PDA

View Full Version : பன் யுகக் கனவுகள்



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
26-09-2010, 09:11 AM
கழிந்த பன் யுகங்களைப் போலும்
அன்றும் அவர்கள் கூடினார்கள்
நெரிசல்களில் நிரம்பி வழியும்
மானுடச் சாபங்களைச் சுமந்த படி,
குடல் நிரம்பிய மலங்களையும்
உடல் நிரம்பிய நாளைகளையும்
ஊனுடலில் பொத்தி ஒளித்த படி,
ஒடிந்த சிறகுகளில் காலத்தைக் கடக்க எத்தனித்தார்கள்
விழிகளேந்திய வியப்புக் குறிகள் வழியாய்
உலகை முழுதுமாய் அளந்து விடவும்
ஆடைகளின் வழியாய் வழியும் பகட்டுகளில்
பிரதேசங்களை ஆண்டு விடவும்
தருணம் நோக்கித் துடித்துக் கிடந்தார்கள்
வெறுமனான அவர்கள் சட்டைப் பை நிறைய
கனத்துக் கிடந்தன பணக்காரக் கனவுகள்
விரிசலுற்ற மூக்குக் கண்ணாடி வழியே
அப்பட்டமாய் தெரிந்தன அடுத்த வீட்டவனின்
தலையணை இரகசியங்கள்
என்றென்றும் நிறைப்படுத்தப்படா
ஆளுமை ஓட்டைகள் வழியே அள்ளித் திணித்தார்கள்
தங்களின் பாராளும் ரகசியங்களை!
கழிந்த பன் யுகங்களைப் போலும்
அன்றும் அவர்கள் கூடினார்கள்
தேடிக் களைத்த கனவுகள் எறிந்து
மீண்டுமொரு பூஜ்யத்திலிருந்து
கூடத் தொடங்குவார்கள் நாளையும்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Nivas.T
26-09-2010, 12:23 PM
ஆடைகளின் வழியாய் வழியும் பகட்டுகளில்
பிரதேசங்களை ஆண்டு விடவும்

வெறுமனான அவர்கள் சட்டைப் பை நிறைய
கனத்துக் கிடந்தன பணக்காரக் கனவுகள்
விரிசலுற்ற மூக்குக் கண்ணாடி வழியே
அப்பட்டமாய் தெரிந்தன அடுத்த வீட்டவனின்
தலையணை இரகசியங்கள்


பணம், பகட்டு என்று ஓடும் எந்திரமானவர்கள்
வாழ்க்கையை தொலைத்துவிட்டு
எங்கோ தேடுகிறார்கள்

அற்ப்புதமான கவிதை ஜுனைத்