PDA

View Full Version : இசையின் பயனே......



ரங்கராஜன்
28-09-2010, 10:34 AM
இசையின் பயனே ........


இசை...... இதற்கான அர்த்தத்தை எப்படி விவரிப்பது, உலக மக்கள் அனைவரும் புரிந்துக் கொள்ளும் ஓரே மொழி, மௌனத்தைப் போல..

எனக்கும் இசைக்குமான உறவு எப்படிப்பட்டது என்றால், சூரியனுக்கும் சூர்யகாந்தி பூவுக்கும் உள்ள உறவை போல, சூர்யகாந்தி பூ எப்போதும் சூரியனை அடைய முடியாது என்று தெரிந்தும், சூரியன் மீது தீராத காதலை அது வைத்திருக்கிறது. சூரியன் எந்த பக்கமாக சென்றாலும் அலுக்காமல் தினமும் சூர்யகாந்திப் பூ கண்கொட்டாமல் சூரியனையே பார்த்துக் கொண்டு வாழ்கிறது. இருவருக்குமான தூரங்கள் பல கோடி கிலோ மீட்டராக இருந்தாலும் சூரியனும் வருவதை நிறத்தவில்லை, சூர்யகாந்தியும் பார்ப்பதை நிறுத்தவில்லை............ இதுதான் இசைக்கும் எனக்குமான உறவு.

இசையை பற்றி பேச எனக்கு ஞானம் எல்லாம் இல்லை, மனதை பாதிக்கும் எந்த ஒரு ஓலி என்றாலும் அதை நின்று கெட்டு விட்டு செல்வேன். அதில் இருக்கும் ராகங்கள், தாளங்களை பற்றி ஒரு துளி அறிவு கூட இல்லை என்றாலும், என்னிடம் இருப்பது எல்லாம் இரண்டே இரண்டு தான். அதை கேட்பதற்கான காதும், கேட்டதை ரசிப்பதற்கான மனமும் தான். இந்த இசை தான் பிடிக்கும் என்று கிடையாது, எல்லா விதமான இசையும் எனக்கு பிடிக்கும், என் மனநிலையைப் பொறுத்து தான் என்னுடைய இசை ரசிப்புத் தன்மையும் இருக்கும். சோகமாக இருக்கும் போது சந்தோஷமான பாடல்களைக் கேட்டால் மனது சந்தோஷமடையும், சந்தோஷமாக இருக்கும் போது சோகமான பாடல்களை கேட்டால் மனம் சமநிலை அடையும், குழப்பமான நிலையில் இதமான இசையை கேட்டால் மனம் தெளிவடையும். இவரின் இசை தான் பிடிக்கும் என்று இல்லை, எல்லார் இசையையும் ரசிப்பேன்.

இசை என்பது இறைவனை அடைவதற்கான சுலபமான வழி என்று பலர் கூறுகிறார்கள். ராகதேவன் இளையராஜாவே காற்றில் வரும் கீதமே என்ற பாடலில் ஒரு வாக்கியத்தை அவருடைய தெய்வீக குரலில் பாடுவார்.

"இசையின் பயனே இறைவன் தானே"...... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள், எப்பொழுது என் மனதில் தீராத ஒரு வித தாக்கத்தை உண்டு செய்வதுண்டு. பல நாட்களாக எனக்கு இசை கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசையுண்டு, காரணம் தெரியவில்லை, ஆனால் கற்றுக் கொள்ள வேண்டும். கொஞ்ச நாட்களாக அந்த ஆசை உறங்கி இருந்தது, ஆனால் அது இப்பொழுது விழித்துக் கொண்டது, அதற்கு காரணம் மதி. மதியின் ரூமுக்கு சென்றேன். கொஞ்ச நேரம் பேசி விட்டு கிளம்பும் போது, சசி, மதியின் ரூமின் ஓரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்டு இருந்த கிட்டாரை காண்பித்தான். நான் மதியை நோக்கி

"என்ன மச்சி வாரணம் ஆயிரம் படத்தை பார்த்தவுடன் இதை வாங்கி இருப்பியே" என்றேன்.

