PDA

View Full Version : காகிதம்

Nivas.T
29-09-2010, 08:53 AM
வெண்மையாய் இருந்த வெற்றுக் காகிதம்
ஆணிகளால் அரையப் பட்டிருந்தாலும்
அமைதி காத்தது அழகாகவே
தூரிகை துவலத்துவல நிறமேறியது
பச்சை வர்ணம் பளிச்சிட்டது
சிவப்பு வர்ணம் ஆங்காங்கே சிதறியது
நீல வர்ணம் நீண்டது
மஞ்சள் வர்ணம் மருகியது
கருப்பு வர்ணம் கனமின்றி பெருகியது
அங்கும் இங்கும் வர்ணக்கலவை
பெயரிட இயலா புதுப்புது வர்ணம்
காகிதத்தை காதலன் போல்
தொட்டு முடித்தது தூரிகை
அழகாய்த்தான் இருந்தது ஓவியம்
தனித்தன்மை இழந்தது காகிதம்

ஆதவா
29-09-2010, 09:02 AM
ரொம்ப நல்லா முன்னேறிட்டீங்கன்னு தோணுது. சபாஷ்!

ஒரு விஷயத்தை இரு தளங்க்ளாகப் பார்த்தல் என்பது உங்கள் கவிதைகளில் இது முதன்முறையாக இருக்கலாம்.
சிறப்பு வாழ்த்துக்கள்.
தொடர்ந்து இது போன்று வித்தியாசமாகவே முயற்சியுங்கள்.

அன்புடன்
ஆதவா.

Nivas.T
29-09-2010, 09:28 AM

அதற்கு ஆதவாவின் படைப்புகளும்
படிக்கட்டுகள் என்றால் மிகையாகா

நன்றி ஆதவா:)

ஆதி
29-09-2010, 09:33 AM
ரொம்ப நல்லா முன்னேறிட்டீங்கன்னு தோணுது. சபாஷ்!

ஒரு விஷயத்தை இரு தளங்க்ளாகப் பார்த்தல் என்பது உங்கள் கவிதைகளில் இது முதன்முறையாக இருக்கலாம்.
சிறப்பு வாழ்த்துக்கள்.
தொடர்ந்து இது போன்று வித்தியாசமாகவே முயற்சியுங்கள்.

அன்புடன்
ஆதவா.

ஆதவாவை அப்படியே வழி மொழிகிறேன்..

------------

காகிதம் = குழந்தை

ஆணிகளால் அரையப்பட்டிருந்தாலும் = வாழ்க்கை

ஒவ்வொரு வண்ணமும் ஒரு அனுபவம்/மாற்றம்/படிப்பினை/குணம்

பெயரிட இயலா புதுப்புது வர்ணம் = மாயை/நாகரீகம்/மேட்டிமை/பெருமை/கர்வம்

இப்படி அர்த்தப்படுத்திக் கொண்டே வந்தால், கீழுள்ள இருவரிகளின் பொருள் இன்னும் ஆழமானதாய் ஆகிவிடும்...

அழகாய்த்தான் இருந்தது ஓவியம்
தனித்தன்மை இழந்தது காகிதம்

பாராட்டுக்கள் நிவாஸ்..

Nivas.T
29-09-2010, 09:41 AM
ஆதவாவை அப்படியே வழி மொழிகிறேன்..

------------

காகிதம் = குழந்தை

ஆணிகளால் அரையப்பட்டிருந்தாலும் = வாழ்க்கை

ஒவ்வொரு வண்ணமும் ஒரு அனுபவம்/மாற்றம்/படிப்பினை/குணங்கள்

பெயரிட இயலா புதுப்புது வர்ணம் = மாயை/நாகரீகம்/மேட்டிமை/பெருமை/கர்வம்

இப்படி அர்த்தப்படுத்திக் கொண்டே வந்தால், கீழுள்ள இருவரிகளின் பொருள் இன்னும் ஆழமானதாய் ஆகிவிடும்...

அழகாய்த்தான் இருந்தது ஓவியம்
தனித்தன்மை இழந்தது காகிதம்

பாராட்டுக்கள் நிவாஸ்..

உண்மைதான் ஆதன்

நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மைதான்

க.க.க. போங்கள்

மிக்க நன்றி ஆதன்

அமரன்
29-09-2010, 09:56 AM
ஆதவாவை அப்படியே வழி மொழிகிறேன்..

