PDA

View Full Version : மைக்ரோசாப்ட் உரை ஆவணத்தில் அஞ்சல் பிணை (எம் எஸ் வேர்ட் 2003 மெயில் மெர்ஜ்)



nambi
27-09-2010, 04:25 PM
உரைஆவணத்தில் (மெயில் மெர்ஜ்) அஞ்சல் பிணை செய்வது பற்றிய ஒரு சிறு முயற்சி....பபவகைகளில் அஞ்சல் பிணை ஏற்படுத்தலாம் நாம் ஏற்கனவே ஏதாவது தரவு ஏற்படுத்தியிருந்தாலும் அதிலிருந்து முகவரிகை மட்டும் தனியே பிரித்து எடுத்து (டேட்டா) தரவு கோப்பாக மாற்றி வைத்துக்கொள்ளலாம் அதை இம்மாதிரி கடித போக்குவவரத்தின் போது பயன்படுத்தலாம். அவ்வளவு தூரம் இப்போதைக்குப் போகப்போவதில்லை...

(ஒரேமாதிரியான கடிதம் பலபேருக்கு நகலாக அனுப்ப இந்த அஞ்சல் பிணை வெகுவாகப்பயன்படுகிறது. ஒரு கடிதத்திற்கு தேவையான அனைத்தையும் அதாவது முகவரி வில்லைகளையும் இதன்மூலம் உருவாக்கலாம்.)

நாமே ஒரு முகவரி கோப்பை உருவாக்கி அதை பயன்படுத்துவது எப்படி என்பதை மட்டும் இப்பொதைக்கு பகிரலாம்....

(இதில் (தரவு தாளில்) உள்ள முகவரிகளை பொருட்படுத்தவேண்டாம்...நகைச்சுவை காட்சியிலிருந்து களவாடியது)


முகவரிக் கோப்பை படத்தில் உதாரணத்திற்கு காட்டியுள்ளவாறு அவரவர் விருப்பத்திற்கேற்ப தரவு தாளில் (எக்சலில் (2003)) உருவாக்கி கொள்ளவும்...அதை பின்பு டேட்டா கோப்பாக அதில் குறிப்பிட்டவாறு சேமித்து வைத்துக்கொள்ளவும். இதற்கு பின் விளக்கங்களை ஒரளவுக்கு முயிற்சித்து அந்தந்த படத்தின் பக்கத்திலியே குறிப்பிட்டிருக்கிறேன். ஆகையால் தனியான விளக்கம் தேவையில்லை...அதன்படி முயற்சித்து பாத்தால் சரிவர இயங்கும்.

(குறிப்பு...அஞ்சல் பிணை (மெயில் மெர்ஜ்) தரவு தாள் 2000....2003...2007 போன்றவைகளில் ஒவ்வொன்றிலும் மாறுபட்ட பயன்பாடுகளாக சிறப்பம்சங்களாக கொடுக்கப்பட்டிருக்கும். இது 2003 க்கு சரிவர இயங்கும் என நினைக்கிறேன்.)

முதலில்......கீழ்கண்டவாறு முகவரிகளை உருவாக்கி அதை படத்தில் குறிப்பிட்டவாறு சேமிக்கவும்.....

http://i837.photobucket.com/albums/zz297/nambitn/MailmergeDataFileSaving.jpg



அதற்குப்பின்.....உரை ஆவணம் திறந்து கருவிகள்(டூல்ஸ்)..... கடிதம் மற்றும் அஞ்சல்கள்....அஞ்சல் பிணை தேர்வுசெய்தபின் உரைஆவணத்தின் வலது பக்கத்தில் செயற்பாட்டு பட்டி உருவாகி இருக்கும். அதில் கடிதங்கள் என்பது தானாக (டிபால்ட்டாக தேர்வாகி இருக்கும்) அதற்குபின் உரை ஆவணத்திற்கு மிக கீழே இருக்கும் கட்டளையான ''ஆவணத்தை தேர்வு செய்'' என்று குறிப்பிட்ட கட்டளை மீது சொடுக்கினால் ''அடுத்து பெறுநர்களை தேர்வு செய்'' என்ற கட்டளைக்கு மாறும் அதே வேளையில் டாஸ்க் பேனின் மேல் பகுதில் ''மேய்தல்'' (பிரவுசிங்) என்ற தேர்வு உருவாகியிருக்கும்

http://i837.photobucket.com/albums/zz297/nambitn/TASKPANEDISPLAY.jpg


அதை சொடுக்கினால்..........

http://i837.photobucket.com/albums/zz297/nambitn/OPENINGDATAFILETOTHEWORD.jpg

பின்பு.....

http://i837.photobucket.com/albums/zz297/nambitn/SHEETDISPLAYWINDOW.jpg

பின்பு.....

http://i837.photobucket.com/albums/zz297/nambitn/DATASCORRECTIONLIST.jpg

பின்பு.... உரை ஆவணத்தில் கடிதம் வரைகின்ற வேலை.....அதற்கு முன் அஞ்சல் பிணை கருவிபட்டியை கட்டளை பட்டியில் கொண்டு வந்து நிறுத்திக்கொள்ளவேண்டும்.

(கருவிகள்....கடிதங்கள் மற்றும் அஞ்சல்கள் என்ற தேர்வின் மூலம் கருவிப்பெட்டியை காண்பி என்பதை சொடுக்கினால் கருவிப்பெட்டி கட்டளை மெனுவில் தெரியும், இல்லையென்றால் கருவிகள்....விருப்பத்தேர்வுகள் சென்று அந்தக் கருவிக்கான தேர்வை கிளிக் செய்தால் கட்டளை மெனுவில் தோன்றும்)

http://i837.photobucket.com/albums/zz297/nambitn/DESIGNFORMLETTERSAVINGSTEPS1.jpg

அதன் பின்பு......மேற்குறிப்பிட்டபடி கடிதத்தை கீழ்கண்டவாறு வடிவமைக்கலாம்....

http://i837.photobucket.com/albums/zz297/nambitn/FORMLETTER11.jpg



அதன் பின்பு ஏதாவது திருத்தவேண்டுமென்றால் செயற்பாட்டு பட்டியில் உள்ள தேர்வுகளை சொடுக்கி முகவரிகளில் ஏதாவது மாற்றம் செய்யலாம் இல்லையென்றால் அடுத்த செயற்பாட்டிற்கு ''அடுத்து உங்கள் கடிதத்தை'' என்பதை சுட்டி செல்லலாம்..


http://i837.photobucket.com/albums/zz297/nambitn/TASKPABEADDLISRCORRECTION.jpg

இதற்கு பின் வருவதையும் மேற்கூறியமுறையில் தேவைப்படீன் பயன்படுத்தலாம்....இல்லையென்றால் ''அடுத்து உங்கள் கடிதங்கள்'' என்பதை சுட்டி செல்ல்லாம்

http://i837.photobucket.com/albums/zz297/nambitn/TASKADDCORR2.jpg

அதன்பின்பு....

http://i837.photobucket.com/albums/zz297/nambitn/FinalResiltFormletter.jpg

அதன் பின்பு.........

http://i837.photobucket.com/albums/zz297/nambitn/PRINTTASKPANE.jpg


முடிந்தது.....அஞ்சல் பிணை (மெயில் மெர்ஜ்) இதை போன்று லேபிள்கள் அச்சிடுவதையும் இதே முறையில் தான் செயல்படுத்தி அச்சிட்டு கொள்ளவேண்டும். இது ஒரு எளியமுறை வேறு முறைகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளலாம்........

நன்றி!