"ச்ச ச்ச இல்லடா, நான் பழைய ஆபிஸ்ல இருந்து வரும் போது நண்பர்கள் இதை பரிசளிச்சாங்க........ இதுக்காகவே நான் கற்றுக் கொள்ளவேண்டும்"

இதை கேட்டவுடன் எனக்குள் இருந்த இசையின் மீதான காதல் விழித்துக் கொண்டது, இவன் உயரத்திற்கும், வயதுக்கும் இவனே கிட்டார் கற்றுக் கொள்ளும் போது, நம் அகலத்திற்கு அட்லீஸ்டு நாம தவிலாவது கற்றுக் கொள்ளவேண்டும் என்று முடிவெடுத்தேன்.எந்த நிலையிலும் என்னுள் எதாவது ஒரு பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும், தெருக்களில் சாவு ஊர்வலங்கள் சென்றால் கூட கால்கள் தானாக நடனமாடும். அப்பொழுது தான் புரிந்தது இசை நம்மில் இருக்கும் ஒரு உணர்வு, நம்மில் இருக்கும் உள் உறுப்புகளைப் போல, இசை என்பது ஜீன்களில் இருக்க வேண்டும், கல்லூரி நாட்களில் என் ஜீன்களில் என்ன இசை இருக்கிறது தேடினேன்... கண்டுபிடித்தேன்.

கல்லூரி காலங்களில் தப்பு நடனம் என்னை மிகவும் கவர்ந்ததால், எங்கள் வீட்டின் பக்கத்தில் இருக்கும், பேருந்து நிலையத்தில் மூட்டை தூக்கும் ஒருவர் இருக்கிறார். இவருக்கு தொழில் மூட்டை தூக்குவது, ஆனால் பார்ட் டைமாக சாவு ஊர்வலங்களுக்கு தப்பு வாசிப்பார், அவரிடம் சென்று என்னுடைய விருப்பத்தை சொன்னேன்.

"அண்ணே எனக்கு ஒரு உதவி வேணும்"

"யார் நீ"

"இதோ பக்கத்தில தான் என் வீடு, எனக்கு ஒரு உதவி வேண்டும்"

"உன் பேரு என்ன"

"தக்ஷ்ணாமூர்த்தி"

"சரி இப்ப சொல்லு என்ன வேணும்"

"தப்பு கத்துக்கணும்"

"கத்துக்கோ"

"உங்ககிட்ட கத்துக்கணும்"

"நான் என் இஸ்கூலா நடத்துறேன்"

"இல்லண்ணா நீ வாசிச்சு நான் பார்த்து இருக்கிறேன்"

"என்னது வாசிச்சா, டேய் நான் என்ன நாதஸ்வரமாடா வாசிக்கிறேன், தப்பு அடிச்சினு சொல்லு .......பாரு இதுக்கூட உனக்கு சொல்ல தெரியலை, இதெல்லாம் கத்துக் கொடுகுற விஷயம் இல்லடா தம்பி போ"

"எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை அண்ணா, எங்க காலேஜ்ல ஆன்வல்..... பங்சன், அதுலா நான் வாசிக்கணும்"

"டேய் இதை பங்சன்ல வாசிக்க கூடாது டா தம்பி"

"இல்ல இல்ல இது கலைவிழா மாதிரி வித்தியாசமா எதாவது செய்யணும்"

"அப்ப நான் வந்து வாசிக்கிறேன்"

"இல்ல இல்ல காலேஜ் பசங்க மட்டும் தான் உள்ள விடுவாங்க"

கொஞ்ச நேரம் யோசித்தவன், சரி ஒரு 50 ரூபாய் கொடு, அந்த ரயில்வே கேட் கிட்ட சுடுகாடு இருக்குல்ல அங்க வந்துடு, சரியா 6 மணிக்கு"

"என்னது சுடுகாடா, அதுவும் 6 மணிக்கா"

"பின்ன என்ன உங்க வீட்டுல போயா வாசிக்க முடியும், உடுவாங்களா உங்க வீட்டுல"

"விடமாட்டாங்க"

"அப்புறம் என்ன சுடுகாட்டுக்கு வந்துடு"..........சரி என்று அவன் கையில் 50 ரூபாய் திணித்தேன்.

