PDA

View Full Version : திருமணம்



vasanth111193
26-09-2010, 03:37 AM
திருமணம் விருந்துதான்
ஆனாலும் கை நனைக்க
மனமில்லை காதலி திருமணம்..!

பாலகன்
26-09-2010, 04:11 AM
கை நனைக்க
மனமில்லை

அதான் உங்க கண்கள் நனைஞ்சிருக்குமே :)

அமரன்
26-09-2010, 10:44 PM
திருமணம் விருந்துதான்
ஆனாலும் கை நனைக்க
மனமில்லை காதலி திருமணம்..!


கஷ்டம்தான்..

கை நனைக்காதீர்கள்.. சாப்பிட்டு விட்டுக் கையைக் கழுவி விடுங்கள்.

திருமணத்தில் திருமனம்..

கவிதைகளை நீங்கள் பதிக்கும் வேகம் அபரிதமானது.

கவிதைகளைப் பதிவு செய்யும் இடத்திலும் கவனம் செலுத்துங்கள் நண்பரே.

பாராட்டுகள்.

தீபா
27-09-2010, 09:25 AM
நல்லாயிருக்குங்க./
காதலிக்கும் அப்படி இருக்குமா?

அனுராகவன்
27-09-2010, 09:29 AM
கைவைக்கும் முன்பு யோசி..
கை வைத்தபின் யோசிக்காதே..
அது காதல் - திருமணம்..

இங்கு கை என்பது மனதை..
இன்னும் மெருகேற்றுங்கள்..

Nivas.T
27-09-2010, 09:49 AM
எனக்கும் என் காதலிக்கும்
ஒரு நல்ல நாளில் திருமணம்
எனக்கு திருச்சியில்
அவளுக்கு மதுரையில்

நல்ல கவிதை பாராட்டுக்கள் அன்பரே

விகடன்
27-09-2010, 11:13 AM
ஸ்பூனை கேட்டுப்பார்க்க வேண்டியதுதானே?


கவிதை நன்றாக இருக்கிறது.

பிரேம்
30-09-2010, 01:45 AM
பக்கத்துல சரவணபவன் இருக்கும் அங்க போய் சாப்டு வாங்க...(காசு இருக்கா..?) :confused:

aren
30-09-2010, 02:22 AM
இது இருதலைக் காதலா அல்லது ஒருதலைக் காதலா?

பிரேம்
30-09-2010, 01:12 PM
சொன்னா நம்ப மாட்டீங்க.....ஐந்து தலை காதலாம்..:icon_ush:

joy001
30-09-2010, 01:16 PM
உங்களின் வலி கவிதையின் வரிகளில் தெரிகிறது..:)

Mano.G.
02-10-2010, 03:52 AM
கண்ணுக்கு எட்டுனது கைக்கு எட்டல
பரவாயில்ல கவலைய விடுங்க கண்ணீர துடைங்க

எங்க ஊர்ல ஒரு மலாய் பழமொழி

"பூங்ங புக்கான் செ குந்தும்"

"bunga bukan se kuntum"
bunga : மலர்
bukan: அல்ல
sekuntum : ஒன்று

மலர் ஒன்று மட்டுமல்ல

"கும்பாங் புக்கான் செ எகோர்"

"kumbang bukan se ekor"
kumbang : வண்டு
bukan: அல்ல
seekor: ஒன்று
மலருக்கு மலர் தாவும் வண்டும் ஒன்றல்ல



மனோ.ஜி