PDA

View Full Version : மொழியில் மாற்றம்



சொ.ஞானசம்பந்தன்
27-09-2010, 10:54 AM
புதிய அக்கறைகள் உருவாகும்போது மொழி வழக்கும் அதற்கேற்ப மாறுபடுகின்றது.எடுத்துக்காட்டாகப் பெண்களையும் மாற்றுத்திறனாளிகளையும் குறிப்பிட்ட சாதிகளையும் இழிவுபடுத்தும் பழமொழிகளையும் மரபு தொடர்களையும் இன்று நாம் தவிர்க்கிறோம்.இத் தகைய மாற்றம் அப் புதிய அக்கறைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே பரவ உதவுகின்றது. அது போலவே விலங்குகளையும் பறவைகளையும் காட்டையும் பற்றிப் பேசும்போதும் கவனமாக இருக்கின்றோமா? ஊடகங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் சொற்றொடர்கள் காட்டுயிர் பேணலுக்கு இயைந்து இருக்கின்றனவா? காட்டு தர்பார், நரி புத்தி, ஆமை புகுநத வீடு,கொடிய விலங்குகள் முதலிய பதங்களை இன்னமும் பயன்படுத்தலாமா?ஊடக மொழியை வடிகட்டிப் புதுப்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அண்மையில் ஏர்க்காட்டிற்குள் ஒரு காப்பித் தோட்டத்துக்கு அருகே இரு யானைகள் வந்ததைப் பற்றிப் பல நாளிதழ்கள் “யானையின் அட்டகாசம்” என்று எழுதியபோது ஒரு சஞ்சிகை மட்டும் “வாழிடம் தேடும் யானைகள்” என்று தலைப்பிட்டுப் புதிய நோக்கை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது.


காட்டுயிர் இதழாசிரியர் முகமது அலி நெருப்புக் குழியில் குருவி என்ற நூலில் இதழ்கள் மட்டுமல்ல பெருவாரியான தமிழ் எழுத்தாளர்களும் காட்டுயிர்களுக்கு எதிரான குரலிலேயே எழுதுகிறார்கள் என்கிறார். பல எடுத்துக்காட்டுகளைக் காட்டுகிறார். இன்றுங் கூட சில இதழ்களில் “கொடிய வன விலங்குகள்” என்ற சொற்றொடரைக் காணலாம்.அண்மையில் ஒரு அரசியல் தலைவர் காரில் பயணித்துக்கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே சிறுத்தை ஒன்று சென்றதைத்” தலைவர் மயிரிழையில் உயிர் தப்பினார்” என்று தலைப்பிட்டு ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டது, தப்பியது என்னவோ சிறுத்தைதான் என்றாலும்.
நூல்: இன்னும் பிறக்காத தலைமுறைக்காக.பக்-42.
ஆசிரியர்: சு.தியடோர் பாஸ்கரன்.

nambi
28-09-2010, 07:37 AM
ஆமாம் ஆமாம் பழைய மாவைக்கொண்டே புளித்த அப்பம் சுடுவதை இந்த சமூகம் நிறுத்திக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இது எல்லை மீறிப்போய் விலங்குகளுக்கு அதிக மரியாதை கொடுக்கப்போய் இப்போது மனிதனுக்கு கொடுக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையையும் குறைத்து விட்டார்களே!

''நாயை பிடித்து கட்டுப்பா!''
''என்ன! என் செல்லத்தை பார்த்து நாய்! என்றா சொல்ற!''

என்று சண்டைக்கு வருகிறவர்களும் இருக்கிறார்கள்.

சமயத்தில் நாய் இந்த இரு மனிதர்களும் தனக்காக சண்டை போடுவதை பார்த்து ஏளனத்துடன் சிரிக்கும்! நமக்கு இவ்வளவு செல்வாக்கா? :D

இன்னும் சில இடத்தில் ''நாயை எங்க கூட்டிகிட்டு போற!'' பதிலுக்கு அவர் நாயை விட மோசமாக குலைப்பார்....

''என்னுடைய பிள்ளையை பார்த்து நாய் என்றா சொல்ற!''

பதிலுக்கு இவரும்....'' நான் சின்ன நாய்கிட்டதானே கேட்டேன்!'' என்று சொல்லிவிட்டு போவார்.:D

சின்ன பிள்ளைகள் எதையும் நாம் சொல்லிக்கொடுப்பதை அதிகளவு புரிந்து கொண்டு செயல்படுவார்கள். எவரொருவருக்கும் மரியாதை கொடுத்து தான் பேசவேண்டும் என்பதை தட்டமால் புரிந்து கொண்டு.... காகம் வந்து வீட்டினருகே கரைவதை கூட ''காக்கா வந்திருக்காங்க'' என்று குழந்தை மரியாதையுடன் அழைப்பதை மகிழ்வுடன் ரசித்திருக்கிறார்கள் பெற்றோர்கள்.

பத்திரிகைகள், ஊடகங்கள் வெளியிடும் செய்திகளில் இன்று வரை பல புரியாத ஆச்சரியப்படும் தகவல்கள் வரும்...

உதாரணத்திற்கு ''பல கோடி ரூபாய் பெருமானமுள்ள போதைப்பொருள் பிடிபட்டது''. ஒன்று ''உயிருக்கு ஆபத்தான போதைப்பொருள் பிடிபட்டது'' என்று செய்தி வெளியிடவேண்டும். அப்படியில்லாமல் அதன் விலை மதிப்புடன் வெளியிட்டால் ''ஓ பிடிக்கிறவரை இந்த தொழிலை செய்யலாம் போல இருக்கிறதே!'' என்று தான் அனைவரும் நினைப்பார்கள்.

இதைவிட பெரிய கூத்து இதுதான்...காலாவதியான மருந்துக்கு விலை மதிப்பே கிடையாது அதன் மதிப்பு சுழியம். ஆனால் அதற்கு மதிப்பு போடுவார்கள்

''பல கோடி ரூபாய் மதிப்புள்ள காலாவதியான மருந்துகள் பிடிபட்டது''. (பிடிபடுகிறவரை இதை செய்யலாம்...:confused:). கெட்டதுக்கு கூட மதிப்பிட்டு மதிப்பிட்டு வளர்த்து விடுவார்கள்.

நல்ல பகிர்வு! இந்த திரியில் கருத்தை உள்வாங்கியபின் இதெல்லாம் தான் நினைவுக்கு வந்தது. நன்றி!

சொ.ஞானசம்பந்தன்
28-09-2010, 10:46 AM
பாராட்டுக்கு மிகுந்த நன்றி. நிறைய கருத்துகளை வழங்கி இருக்கிறீர்கள்.