குரு பக்தியில் 5.45 மணிக்கே சுடுகாடு சென்று விட்டேன். என் குரு சரியாக டாண்ணு 6.45 லேட்டாக வந்தார். பக்கத்தில் சென்றாலே மல்லிகைப்பூ வாசனையை மிஞ்சும் அளவிற்கு சாராய வாடை, கையில் இரண்டு தப்பு கருவிகள்.

என் கையில் ஒரு தப்பை கொடுத்து அடிக்க சொன்னார். சும்மா தெரிந்ததை அடி என்றார், நானும் வாசித்தேன், திரும்பவும் வாசிக்க சொன்னார். முதல் முறை வாசித்தது வரவில்லை இரண்டாவது முறை வேறு மாதிரியாக வந்தது. மூன்றாவது முறை வாசிக்க சொன்னார், அது இரண்டாவதை விட வேறு மாதிரியாக இருந்தது. என்னை பார்த்து விட்டு அவர் சொன்னார் பாருங்க ஒரு விளக்கம் இதுவரை ஒரு எவனும் இசைக்கு அப்படி ஒரு விளக்கம் கொடுத்து நான் கேள்விப் பட்டது இல்லை.

என் கண்ணை நேராக பார்த்து அவர் சொன்னார்.

"பாத்தியா முதல் முறை வாசிச்சது உனக்கு இரண்டாவது முறை வரல, இரண்டாவது வாசிச்சது மூன்றாவது முறை வரவில்லை..... அப்போ நீ உண்டாக்கியது சத்தம்,......... இசையின்னா நீ எத்தனை முறை வாசித்தாலும் அதே அளவு வரவேண்டும்..... முதல் வாட்டி அடித்தது போலவே ஆயிரத்தி ஓராவது வாட்டியும் அதே மெட்டில் வரவேண்டும்" என்றார்.

இவர் சொன்னதை நான் noise என்ற communication பாடத்தில் நான் மூன்றாம் ஆண்டு படித்து இருக்கிறேன். மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு இது எப்படி தெரிந்தது, இசை அவனுக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்து இருக்கிறது. என் கையில் தப்பை கொடுத்து அவர் கையில் தப்பை எடுத்து அடிக்க ஆரம்பித்தார். என்னையும் பின் பற்ற சொன்னார்.

"டன் டன் டன் டன்" இப்படியே அடிக்க சொன்னார். ஐந்து நிமிடமாக இதையே செய்யச் சொன்னார். எனக்கு அலுத்து விட்டது, திடீரென ஒரு மெட்டை உள்ளே சேர்த்தார்.

"டன் டன் டன் டன்டனகடி டன் டன் டன் டன்டனகடி டன் டன" இது ஒரு ஐந்து நிமிடம். மறுபடியும் உள்ள சேர்த்தார்

"டன்டனகடி டனுக்கு னகடி, டன்டனகடி டனுக்கு னகடி" பதினைந்து நிமிடத்தில் என் விரல்கள் கசாப்பு கடையில் தொங்கிக் கொண்டு இருக்கும் உரித்துப் போட்ட கோழிகளை போல கீழ் நோக்கி தொங்கின, விரல்களில் செம வலி........


(தொடரும்...)

விகடன்
28-09-2010, 10:46 AM
டண்டணக்கா... டணக்குணக்கா...

அடிங்க தக்ஸ் அடிங்க....

தீபா
28-09-2010, 10:57 AM
தப்பு” அடித்தாலும் தப்பாமல் அடிக்கவேண்டும்... அதைத்தானே அவர் சொல்கிறார்!!
இசை என்பது ஒலியின் தூய வடிவம். அது ஒலிக்குறியீடுகளை உள்ளடக்கியது. அதனால் அது பொதுமொழியாகிறது.

எல்லோருக்குமே இசையின் மீது ஆர்வம் அதிகமுண்டு இல்லையா ஔரங்கசீப் தவிர..... (சில வகை சூரிய காந்திப் பூக்கள் சூரியனைப் பார்க்காதாம்..)

இசையனுபவக் கட்டுரை நன்றாக இருக்கிறது.
இசையோடு பிசைந்து தருவதால்.
இசையுங்கள் இன்னும்.///

ரங்கராஜன்
28-09-2010, 11:01 AM
(சில வகை சூரிய காந்திப் பூக்கள் சூரியனைப் பார்க்காதாம்..)



