PDA

View Full Version : சித்திரகுள்ளனும் மர்மயோகியும்-2



மதுரை மைந்தன்
26-09-2010, 08:38 PM
இந்த கதை சரித்திர கதையில்லை. இதை ஒரு நகைசுவை கதை என்றும் கூறமுடியாது. ஆனால் நகைசுவை இரண்டர கலந்த கதை. இது அறிவியல் கதை இல்லை. ஆனால் அறிவியல் சார்ந்த கதை.
_____________________________________________________________________________

பாகம் 1

" என்னை கூப்பிட்டீங்களாமே"

வாயில் இருந்த சிகரெட்டை எடுத்து அணைத்துவிட்டு தனது பார்வையை கீழிறக்கி அங்கு நின்றிருந்த அப்புவை வெறுப்புடன் பார்த்தான் பாஸ்கரன். ஆறடிக்கு மேல் உயரம். நல்ல தேக கட்டு. அமெரிக்காவில் பிறந்திருந்தால் அர்னால்ட் சுவாஷ்னேகருக்கு பதிலாக இவன் தான் ஹாலிவுட்டில் பிரபலமாயிருப்பான்.

" நேத்து மழைக்கு முளைச்ச காளான் நீ. அரை ஆழாக்கு உயரத்தில இருக்கிற உனக்கு காதல் ஒரு கேடு. சந்தியாகிட்ட போய் அவளை காதலிக்கறதா சொன்னியாமே. சந்தியா என்னோட ஆளு. உனக்கு என்ன தைரியம் இருந்தா அப்படி சொல்லியிருப்பே" என்று சொல்லிகொண்டே அப்புவை சட்டை காலரோடு தூக்கி வாயில் மீதியிருந்த சிகரெட் புகையை அவன் முகத்தில் ஊதிவிட்டு அவனை கீழே தொப் என்று போட்டான்.

" அய்யோ அம்மா" என்று அலறிக் கொண்டு பதில் எதுவும் சொல்லாமல் நடுங்கி கொண்டு எழுந்தான் அப்பு. அப்பு மூணடி உயரத்தில் பாஸ்கரனின் சர்க்கஸ் கம்பெனியில் விதூஷகனாக வேலை பார்த்தான். முன்பொரு சமயம் பாஸ்கரன் அவனிடம் " குப்பை தொட்டில அனாதையா கிடந்த உன்னை எங்க அப்பா எடுத்து வளர்த்து இந்த சர்க்கஸ் கம்பெனில உனக்கு வாழ்க்கை தந்தார். அதை நினைப்பில வச்சுக்கிட்டு நடந்துக்க" என்று தனது வெறுப்பை உமிழ்ந்திருக்கிறான். அப்புவை சர்க்கஸ் பார்வையாளர்களுக்கு பிடிக்கும். அவன் செய்யும் சேட்டைகள் சிறுவர்களிடையே பெரும் சிரிப்பையும் கைதட்டலையும் வரவழைக்கும்.

http://img214.imageshack.us/img214/2082/kullan1.jpg (http://img214.imageshack.us/i/kullan1.jpg/)


பாஸ்கரன் சர்க்கஸில் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பான். சர்க்கஸின் ரிங் மாஸ்டரும் அவன் தான். மிருகங்களுடன் பழகி பழகி அவனும் ஒரு மிருகமாக நடந்து கொள்வான். சந்தியா சர்க்கஸில் சேர்ந்த பிறகு அவனிடம் சில மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. சந்தியா கேரள நாட்டு அழகி. அரிதாரம் பூசி ஜிகினா உடையில் அவள் பார் விளையாடுவதை அனைவரும் கண் கொட்டாமல் பார்ப்பார்கள்.

நான் ஏன் பிறந்தேன், எதற்காக வாழ்கிறேன் என்று விரக்தியாக வாழ்ந்து வந்தான் அப்பு. அபூர்வசகோதரர்கள் படத்தில் அவன் பெயரை கொண்டு அவனை மாதிரியே குள்ளனாக நடித்த கமல் காதல் தோல்வி அடைவதை பார்த்து குலுங்க குலுங்க அழுதிருக்கிறான் நம்ம அப்பு.
ஆனால், அப்புவை சந்தியாவின் அழகும் அவனிடம் அவள் காட்டிய அன்பும் காதல் என்ற மாய வலையில் வீழ்த்தியது.