------------

காகிதம் = குழந்தை

ஆணிகளால் அரையப்பட்டிருந்தாலும் = வாழ்க்கை

ஒவ்வொரு வண்ணமும் ஒரு அனுபவம்/மாற்றம்/படிப்பினை/குணம்

பெயரிட இயலா புதுப்புது வர்ணம் = மாயை/நாகரீகம்/மேட்டிமை/பெருமை/கர்வம்

இப்படி அர்த்தப்படுத்திக் கொண்டே வந்தால், கீழுள்ள இருவரிகளின் பொருள் இன்னும் ஆழமானதாய் ஆகிவிடும்...

அழகாய்த்தான் இருந்தது ஓவியம்
தனித்தன்மை இழந்தது காகிதம்

பாராட்டுக்கள் நிவாஸ்..
முக்கியமான ஒன்றை தவறி விட்டதே ஆதன்..

தூரிகை..

மீசை மயிர் குத்தி, கிச்சுக் கிச்சு மூட்டி, கொஞ்சிக் குலாவி, கட்டித் தழுவி எல்லாம் முடிஞ்ச பிறகு ‘எனக்கு எதுவுமே தெரியாது’ என்றவாறு அப்பவியாய் அங்கால இருக்குமே..

அதைத் தவற விடலாமோ.. பிடித்த கையும்...

பாராட்டுகள் நிவாஸ்.

புதுப்பாதையில் உங்கள் பயணம்.

கடினமான கருவை எளிமையான முறையில் கவிதையாக மொழி பெயர்ப்பது சாதாரணமானது அல்ல.

மீண்டும் பாராட்டுகள்.

கவிதைக்கு உண்மை பேரழகு!

ஆதி
29-09-2010, 10:02 AM
உண்மைதான் அமர், நான் தூரிகையையும், வர்ணத்தை பிரித்து பார்க்க முயற்சிக்கவில்லை, வர்ணங்கள் தூரிகை இல்லாமல் வந்து சேரவில்லை என்பதால் ஒவ்வொரு வண்ணமும் எனும் வரியிலேயே தூரிகையும் அடங்கிவிட்டது என்று நினைத்தேன்.. :)

ஆதவா
29-09-2010, 10:05 AM
அழகாய்த்தான் இருந்தது ஓவியம்
தனித்தன்மை இழந்தது காகிதம்

பாராட்டுக்கள் நிவாஸ்..

ஓவியம் எனும் மையம் தகர்த்த இதனை பின் நவீனத்துவம் என்று சொல்லலாமா ஆதன்?

ஆதி
29-09-2010, 10:31 AM
ஓவியம் எனும் மையம் தகர்த்த இதனை பின் நவீனத்துவம் என்று சொல்லலாமா ஆதன்?

ஓவியம் எனும் மையம் காகிதம் எனும் மையத்தால் தகர்க்கப்பட்டிருக்கிறது ஆதவா..

இங்கு விளிம்பு என்று எதுவுமே இல்லை..

அமெரிக்கவும் x ரஸ்யா

இந்தியா x பாக்கிஸ்தான்

பணக்காரன் x பணக்காரன்

ஏழை x ஏழை

ஹிமாயனா(புத்தம்) x மகாயனா(புத்தம்)

கிறிஸ்துவம் x கிறிஸ்துவம்

இஸ்லாம் x இஸ்லாம்

சைவம் x வைணம்

இப்படியே இங்கு சண்டை நடக்குது..

அதனால் இதனை எதிர்நவீனத்துவம் என்று சொல்லலாம்.... :)

Nivas.T
29-09-2010, 10:43 AM
முக்கியமான ஒன்றை தவறி விட்டதே ஆதன்..

தூரிகை..

மீசை மயிர் குத்தி, கிச்சுக் கிச்சு மூட்டி, கொஞ்சிக் குலாவி, கட்டித் தழுவி எல்லாம் முடிஞ்ச பிறகு ‘எனக்கு எதுவுமே தெரியாது’ என்றவாறு அப்பவியாய் அங்கால இருக்குமே..

அதைத் தவற விடலாமோ.. பிடித்த கையும்...

பாராட்டுகள் நிவாஸ்.

புதுப்பாதையில் உங்கள் பயணம்.

கடினமான கருவை எளிமையான முறையில் கவிதையாக மொழி பெயர்ப்பது சாதாரணமானது அல்ல.

மீண்டும் பாராட்டுகள்.

கவிதைக்கு உண்மை பேரழகு!

மிக்க நன்றி அமரன்

எல்லாம் புகழும் நம் மன்றத்தாரைதான் சேரும்

Nivas.T
29-09-2010, 10:48 AM
ஓவியம் எனும் மையம் காகிதம் எனும் மையத்தால் தகர்க்கப்பட்டிருக்கிறது ஆதவா..

இங்கு விளிம்பு என்று எதுவுமே இல்லை..

