PDA

View Full Version : அவள் ஒரு பூக்காடு.



M.Jagadeesan
29-09-2010, 03:54 AM
கண்கள் ஒக்கும் குவளைப் பூ
காதோ அழகிய சங்குப் பூ

மூக்கின் அழகோ எள்ளின் பூ
முத்துப் பற்கள் முல்லைப் பூ

பட்டுக் கன்னம் ரோஜாப் பூ
பவள உதடோ செம்பருத்தி

கையின் விரல்கள் காந்தள் பூ
காலின் மென்மை அனிச்சப் பூ

கண்ணில் தோன்றும் புன்னகையோ
விண்ணில் மலரும் மின்னல் பூ

உடலின் நிறமோ தாழம் பூ
உண்மை மனமோ தும்பைப் பூ

அழகில் வாடா மல்லிகைதான்
அருகில் வாடா என்றழைக்கும்

கட்டுக் குலையா அவள்மேனி
காதல் செய்யத் தூண்டிடுமே

தொட்டுப் பார்க்கத் துணிவில்லை
விட்டுப் பிரியவும் மனமில்லை

பார்வையில் அவளொரு பூக்காடு
பார்த்தால் வருமோ சாக்காடு?

nambi
29-09-2010, 05:21 AM
இவ்வளவு பூவையும் ஒருசேர.... பார்த்தபின் சாகத்தான் வேண்டுமோ? நல்ல பகிர்வு...அருமை! நன்றி!

ஓவியன்
29-09-2010, 05:39 AM
பெண்ணல்ல, பெண்ணல்ல ஊதாப்பூ என்ற பாடல்களை நினைவில் கொண்டு வரும் படைப்பு, வாழ்த்துகள் நண்பரே..!! :)