" சந்தியா என்னோட ஆளு" என்று சொல்லி அவளிடம் தன் காதலை கூறியதை பாஸ்கரன் கண்டித்தது அவன் மனதை சுக்கு நூறாக்கியது.

" என்ன நான் சொன்னது காதில விழுந்ததா? சந்தியாவை மறந்துடு. உனக்கேத்த நண்டோ சிண்டோ வத்தலோ தொத்தலோ பாத்து காதலிச்சுக்கோ. இல்லைனா உன்னை உதைப்பேன். போ".

" சரிங்க அய்யா" னு சொல்லி தலையாட்டிவிட்டு அப்பு பாஸ்கரனின் கூடாரத்திலிருந்து வெளியே வந்து தனது கூடாரத்தை நோக்கி நடந்தான். அவன் மனம் வலித்தது. சந்தியாவின் சிரித்த முகம் கண்முன் வந்து அவனை வாட்டியது. வானொலியில் நேற்று அவன் கேட்ட பாடல் நினைவுக்கு வந்து அவன் சோகத்தை கூட்டியது. அவன் கேட்ட பாடல் இது தான்>

உயிரைத் தொலைத்தேன் அது உன்னில் தானோ
இது நான் காணும் கனவோ நிஜமோ
மீண்டும் உன்னைக் காணும் வரமே
வேண்டும் எனக்கே மனமே மனமே

விழியில் விழுந்தாய்
என்னில் எனதாய் நானே இல்லை
எண்ணம் முழுதும் நீதான் கண்ணே

அன்பே உயிரால் தொடுவேன் உன்னை
தாலாட்டுதே பார்வைகள்
உன்னை சேரும் நாளை தினமும் ஏங்கினேனே
நானிங்கு தனியாய் அழுதேன்
விடியும் வரை கனவின் நிலை
உனதாய் இங்கு தினம் ஏங்குதே
மனம் உருகிடும் நிலை இது எந்தன்
முதல் முதல் வரும் உயிர் காதலே

நினைத்தாலே இனிக்கும் இளமை நதியே
உன்னோடு நான் மூழ்கினேன்
தேடாத நிலையில் நோகாத வழியில்
கண் பார்க்கும் இடம் எங்கும் நீ தான்
விடியும் வரை கனவின் நிலை
உனதாய் இங்கு தினம் ஏங்குதே
மனம் உருகிடும் நிலை இது எந்தன்
முதல் முதல் வரும் உயிர் காதலே

தொடரும்....

அன்புரசிகன்
26-09-2010, 09:45 PM
சற்று சீரியஸாக தொடங்கியிருக்கிறது கதை. அப்புவின் விசும்பல்கள் மனதில் தெளிவாக பதிந்துவிட்டீர்கள். தொடருங்கள். வாழ்த்துக்கள் மதுரையண்ணா.

கீதம்
26-09-2010, 11:07 PM
ஒரு சர்க்கஸ் கூடாரத்துக்குள் நடக்கும் கதையா? களம் புதிது. ஆரம்பம் எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது. பாராட்டுகள். தொடருங்கள், மதுரை மைந்தன் அவர்களே.

பாரதி
01-10-2010, 03:30 PM
எதிர்பார்ப்புடன் துவங்கிய கதையைத் தொடருங்கள் நண்பரே.

மதுரை மைந்தன்
01-10-2010, 09:37 PM
சற்று சீரியஸாக தொடங்கியிருக்கிறது கதை. அப்புவின் விசும்பல்கள் மனதில் தெளிவாக பதிந்துவிட்டீர்கள். தொடருங்கள். வாழ்த்துக்கள் மதுரையண்ணா.



நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
01-10-2010, 09:38 PM
ஒரு சர்க்கஸ் கூடாரத்துக்குள் நடக்கும் கதையா? களம் புதிது. ஆரம்பம் எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது. பாராட்டுகள். தொடருங்கள், மதுரை மைந்தன் அவர்களே.



நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
01-10-2010, 09:39 PM
எதிர்பார்ப்புடன் துவங்கிய கதையைத் தொடருங்கள் நண்பரே.



இதோ தொடருகிறேன் நன்றி

மதுரை மைந்தன்
01-10-2010, 10:14 PM
சித்திரகுள்ளனும் மர்மயோகியும் 2

http://img819.imageshack.us/img819/3840/50807515.jpg (http://img819.imageshack.us/i/50807515.jpg/)


சோகமாக தனது கூடாரத்துக்குள் நுழைந்த அப்புவை எதிர்கொண்டான் அங்கிருந்த மருது. மருது சர்க்கஸின் மற்றுமோர் கோமாளி. அப்புவை விட ஒரு இன்ச் கூட உயரம் தான் இருந்தாலும் அவனுக்கு தான் அமிதாப் பச்சன் அப்பு ஜெயாபாதிரி என்று நடந்துகொள்வான். இருவரும் செய்யும் கோமாளித்தனங்கள் சர்க்கஸ் பார்வையாளர்களுக்கு பெரும் சிரிப்பை வரவழைக்கும். அப்பு கயிற்றில் தொங்கும்போது மருது அவனோட கால்சட்டையை கழற்றி விடுவான். பாதி அம்மணமாக இருக்கும் அப்புவை பார்த்து சிறுவர்கள் கேலியாக சிரிப்பார்கள். மருது கொட்டாவி விடும்போது அப்பு அவன் வாயில் தன் கையை விடுவான். அதையும் சிறுவர்கள் ரசிப்பார்கள். தன் கையில் இருக்கும் மரச்சட்டைகளைக் கொண்டு அப்பு மருதுவின் பின் பக்கத்தில் அடிப்பான். மருது வலிப்பது போல் அலறுவான். சிறுவர்கள் கைதட்டி அதை ரசிப்பார்கள். மரப்பீப்பாயில் அப்புவை படுக்க வைத்து மருது உருட்டுவான். அப்புவுக்கு மற்றவர்களின் பேச்சு நடை இவற்றை அப்படியே நடித்து காட்டுவான். இப்படித்தான் அவன் பாஸ்கரனின் பேச்சு நடை பாவனைகளை நடித்து காட்டியது அவனுக்கு பிடிக்காமல் போக அப்புவை தனியாக அழைத்து எச்சரித்தான்.

மருது அப்புவுடன்,

மருது: என்ன சோகமா இருக்கே?

அப்பு: பாஸ்கரன் என்னை கூப்பிட்டு கன்னா பின்னானு பேசினான். என்னை சட்டை காலரோடு தூக்கி கீழே போட்டான்.

மருது: அப்படி என்ன கோபம் உன் மேல அவனுக்கு?

அப்பு: சந்தியாகிட்ட நான் அவளை காதலிக்கிறேன்னு சொன்னது அவனுக்கு பிடிக்கலை.

மருது: எனக்கு தெரியும். அவனுக்கு சந்தியா மேல ஒரு வெறித்தனமான காதல். இப்படித் தான் பாரு. நேத்திக்கு அந்த பொண்ணு என்னை பார்த்து பிரண்ட்லியா சிரிச்சது. நானும் பதிலுக்கு சிரிச்சேன். அதை பாஸ்கரன் பாத்துட்டான். அப்போ அவன் என்னை எரிக்கற மாதிரி பாத்தில நான் கறுப்பாயிட்டேன். (மருதுவுக்கு தான் சிவப்புனு நினைப்பு).

அப்பு தன் சோகத்தை மறந்து சிரித்து: நீ ஏற்கனவே கருவாயன். அப்புறம் எப்படி அவன் பார்வைல கறுப்பாயிருப்பே.

மருது: அதை விடு. இப்போ நீ என்ன செய்யப்போற?