பார்வையில்லாத பூக்களாக இருக்கும், மனக்கண்ணில் சூரியனை அவை பார்க்கும் என்று நினைக்கிறேன்

தீபா
28-09-2010, 11:10 AM
பார்வையில்லாத பூக்களாக இருக்கும், மனக்கண்ணில் சூரியனை அவை பார்க்கும் என்று நினைக்கிறேன்

முரண்பாடு!! :eek:

குறியீடுகளின் தூண்டலில் அல்லது கவர்ச்சியில் சுண்டி, இசையிழுத்து மனம் அறிதலே அவ்விசைக்கான முழுப்பயனுமாகும்.
காதாரக் கேளாதவர் மனதாரக் கேட்பாரோ?

ஆதி
28-09-2010, 11:20 AM
தப்படித்தலில் இருக்கிற விஷயம் பெரிய பெரிய கருவிகளில் கூட இல்லை என்பது என் தனிப்பட்ட எண்ணம்..

தப்படிப்பதில் பல நுணுக்கங்கள் உண்டு, சின்ன சின்ன விதத்தில் தாளங்கள் மாறும்..

டன் டன் டன், டன், டன்

டன் டன் டன், டன், டன்

டன் டன் டன், டனுக்க, டன், டன்

டன் டன், டன் டன், டன் டன், டன் டன்
------------------

ரஞ் ஜஞ் ஜன், ஜஞ் ஜன்
ரஞ் ஜஞ் ஜன்..
ரஞ் ஜஞ் ஜன், ஜஞ் ஜன்
ரஞ் ஜஞ் ஜன்

ரஞ் ஜஞ் ஜன், ரஞ் ஜஞ் ஜன்
ரஞ் ஜஞ் ஜன், ரஞ் ஜஞ் ஜன்

இந்த மாதிரி..

எந்த கச்சேசியை எடுத்துக்கிட்டாலும் டிரம்மர்க்கு கிடைக்கிற ஹோப் யாருக்கும் இருக்காது..

அதான் தோல் கருவியின் சிறப்பாம்சம்..

வாழ்த்துக்கள் டா..

அமரன்
28-09-2010, 08:57 PM
தப்பு என்னங்க தப்பு..

மேசையில் அடிச்சுப், பாட்டுப்பாடி சந்தோசித்த காலங்கள் சொல்லுமே இசையின் இரகசியத்தை.

மேசையில் இருகையால் அடித்ததை, ஒரு கைக்குள் கொண்டு வந்து விரல்களில் செலுத்தி போதை ஏத்தி, கருவியின் முகத்தில் விளையாட விட்டால் கிளம்பும் பாருங்க இசை, எங்கேயும் கத்துக்க முடியாது.

இதை விடச் சுலபமாக தோலிசை நுணுக்கம் தெரிய வேணும் என்றால், வாய்க்குள் நாக்கு மெட்டில் சுழல தப்பில் விரல் நிச்சயம் ஒத்தாடும். தோலிசை நம்மில் துள்ளி விளையாடும்.

இசைந்தாடட்டும் தக்ஸ்..

த.ஜார்ஜ்
29-09-2010, 03:25 PM
ஒரு இசை ஆல்பம் போட்டிருவோமா. எழுபது:முப்பதுல ஒப்பந்தம் தயார்.பண்ணிறவா. [தப்ப தப்பாம படிச்சி முன்னுக்கு வாங்க மக்களே]

Nivas.T
29-09-2010, 03:58 PM
எந்த இசைக் கருவி வசித்தாலும்
ஆடத்தோணுமோ தோணாதோ
தப்பு வாசிப்பைக் கேட்டாலே போதும்
கால்கள் பரபரக்கும்

இப்படிதான் "டண்டணக்கர......ணக்கர........ணக்கர
டண்ணக்கர....ணக்கர....ணக்கர
டண்டணக்கர....ணக்கர.....ணக்க
டண்ணக்கர...ணக்கர...ணக்கர
டண்டணக்கர......ணக்கர........ணக்க
டண்ணக்கர..ணக்கர..ணக்கர
டண்ணக்கர..ணக்கர..ணக்கர"

தொடருங்க தக்ஸ்

Mano.G.
01-10-2010, 07:25 AM
இசையின் பயனே ........



