண்ணன் என்னும் உயர்திணை எழுவாய்க்கு, முடிக்கும் சொல்லாக ‘வந்தது'
இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயர்திணை எழுவாய்க்கு
அஃறிணை முடிவு அளிப்பதும், அஃறிணை எழுவாயை உயர்திணையில் முடிப்பதும் வழுவாகும்.

ஒரு திணைக்கு உரிய பெயருக்கு ஏற்ப அதே திணையில்
முடிப்பது திணை வழாநிலையாகும்.

எ.டு. : இசைமொழி பாடினாள்
புறா பறக்கிறது

‘இசைமொழி' என்னும் உயர்திணைப்பெயர், ‘பாடினாள்' என்னும் உயர்திணைக்குரிய வினைமுற்றைக் கொண்டு முடிந்தது.
‘புறா' என்னும் அஃறிணைப் பெயர் ‘பறக்கிறது' என்னும் அஃறிணை வினைமுற்றைக் கொண்டு முடிந்தது.

வழுவமைதி:

உயர்திணைப் பெயரோடு அஃறிணைப் பெயரும்
எழுவாயாக வரும் பொழுது, முடிக்கும் சொல்லை உயர்திணையில் அமைக்கவேண்டும்.


செழியனும் குதிரையும் வந்தனர்.
மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா.

இவ்வாறே, சிறப்பு, மிகுதி, இழிவு என்னும் காரணங்களால்
ஏதேனும் ஒரு திணையின் முடிபை அத்தொடர்களுக்கு
அளிப்பதால் இவை திணை வழுவமைதி ஆகின்றன.

திணைப்பொருளில் ஐயம் ஏற்படும் பொழுது, அதனைப் பொதுச்சொல்லால் அமைத்து, முடித்துக் கூறுவர்.
எ.டு.: குச்சியா கிழவரா அங்கே தோன்றுகின்ற உரு?

கீதம்
29-09-2010, 09:19 PM
திணை வழுவமைதி பற்றிய ஐயம் நீங்கியது.
மிகவும் நன்றி, குணமதி அவர்களே.

குணமதி
30-09-2010, 03:51 AM
திணை வழுவமைதி பற்றிய ஐயம் நீங்கியது.
மிகவும் நன்றி, குணமதி அவர்களே.

நன்றிக்கு மிகவும் நன்றி.

உங்களைப் போன்றோரின் ஈடுபாடு இலக்கணச் செய்திகளை எழுத ஊக்கந்தருகிறது.

nambi
30-09-2010, 04:22 AM
திணைப் பற்றிய மூன்று நிலைகளின் ஒப்பீடு அருமை!... குணமதிக்கு நன்றி!


..................................
(திணை=பகுப்பு)..... வழு= விதிகளுக்கு மாறாக...பிழை, வழாநிலை=விதிகளிலிருந்து மாறாதிருத்தல்...பிழையில்லாமை, வழுவமைதி=பிழைகள் ஏற்றுக்கொள்ளபட்ட நிலை

குணமதி
01-10-2010, 03:03 AM
திணைப் பற்றிய மூன்று நிலைகளின் ஒப்பீடு அருமை!... குணமதிக்கு நன்றி!


..................................
(திணை=பகுப்பு)..... வழு= விதிகளுக்கு மாறாக...பிழை, வழாநிலை=விதிகளிலிருந்து மாறாதிருத்தல்...பிழையில்லாமை, வழுவமைதி=பிழைகள் ஏற்றுக்கொள்ளபட்ட நிலை

நன்றி நம்பி.