PDA

View Full Version : இல்லறம்

M.Jagadeesan
27-09-2010, 04:23 AM
இருமனமும் ஒருமனதாய் இணைந்து இன்ப
இல்லறத்தை நல்லறமாய் ஆக்கித் தூய
அருளறத்தில் உயிர்கலந்து இந்த வையம்
அழியுமட்டும் நம்புகழை விட்டுச் செல்ல
திருநிறைவாய் நன்மக்கள் பலரை ஈன்று
தமிழைவிட்டு நீங்காத இனிமை போலும்
பருகுனறுந் தீம்பாலும் சுவையும் போலும்
பன்னெடுநாள் வாழ்வதே இல்லறம் ஆகும்.

பாலகன்
27-09-2010, 04:51 AM
சின்ன விதைக்குள் பெரிய ஆலமரம் போல உங்கள் கவிதை இருக்கிறது
வாழ்த்துகள்

M.Jagadeesan
27-09-2010, 06:38 AM
சின்ன விதைக்குள் பெரிய ஆலமரம் போல உங்கள் கவிதை இருக்கிறது
வாழ்த்துகள்

நன்றி.

அனுராகவன்
27-09-2010, 09:00 AM
அருமை ஜெகசீஷ் அவர்களே!!
இல்லறம் நல்லறம் என்று சிறப்பாக கவிதை அமைகிறது..
தொடருங்கள்..

கீதம்
29-09-2010, 08:31 AM
இல்லறப்பெருமை சொல்லும் தீந்தமிழ்க் கவிதை. மிகுந்த பாராட்டுகள், ஜெகதீசன் அவர்களே.

M.Jagadeesan
29-09-2010, 08:49 AM
இல்லறப்பெருமை சொல்லும் தீந்தமிழ்க் கவிதை. மிகுந்த பாராட்டுகள், ஜெகதீசன் அவர்களே.

பாராட்டுக்கு மிக்க நன்றி.

M.Jagadeesan
29-09-2010, 08:50 AM
அருமை ஜெகசீஷ் அவர்களே!!
இல்லறம் நல்லறம் என்று சிறப்பாக கவிதை அமைகிறது..
தொடருங்கள்..

பாராட்டுக்கு மிக்க நன்றி.

பிரேம்
30-09-2010, 01:31 AM
சரி உங்களுக்கு எப்ப கல்யாணம்.. ?

M.Jagadeesan
30-09-2010, 02:26 AM
சின்ன விதைக்குள் பெரிய ஆலமரம் போல உங்கள் கவிதை இருக்கிறது
வாழ்த்துகள்

தங்கள் பாராட்டுக்கு நன்றி

M.Jagadeesan
30-09-2010, 02:29 AM
சரி உங்களுக்கு எப்ப கல்யாணம்.. ?

1976 -ல் நடந்தது.

nambi
30-09-2010, 05:36 AM
கவிதை நன்று! பகிர்வுக்கு நன்றி!