PDA

View Full Version : வாழும் வழி.



M.Jagadeesan
26-09-2010, 04:03 PM
இன்பத்தைப் பகிர்ந்து கொண்டால் இரட்டிப்பாகும்
துன்பத்தைப் பகிர்ந்து கொண்டால் பாதியாகும்

யோசித்துப் பேசினால் இன்பம் உண்டு
பேசியபின் யோசித்தால் துன்பம் தானே

பெருமலையைக் கடுகாக நினைத்தால் வெற்றி
சிறுகடுகை மலையாக நினைத்தால் தோல்வி

குறைவான செல்வம் உன்னைக் காக்கும்
நிறைவான செல்வத்தை நீகாக்க வேண்டும்

உச்சிக்கு போவது அரியசெயல் அல்ல
உச்சியிலே இருப்பதுதான் அரியசெயல் ஆகும்

இரவுபகல் கொண்டதுவே ஒருநாள் ஆகும்
நன்மைதீமை கொண்டதுவே வாழ்க்கை ஆகும்

Nivas.T
26-09-2010, 04:11 PM
அருமை வரிகள் ஜெகதீஸ்

இது நீங்கள் எழுதியதா?

M.Jagadeesan
26-09-2010, 05:13 PM
அருமை வரிகள் ஜெகதீஸ்

இது நீங்கள் எழுதியதா?

நன்றி. ஆம். நான் எழுதியதுதான் i.

குணமதி
27-09-2010, 03:29 AM
அறவுரை அருமை!

M.Jagadeesan
27-09-2010, 03:48 AM
அறவுரை அருமை!

நன்றி

பாலகன்
27-09-2010, 04:59 AM
எதை செய்யவேன்டும் செய்யக்கூடாது என்று அருமையாக கவிதைவரிகளில் சொன்ன நண்பருக்கு என் பாராட்டுகள்.

இந்த திரிக்கு 5 நட்சத்திரங்கள்

M.Jagadeesan
27-09-2010, 06:34 AM
எதை செய்யவேன்டும் செய்யக்கூடாது என்று அருமையாக கவிதைவரிகளில் சொன்ன நண்பருக்கு என் பாராட்டுகள்.

இந்த திரிக்கு 5 நட்சத்திரங்கள்

தங்கள் பாராட்டுக்கு நன்றி.

அனுராகவன்
27-09-2010, 09:02 AM
மிகவும் நன்று..
தொடருங்கள் உங்கள் கவிக்கு என் பாராட்டுக்கள்..