அமெரிக்கவும் x ரஸ்யா

இந்தியா x பாக்கிஸ்தான்

பணக்காரன் x பணக்காரன்

ஏழை x ஏழை

ஹிமாயனா(புத்தம்) x மகாயனா(புத்தம்)

கிறிஸ்துவம் x கிறிஸ்துவம்

இஸ்லாம் x இஸ்லாம்

சைவம் x வைணம்

இப்படியே இங்கு சண்டை நடக்குது..

அதனால் இதனை எதிர்நவீனத்துவம் என்று சொல்லலாம்.... :)

ஓவியம் தாங்கும் காகிதம்

புகழ் ஓவியத்திற்க்குதான் என்றாலும்
காகிதம் தன்மையை இழந்தாலும்
இதனால் அதற்கு பெருமையா?
அதனால் இது சிறப்பா? எனும் வினா எழுவது
எதிர் நவீனத்துவம் எனலாமா?

ஆதி
29-09-2010, 12:07 PM
ஓவியம் தாங்கும் காகிதம்

புகழ் ஓவியத்திற்க்குதான் என்றாலும்
காகிதம் தன்மையை இழந்தாலும்
இதனால் அதற்கு பெருமையா?
அதனால் இது சிறப்பா? எனும் வினா எழுவது
எதிர் நவீனத்துவம் எனலாமா?

இந்த பிரச்சனையில் தானே இளையராஜாவும், வைரமுத்துவும் பிரிந்தார்கள் :)

வினா எழுவது எதிர்நவீனத்துவமல்ல...

ஆதரிக்கப்படுகிற கோணமே எதிர்நவீனத்துவம்...

நல்லா யோசிச்சுப்பாருங்க.. எதற்கெதனால் சிறப்பு என்பது தர்க்கம் ?

இதனால் இது இதை இழந்துவிட்டது என்பது தீர்ப்பு/அறிவிப்பு, இதைத்தான் எதிர்நவீனம் என்று சொல்கிறோம்...

சமநிலையில் இருக்கும் இரண்டு பொருட்கள் சண்டை இட்டு கொள்ளுதல்... :)

Nivas.T
29-09-2010, 02:38 PM

புரிந்தது சாராம்சம்
அறிந்துகொண்டேன் அறியாமையை
விளங்கியது எதிர்நவீனத்துவம் :rolleyes:

தன்னியனானேன் :D

மிக்க நன்றி ஆதன் :rolleyes:

அமரன்
29-09-2010, 07:19 PM
உண்மைதான் அமர், நான் தூரிகையையும், வர்ணத்தை பிரித்து பார்க்க முயற்சிக்கவில்லை, வர்ணங்கள் தூரிகை இல்லாமல் வந்து சேரவில்லை என்பதால் ஒவ்வொரு வண்ணமும் எனும் வரியிலேயே தூரிகையும் அடங்கிவிட்டது என்று நினைத்தேன்.. :)

ஆதன்..

ஆயிரங்கண்ணால் பார்த்தால்..:)

தூரிகையைப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது..

ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு கோணம்..

யார்தான் போட்டார்கள் இப்படியொரு கோலம்.

கீதம்
29-09-2010, 08:54 PM
வெற்றுக்காகிதமொன்று
வண்ணங்களை ஏற்று
கற்றுக்கொடுக்கிறது
பல கோணங்கள்.

பாராட்டுகள், நிவாஸ்.
நன்றி, பின்னூட்ட நாயகர்களே.

Nivas.T
30-09-2010, 04:21 AM
வெற்றுக்காகிதமொன்று
வண்ணங்களை ஏற்று
கற்றுக்கொடுக்கிறது
பல கோணங்கள்.

பாராட்டுகள், நிவாஸ்.
நன்றி, பின்னூட்ட நாயகர்களே.

அழகான கவிதை

மிக்க நன்றி கீதம் அவர்களே

சிவா.ஜி
30-09-2010, 08:59 AM
நல்ல முன்னேற்றம். அழகான கவிதை...வித்தியாசமான பார்வை. வாழ்த்துக்கள் நிவாஸ்.

பின்னூட்ட நாயகர்கள்...அசத்திவிட்டார்கள்.
பாராட்டுக்கள் ஆதன், ஆதவா, அமரன்.

Nivas.T
30-09-2010, 09:17 AM
நல்ல முன்னேற்றம். அழகான கவிதை...வித்தியாசமான பார்வை. வாழ்த்துக்கள் நிவாஸ்.

பின்னூட்ட நாயகர்கள்...அசத்திவிட்டார்கள்.
பாராட்டுக்கள் ஆதன், ஆதவா, அமரன்.

மிக்க நன்றி அண்ணா

இன்னும் நிறைய வரலாம் இதுபோல்