அப்பு: நான் என்ன செய்ய முடியும்? கடவுள் என்னை குள்ளனாவும் அனாதையாகவும் படைச்சுட்டடான். பாஸ்கரனோட அப்பா கருணையால இங்கே உயிர் வாழ்ந்துகிட்டு இருக்கேன். இல்லாட்டி, ஆர்யா நடிச்ச நான் கடவுள் படத்தில வற மாதிரி ஏதோ ஒரு கோயில் வாசல்ல பிச்சை எடுத்துக்கிட்டு இருப்பேன். இங்கே பாஸ்கரனோட அப்பாவும் காலமாயிட்டார். சர்க்கஸ்ல நம்ம மாதிரி கோமாளிகளோட உணர்ச்சிகளை யார் புரிஞ்க்சுக்கறாங்க. இதை பத்தி ஒரு கவிதை எழுதியிருக்கேன். கேக்கறயா?

சர்க்கஸ் கூடாரங்கள்
வீரர்களின் சாகச மேடை மட்டுமல்ல
உணர்ச்சியற்ற முகங்களுடன்
உலா வரும் கோமாளிகளின்
உணர்வுகளின் சாவு மேடைகளுமாகும்

கவிதையை கேட்டுவிட்டு மருது அப்புவைக் கட்டிக் கொண்டு அழுதான்.

மருது: நீ பாரு அப்பு கடவுள் நமக்கு நிச்சயம் ஒரு வழி காட்டுவார். மத்தவங்களை சிரிக்க வைக்கும் நம்ம வாழ்க்கையும் சிரிப்பும் ஆனந்தமாகவும் ஆகும்.

இப்படி சொல்லிவிட்டு மருது உறங்க சென்றான். மருதுவும் அப்புவும் ஒரே கூடாரத்தை பகிர்ந்து கொண்டார்கள். அப்புவுக்கு வெகு நேரம் உறக்கம் வராமல் சந்தியாவையே நினைத்து கொண்டிருந்தான். சற்று தூரத்தில் இருந்த மிருகங்க*ளின் கூட்டிலிருந்து புலி, சிங்கங்களின் உறுமல் சத்தம் கேட்டு அப்புவுக்கு தான் எப்படி மயிரிழையில் ஒரு சிங்கத்திடமிருந்து தப்பித்தோம் என்பது நினைவுக்கு வந்தது. தனது கூட்டை விட்டு தப்பித்து வெளியே வந்த சிங்கம் கூடாரங்களை வலம் வர அது தெரியாமல் அப்பு சிங்கத்தை நேருக்கு நேர் சந்திக்க வேண்டி வந்தது. கை கால்கள் உதற சிலையாக நின்றவனை அங்கு அச்சமயம் தற்செயலாக வந்த பாஸ்கரனின் தந்தை சிங்கத்திடமிருந்து அவனை காப்பாற்றினார். அவர் தன்னிடம் எப்போதும் இருந்த கைதுப்பாகியை காட்டி சிங்கத்தை அதன் கூட்டிற்கு விரட்டி கூட்டை மூடி அவனை காப்பாற்றினார். அந்த நினைவுகளுடனேயே அப்பு உறக்கத்தில் ஆழ்ந்தான்.

மறுநாள் அப்பு தனது கூடாரத்தில் அன்று மாலை நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளுக்காக தன்னை தயார் செய்து கொண்டிருந்தான். மருது சில பொருட்களை வாங்க கடை வீதிக்கு சென்றிருந்தான். கடை வீதியிலிருந்து திரும்பிய மருது பரபரப்பாக " அப்பு நமக்கு விடிவு காலம் வந்துருச்சு. ஊருக்கு வெளியே ஒரு ஆசிரமத்தில் மர்ம யோகி என்ற சித்தர் இருக்காராம். அவர்கிட்ட போய் தங்கள் கஷ்டங்களை சொல்பவர்களுக்கு அவர் கஷ்டங்களை தீர்த்து வைக்கிறாராம். வா நாம அவர் கிட்ட இப்பவே போவோம்".

தொடரும்