PDA

View Full Version : நிராகரிக்கப்படும் சரணாகதிகள்

கீதம்
28-09-2010, 03:03 AM
நான் எதிர்கொள்ளவிருக்கும் உன்னைப்பற்றிய
எவ்வித முன்னெச்சரிக்கைக் குறிப்புகளும் தரப்படாமலேயே
கவசம் தரிக்கப்பட்டும், கையில் வாள் திணிக்கப்பட்டும்
வியூகத்துக்குள் விரட்டப்படுகிறேன்,
ஒற்றை வீரனாய்!

தினவெடுத்த உன் தோள்களையும்,
திசையெங்கும் விரவி நிற்கும்
உன் பராக்கிரமப் படைகளையும்
பார்த்துப்பதறி,
உயிர்ப்பயம் மேலோங்க,
மருண்டு நிற்கும் என்நிலையைப்
பரிகசித்து சிரிக்கிறாய் நீ!

எதிர்ப்பதுன்னை எந்நாளும் சாத்தியமில்லை
என்பதை உணர்ந்ததாலும்,
புறமுதுகிட்டோடுதல் போராளிக்கழகில்லை
என்பதை அறிந்திருப்பதாலும்
வீரமரணம் ஏற்கும் விவேகமில்லாததாலும்
சமயோசிதமாய் உன்னிடம்
சரணாகதி அடைகிறேன்.

ஒப்படைக்கப்பட்ட என் தோல்விகளை
ஒப்புக்கும் பரிசீலனை செய்கிறாயில்லை!
மண்டியிட்டுக் கிடக்கும் என்னை
மயிர்பிடித்தெழுப்பி நிறுத்துகிறாய்!
குரூரப் புன்னகையுடன்
குத்துவாளொன்றை என் கரங்களில் திணித்து
கொல்லென்று சொல்லி
கொல்லென்று நகைக்கிறாய்!

கத்தியை விட்டெறிந்துவிட்டு மீண்டும்
உன் காலடி பற்றுகிறேன்.
என் சரணாகதிகள் யாவும்
நிர்தாட்சண்யத்துடன் நிராகரிக்கப்படுகின்றன.

யுத்தகைதியென்று முத்திரைகுத்தி
அவமானச் சின்னங்களை அணிவித்து
ஊர்வலமாய் இழுத்துவருவதிலேயே
உளம்நிறை சுகம் காண்கிறாய்!
கதியற்ற நானும் வழியற்று உடன்படுகிறேன்,
போரிலே என்னைப் பெருவெற்றி கொண்டதாய்
முரசறைந்து நீ முழங்கும் முழக்கத்துக்கு!

அல்லிராணி
28-09-2010, 03:56 AM
ஒற்றை மகளை
கப்பம் கட்டி
போருக்கனுப்பி
அடிமையாகினான் தானும்

பாவம் அந்த
"அப்பா"வி மன்னன்.

(இருந்தாலும் மன்றத்தில் இருக்கும்பொழுது மனம் செய்து கொண்டவர்களை இப்படி எல்லாம் கிண்டல் பண்ணப்படாது.. முக்கியமா ஓவியன்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21064
அதான் பால் மா(ஊ?)ற்றினேன்)

கீதம்
28-09-2010, 10:15 AM

பின்னூட்டத்துக்கு நன்றி, அல்லிராணி அவர்களே.

ஒரு குவளையில் இருந்த பாலை இன்னொரு குவளையில் ஊற்றிக் கொடுத்தேன். நீங்கள் மறுபடியும் பழைய குவளையிலேயே மா(ஊ)ற்றிவிட்டீர்கள்.

Nivas.T
28-09-2010, 11:39 AM
உறுதி கொண்டேன் கவசம் தரிக்க
வாளை எடுத்தேன் உன் சிரத்தை அறுக்க
காலனின் கையில் வீழ்ந்தாலும் வீழ்வேன்
உன்காலில் விழுவேன் என்று எண்ணாதே
சரணாகதியடைவதை விட
மரணகதி அடைவதே மேல்

வீட்டுக்கு வீடு வாசப்படி:):D

அருமையான கவிதை

கீதம்
04-10-2010, 03:00 AM
உறுதி கொண்டேன் கவசம் தரிக்க
வாளை எடுத்தேன் உன் சிரத்தை அறுக்க
காலனின் கையில் வீழ்ந்தாலும் வீழ்வேன்
உன்காலில் விழுவேன் என்று எண்ணாதே
சரணாகதியடைவதை விட
மரணகதி அடைவதே மேல்

வீட்டுக்கு வீடு வாசப்படி:):D

அருமையான கவிதை

வீறுகொண்ட பின்னூட்டத்துக்கு என் நன்றியும், பாராட்டும், நிவாஸ்.

ஆதவா
04-10-2010, 02:39 PM
ரொம்ப நல்லாயிருக்குங்க கீதம்.
முழுக்கவும் உள்ளர்த்தங்களை மறைத்துக் கொண்டு போர், வீரன், சரணாகதி, போர்க்காலக் கவிதையா கச்சிதமாய் முடித்ததும் அருமை!
ஆனால் நீங்கள் மறைமுகமாக ஓவியனைத்தான் தாக்குகிறீர்களோ என்று அல்லிராணி சொல்லித்தான் எனக்குத் தெரியும் :D

இந்தக் கவிதையைப் படித்து முடித்தபிறகு, கடவுளைத்தான் நினைத்துக் கொண்டேன். ஒவ்வொருமுறையும் பக்தன் சரணாகதியென நிற்கும் பொழுதெல்லாம் கடவுள் நம்மை கைதியாக்கி வெற்றி கொள்கிறார்...
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள்..... இறைவன் மனைவியை வரமாகக் கொடுத்தால் அவரைப் போலவேதான் நடந்து கொள்வாளோ மனைவி?

பயமாகத்தான் இருக்கிறது!

அன்புடன்
ஆதவா/

சிவா.ஜி
04-10-2010, 04:22 PM
இனி கல்யாண ஊர்வலத்தில்..தலை குணிந்துப் போகும் மணப்பெண்ணைப் பார்க்கும்போது...இந்தக் கவிதை நினைவுக்கு வரும்.

அதே சமயம்.....எங்கோ ஒரு ஊர்வலத்தில்....தலை குணிந்து நடக்கும்..மணமகனைப் பார்க்கும்போதும்....இதேக் கவிதை நினைவுக்கு வரும்.

குறியீட்டுக் கவிதைகளில் கலக்குறீங்கம்மா கீதம். பாராட்டுக்கள்.

கீதம்
04-10-2010, 09:35 PM

பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி ஆதவா.

ஓவியன் கதை என்னவென்று எனக்கு உண்மையிலேயே தெரியாது மக்களே. அதனால் என்னை அவரோடு வம்புக்கு இழுக்கவேண்டாம்.:icon_ush:

அப்புறம்.....
அது என்ன அவங்களை நினைத்து பயமாக இருக்கிறது? அவங்கதானே பயப்படணும்? :D
(வரப்போகிறவரின் பெயர் ஜெஸிகாவாக இருந்துவிட்டால் பிரச்சனையில்லை. இல்லையெனில்.......? எனக்கு உங்கள் நிலையை நினைத்து பாவமாக உள்ளது.):icon_rollout:

கீதம்
04-10-2010, 09:38 PM
இனி கல்யாண ஊர்வலத்தில்..தலை குணிந்துப் போகும் மணப்பெண்ணைப் பார்க்கும்போது...இந்தக் கவிதை நினைவுக்கு வரும்.

அதே சமயம்.....எங்கோ ஒரு ஊர்வலத்தில்....தலை குணிந்து நடக்கும்..மணமகனைப் பார்க்கும்போதும்....இதேக் கவிதை நினைவுக்கு வரும்.

குறியீட்டுக் கவிதைகளில் கலக்குறீங்கம்மா கீதம். பாராட்டுக்கள்.

ஆகமொத்தம் பலியாடுகளைப் பார்க்கையில் இக்கவிதை உங்கள் நினைவுக்கு வரும். அப்படிதானே அண்ணா?:)

பின்னூட்டத்துக்கும், பாராட்டுக்கும் மிகவும் நன்றி, அண்ணா.

பிச்சி
09-10-2010, 02:45 PM
நன்றாக இருக்கிறது அக்கா. போர்களத்தில் புரமுதுகிட்டால் பிடிபட்ட பிறகு சாவதே மேல்.

நிறைய விஷயங்களை கவிதை பதுக்கி வைத்திருக்கிறது

நட்புடன்
பிச்சி

அனுராகவன்
09-10-2010, 07:04 PM
பிச்சி பூ போடுமா...
எங்க ரொம்ப நாளா மன்றம் வருவதில்லை போல..

கீதம்
11-10-2010, 09:43 PM
நன்றாக இருக்கிறது அக்கா. போர்களத்தில் புரமுதுகிட்டால் பிடிபட்ட பிறகு சாவதே மேல்.

நிறைய விஷயங்களை கவிதை பதுக்கி வைத்திருக்கிறது

நட்புடன்
பிச்சி

மிகவும் நன்றி, பிச்சி.

Narathar
12-10-2010, 03:27 AM
நீங்கள் எதை நினைத்து எழுதினீர்களோ எனக்கு இக்கவிதை "புனர்வாழ்வு" பெறும் நம் சகோதரர்களையே நினைவு படுத்துகின்றது......

நான் எதிர்கொள்ளவிருக்கும் உன்னைப்பற்றிய
எவ்வித முன்னெச்சரிக்கைக் குறிப்புகளும் தரப்படாமலேயே
கவசம் தரிக்கப்பட்டும், கையில் வாள் திணிக்கப்பட்டும்
வியூகத்துக்குள் விரட்டப்படுகிறேன்,
ஒற்றை வீரனாய்!

நிதர்சனமான உண்மை! அவர்களில் முக்கால்வாசிப்பேருக்கு ஆயுதம் கைகளில் திணிக்கப்பட்டுத்தான் இருக்கின்றது.... அதைப்பற்றி பேசுவதானால் இது விவாதமாகிவிடும் பின்னர் அமரனவர்கள் சமாதானத்தூதுவராக வரவேண்டியிருக்கும்.......

(தளத்தில் இருப்பவன் என்ற முறையிலும் மனிதாபிமான முறையில் அவர்களை அடிக்கடி சந்திக்கின்றவன் என்ற முறையிலும் இங்கு எழுதுபவர்களை விட அவர்கள் மன உணர்வுகளை நான் நன்கறிவேன்........)

கடந்தகால கள நிலவரங்களை வைத்துப்பார்க்கையில் அவர்களை கோழைகளாக உங்களில் பலர் நினைக்கலாம்... அல்லது உங்கள் சுடு எழுத்துக்களால் அவர்களை சுட்டெரிக்கலாம்.... ஆனால் அவர்கள் கோழைகள் அல்ல... உண்மையான வீரர்கள்

யதார்த்த உலகுக்கு முகம் கொடுக்க நினைத்த உண்மையான வீரர்கள்... அவர்களை சரணாகதியடைந்தவர்கள் என்பதையோ அன்றி புனர்வாழ்வு பெறுபவர்கள் என்றழைப்பதைக்கூடவோ என் மனம் விரும்பாமல் விட்டாலும் அவர்களை விழித்தெழுத ஒரு சொல் வேண்டுமே???? முன்னாள் போராளிகள்.... அவர்கள் இனி நம் சமூகத்துக்கு ஒரு புது வழி காட்டட்டும்.

ஆயுதப்போராட்டத்தின் அவலங்களை இந்த உலகத்துக்கு உரத்துச்சொல்லட்டும்!

கீதம்
18-10-2010, 10:57 PM
நீங்கள் எதை நினைத்து எழுதினீர்களோ எனக்கு இக்கவிதை "புனர்வாழ்வு" பெறும் நம் சகோதரர்களையே நினைவு படுத்துகின்றது......

நிதர்சனமான உண்மை! அவர்களில் முக்கால்வாசிப்பேருக்கு ஆயுதம் கைகளில் திணிக்கப்பட்டுத்தான் இருக்கின்றது.... அதைப்பற்றி பேசுவதானால் இது விவாதமாகிவிடும் பின்னர் அமரனவர்கள் சமாதானத்தூதுவராக வரவேண்டியிருக்கும்.......

(தளத்தில் இருப்பவன் என்ற முறையிலும் மனிதாபிமான முறையில் அவர்களை அடிக்கடி சந்திக்கின்றவன் என்ற முறையிலும் இங்கு எழுதுபவர்களை விட அவர்கள் மன உணர்வுகளை நான் நன்கறிவேன்........)

கடந்தகால கள நிலவரங்களை வைத்துப்பார்க்கையில் அவர்களை கோழைகளாக உங்களில் பலர் நினைக்கலாம்... அல்லது உங்கள் சுடு எழுத்துக்களால் அவர்களை சுட்டெரிக்கலாம்.... ஆனால் அவர்கள் கோழைகள் அல்ல... உண்மையான வீரர்கள்

யதார்த்த உலகுக்கு முகம் கொடுக்க நினைத்த உண்மையான வீரர்கள்... அவர்களை சரணாகதியடைந்தவர்கள் என்பதையோ அன்றி புனர்வாழ்வு பெறுபவர்கள் என்றழைப்பதைக்கூடவோ என் மனம் விரும்பாமல் விட்டாலும் அவர்களை விழித்தெழுத ஒரு சொல் வேண்டுமே???? முன்னாள் போராளிகள்.... அவர்கள் இனி நம் சமூகத்துக்கு ஒரு புது வழி காட்டட்டும்.

ஆயுதப்போராட்டத்தின் அவலங்களை இந்த உலகத்துக்கு உரத்துச்சொல்லட்டும்!

உங்கள் பின்னூட்டம் கண்டு மனம் கனத்துத் திரும்பிவிட்டேன்.

நிதர்சனம் சொல்லும் வரிகள் உங்களுடையவை. அந்த சகோதரர்களின் வீரத்திற்குமுன் தலைவணங்கி நிற்கிறேன்.

Ravee
30-10-2010, 04:29 PM
அவமானச் சின்னங்களை அணிவித்து
ஊர்வலமாய் இழுத்துவருவதிலேயே
உளம்நிறை சுகம் காண்கிறாய்!

இந்த வரிகளில் வலி அதிகம் இருகிறதே .... அக்கா .....சில நேரங்களில் சமிபத்தில் கமல் சொன்னது நிஜம்தானோ என்று நினைக்கிறன். பாரதி , பக்த மீராவை போன்றவர்களுக்கோ இல்லறம் துயரம்தான் தரும் ....

உங்கள் கருக்களின் களங்கள் பலவாறாக மாறுவது உங்கள் பரவலான சமூக கண்ணோட்டத்தை காட்டுகிறது. உங்கள் ஆஸ்திரேலியத் தனிமை உங்களுக்கு பல விஷயங்களை தருகிறது. உண்மையில் நீங்கள் உரிய காலத்தில் வேண்டிய காலத்தை தந்த காலதேவதைக்கு நன்றி சொல்ல வேண்டும்..... :)

அமரன்
30-10-2010, 06:25 PM
எதற்காகக் குனிய வேண்டும்
சரணாகதி அடையும்
வீரமணிகளின் தலைகள்..!!

சூட்டப்பட்ட மகுடம் விழுந்துடாதா?

கீதம்
20-02-2011, 06:35 AM

எனக்கு வரம் தந்த காலதேவதை உங்களுக்குக் கொடுத்த வரம் பறிக்கப்பட்டதோவென அஞ்சுகிறேன். பின்னூட்டத்துக்கு நன்றி ரவி.

கீதம்
20-02-2011, 06:36 AM
எதற்காகக் குனிய வேண்டும்
சரணாகதி அடையும்
வீரமணிகளின் தலைகள்..!!

சூட்டப்பட்ட மகுடம் விழுந்துடாதா?

அட, இந்தச் சிந்தனையும் நல்லாதான் இருக்கு.

நன்றி அமரன்.