PDA

View Full Version : மறந்துவிட்டேன்



ஆதவா
27-09-2010, 04:43 PM
குமிழ்களால் உருவான
பிம்பங்கள் ஒழுகி வழிகின்றன
சதுரங்களாக தெரிந்தவர்கள்
மழுங்கிக் கிடக்கிறார்கள்
மெல்ல மெல்ல
துளிர்ந்து கொண்டிருந்த விடியல்
தெளிவற்று பரவுகிறது
இரவுகால பொருட்கள்
அபெர்ச்சரின் அளவைப்
பெரிதாக்குகின்றன
எதிரே யாரோ ஒருவர்
ஆணோ பெண்ணோ
மறைந்து போகிறார்கள்
......................... சொல்கிறீர்கள்
நீங்கள் சொல்வது உண்மைதான்
மறந்துவிட்டேன்
கண்ணாடி அணிவதற்கு

அனுராகவன்
27-09-2010, 07:32 PM
நீங்கள் சொல்வது உண்மைதான்
மறந்துவிட்டேன்
கண்ணாடி அணிவதற்கு
சிரிப்புதான் வருது..
இப்படிதான் பலர் தன் கையில் என்ன இருக்கிறது என்ரு தெரியாமல் திணறுகிறார்கள்..

கவி பலே!:icon_35:
எப்படி உங்களால் இப்படி சிந்திக்க முடியுது தெரியல..
அப்படி நடக்கும் நிகழ்ச்சியே இங்கௌ கவியாக..:angel-smiley-026:

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
29-09-2010, 02:04 PM
உண்மையிலேயே ரசனையான கவிதைதான். வித்தியாசமான தளத்தில் வித்தியாசமான கரு. பாராட்டுக்கள்.