PDA

View Full Version : பூக்களின் சாலை தொடங்கும் வாசல் கொண்ட வீடு



சசிதரன்
28-09-2010, 04:24 PM
சாலைகள் எப்பொழுதும் அவனுக்குப்
புதிராகவே இருந்தன.

அவன் வாசலிலிருந்து தொடங்கும் ஒரு சாலையைத்
தனக்கென உருவாக்கினான்.
யாதொரு இணைப்புமற்ற அந்த ஒரு சாலையை மட்டுமே
அவன் போவதற்கும் வருவதற்கும் பயன்படுத்தினான்.

அதன் இருபுறமும் கிடைப்பதற்கரிய
பூச்செடிகளைப் பதியமிட்டான்.
பூக்களின் சாலை தொடங்கும்
வாசல் கொண்டதானது அவன் வீடு.

நகரம் முழுக்க பரவத் தொடங்கியது
அப்பூக்களின் வாசம்.
மெல்ல மெல்ல அனைவரும்
அவ்வழியே கடக்கத் தொடங்கினர்.

அனைவரின் சாலைகளும்
அச்சாலையில் இணைக்கப்பட்டன.
அவன் தடுமாறத் தொடங்கினான்.

ஒவ்வொரு நாளும் சாலைகளின் எண்ணிக்கை
கூடிக் கொண்டே இருந்தது.
தன் வாசலை இணைக்கும் சாலையைக்
கண்டுபிடிக்க முடியாமல் அவன் தோற்ற ஓர் நாளில்

பூக்களின் சாலை தொடங்கும்
வாசல் கொண்ட வீடு
ஆளின்றிப் போனது.

கீதம்
05-10-2010, 12:43 AM
அர்த்தங்கள் பல சொல்லும் அழகிய கவிதை. பாராட்டுகள், சசிதரன் அவர்களே.

உங்கள் கவிதை படித்து எனக்குத் தோன்றியது இது. தவறாக எண்ணவேண்டாம்.

அவனின்றி, அசைவின்றி,
துவண்டு கிடந்தன,
அழகிய பூக்களும் மொட்டுகளும்!

காய்ந்த செடிகளுக்குக்
கருணைகாட்ட எவருமில்லை,
அந்த ஆகாயம் உட்பட!
வாடிய செடிகளுக்கு வனப்பூட்ட
வழிப்போக்கர்களுக்கு விருப்பமில்லை!

பூக்களின் சாலையது
புறக்கணிக்கப்பட்ட சாலையாகிவிட,
இணைப்புச்சாலைகள் யாவும்
இன்னொருதிசை பார்த்து திருப்பிவிடப்பட்டுவிட,
பூக்களின் சாலை தொடங்கும்
வாசல் கொண்ட வீடு
எளிதாய் அடையாளம்
கண்டுகொள்ளப்பட்டது, அவனால்!

இம்முறை பூச்செடிகளுக்குப் பதிலாக,
முட்செடிகள் வளர்க்கத்தொடங்கினான் அவன்!

தாமரை
05-10-2010, 01:46 AM
இணைந்த சாலைகளில்
தொலைந்தது
பூக்களும்தான்..

சசிதரன்
05-10-2010, 04:49 PM
அர்த்தங்கள் பல சொல்லும் அழகிய கவிதை. பாராட்டுகள், சசிதரன் அவர்களே.

உங்கள் கவிதை படித்து எனக்குத் தோன்றியது இது. தவறாக எண்ணவேண்டாம்.

அவனின்றி, அசைவின்றி,
துவண்டு கிடந்தன,
அழகிய பூக்களும் மொட்டுகளும்!

காய்ந்த செடிகளுக்குக்
கருணைகாட்ட எவருமில்லை,
அந்த ஆகாயம் உட்பட!
வாடிய செடிகளுக்கு வனப்பூட்ட
வழிப்போக்கர்களுக்கு விருப்பமில்லை!

பூக்களின் சாலையது
புறக்கணிக்கப்பட்ட சாலையாகிவிட,
இணைப்புச்சாலைகள் யாவும்
இன்னொருதிசை பார்த்து திருப்பிவிடப்பட்டுவிட,
பூக்களின் சாலை தொடங்கும்
வாசல் கொண்ட வீடு
எளிதாய் அடையாளம்
கண்டுகொள்ளப்பட்டது, அவனால்!

இம்முறை பூச்செடிகளுக்குப் பதிலாக,
முட்செடிகள் வளர்க்கத்தொடங்கினான் அவன்!


கவிதையை தொடர்ந்து இன்னும் கொஞ்சம் நீட்டித்து வேறொரு முடிவில் முடித்திருக்கிறீர்கள் கீதம் அக்கா... உங்கள் பார்வை மிகவும் தெளிவாய் இருக்கிறது. அந்த கடைசி இரண்டு வரிகள் கச்சிதம்... :)

சசிதரன்
05-10-2010, 04:51 PM
இணைந்த சாலைகளில்
தொலைந்தது
பூக்களும்தான்..

சொற்ப வார்த்தைகளில் கவிதையின் மிக முக்கியமான விஷயத்தை சொல்லிவிட்டீர்கள் அண்ணா... பிரமிப்பாய் இருக்கிறது... :)

Ravee
05-10-2010, 05:36 PM
அருமையான கவிதை சசி , ருஷ்ய மொழிபெயர்ப்பு ஆக்கங்களை படிப்பீர்களோ, என்றோ நான் படித்த இழந்தவன் என்ற கவிதை நினைவுக்கு வந்தது ....:icon_b:

பிச்சி
09-10-2010, 02:38 PM
சசி அண்ணா கவிதை நன்றாக இருக்கிறது, :)