"அண்ணே எனக்கு ஒரு உதவி வேணும்"

"யார் நீ"

"இதோ பக்கத்தில தான் என் வீடு, எனக்கு ஒரு உதவி வேண்டும்"

"உன் பேரு என்ன"

"தக்ஷ்ணாமூர்த்தி"

"சரி இப்ப சொல்லு என்ன வேணும்"

"தப்பு கத்துக்கணும்"

"கத்துக்கோ"

"உங்ககிட்ட கத்துக்கணும்"

"நான் என் இஸ்கூலா நடத்துறேன்"

"இல்லண்ணா நீ வாசிச்சு நான் பார்த்து இருக்கிறேன்"

"என்னது வாசிச்சா, டேய் நான் என்ன நாதஸ்வரமாடா வாசிக்கிறேன், தப்பு அடிச்சினு சொல்லு .......பாரு இதுக்கூட உனக்கு சொல்ல தெரியலை, இதெல்லாம் கத்துக் கொடுகுற விஷயம் இல்லடா தம்பி போ"

"எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை அண்ணா, எங்க காலேஜ்ல ஆன்வல்..... பங்சன், அதுலா நான் வாசிக்கணும்"

"டேய் இதை பங்சன்ல வாசிக்க கூடாது டா தம்பி"

"இல்ல இல்ல இது கலைவிழா மாதிரி வித்தியாசமா எதாவது செய்யணும்"

"அப்ப நான் வந்து வாசிக்கிறேன்"

"இல்ல இல்ல காலேஜ் பசங்க மட்டும் தான் உள்ள விடுவாங்க"

கொஞ்ச நேரம் யோசித்தவன், சரி ஒரு 50 ரூபாய் கொடு, அந்த ரயில்வே கேட் கிட்ட சுடுகாடு இருக்குல்ல அங்க வந்துடு, சரியா 6 மணிக்கு"

"என்னது சுடுகாடா, அதுவும் 6 மணிக்கா"

"பின்ன என்ன உங்க வீட்டுல போயா வாசிக்க முடியும், உடுவாங்களா உங்க வீட்டுல"

"விடமாட்டாங்க"

"அப்புறம் என்ன சுடுகாட்டுக்கு வந்துடு"..........சரி என்று அவன் கையில் 50 ரூபாய் திணித்தேன்.

குரு பக்தியில் 5.45 மணிக்கே சுடுகாடு சென்று விட்டேன். என் குரு சரியாக டாண்ணு 6.45 லேட்டாக வந்தார். பக்கத்தில் சென்றாலே மல்லிகைப்பூ வாசனையை மிஞ்சும் அளவிற்கு சாராய வாடை, கையில் இரண்டு தப்பு கருவிகள்.



(தொடரும்...)

நான் ரசித்து சிரித்து சிந்திக்க வைத்த வரிகள்
அருமை டா தம்பி

பாரதி
01-10-2010, 07:59 AM
இசையின் பயனாக எங்களுக்கு ஒரு சிறப்புத்திரி கிடைத்திருக்கிறதே!
வழக்கமான துள்ளல் நடையில் படிக்க நன்றாக இருக்கிறது.
அசத்துங்க மூர்த்தி!!

govindh
03-10-2010, 11:58 AM
இசையைத் தொடருங்கள்...
தொடர்ந்து இசையுங்கள்...

நாங்களும் வாசிக்கிறோம்...
வாழ்த்துக்கள்...

samuthraselvam
05-10-2010, 03:55 AM
ஆஹா எதை செய்தாலும் தப்பு தப்பா செய்யும் பழக்கம் போதலைன்னு தப்பும் அடிக்க கத்துகிட்டாச்சா? உனக்கு சொல்லிக்கொடுத்ததுக்கு அப்புறம் அவர் நல்லாத்தான் வாசிச்சாரா? மன்னிக்கவும் தப்பு அடிச்சாரா?

ஏன் கேட்கிறான்னா உனக்கு சொல்லிக் கொடுத்ததுக்கு அப்புறம் அவர் மறந்திருப்பாரே? அதான் கேட்டேன்.... :lachen001: