PDA

View Full Version : ஆத்திச்சூடி-2010



M.Jagadeesan
25-09-2010, 02:45 PM
ஔவையார் என்றாலே ஆத்திச்சூடி நினைவுக்கு வரும்.சிறு தொடர்களால் பெரிய அறங்களைச் சொல்லும் இலக்கியம்.
ஔவையாரைப் பின்பற்றி பாரதியார் "புதிய ஆத்திச்சூடி" எழுதினார். 'ஆத்திச்சூடி-2010 " என்ற பெயரில் எழுதப்பட்ட இந்த நீதிநூல் அடியேனுடைய ஒரு சிறிய முயற்சி.

அ. அறிவே துணை
ஆ. ஆசிரியரை வணங்கு.
இ. இருப்பதைக் கொடு.
ஈ. ஈன்றவள் தெய்வம்.
உ. உண்மை பேசு.
ஊ.. ஊருக்கு உழை.
எ.. எண்ணிச் செயல்படு.
ஏ. ஏழைக்கு இரங்கு.
ஐ. ஐம்பொறி அடக்கு.
ஒ. ஒருவனுக்கு ஒருத்தி.
ஓ. ஓரிடத்து இரு.
ஔ. ஔவை சொல் கேள்.
ஃ. எஃகின் உறுதி கொள்.
க். கணினி பழகு.
ங் .பங்கிட்டு உண்.
ச். சத்துணவு கொள்.
ஞ். அஞ்சுவது அஞ்சு.
ட். கடன் வாங்காதே.
ண். உணவே மருந்து.
த். தருவதைத் தடுக்காதே.
ந். நல்லதே நினை.
ப். படிப்பது படி.
ம். மறப்பது மற.
ய். முயன்றால் முடியும்.
ர். இரத்தல் இழிவு.
ல். காலமறிந்து உண்.
வ். வரவுக்குத் தக்க செலவு.
ழ் உழவினை உயர்வு செய்..
ள். களவு மற.
ற். உறவினர் போற்று.
ன். இனத்தோடு இரு.
க. கடமையைச் செய்.
கா. காலையில் எழு.
கி. கிழிசல் அணியாதே.
கீ. கீரை உண் .
கு. குறள் படி
கூ. கூத்து பயில்.
கெ. கெஞ்சுதல் இழிவு.
கே. கேளிருக்கு உதவு.
கை. கைவினை கல்.
கொ. கொல்லுதல் பாவம்.
கோ. கோபம் தவிர்.
ச. சங்கத்தமிழ் படி.
சா. சாதிகள் இல்லை.
சி சிக்கனம் பயில்.
சீ. சீவரம் உடுத்து.
சு. சூது தவிர்.
செ. செல்வம் ஈட்டு.
சே. சேமிப்பு நன்று.
சை. சைவ உணவு கொள்.
சொ. சொல்விளம்பி உண்ணாதே.
சோ. சோதிடம் தவிர்.
த. தமிழில் எழுது.
தா. தாழ்மை அகற்று.
தி. திரவியம் தேடு.
தீ. தீவினை அஞ்சு.
து. துணிவே துணை.
தூ. தூய்மை அழகு.
தெ. தெய்வம் தெளிமின்.
தே. தேன் அருந்து.
தை. தையலைப் போற்று.
தொ. தொல்காப்பியம் படி.
தோ. தோழனுக்கு உதவு.
ந. நடப்பதெல்லாம் நன்மைக்கே.
நா. நாவை அடக்கு.
நி. நித்திரை நன்று.
நீ. நீதி தவறேல்.
நு. நுனிக்கொம்பு ஏறாதே,
நூ. நூதனம் விரும்பு.
நெ. நெடுநீர் நீக்கு.
நே. நேர்மை விரும்பு.
நை. நையாண்டி செய்யேல்.
நொ. நொறுங்கத் தின்.
நோ. நோன்பு தவறேல்.
ப. பசித்துப் புசி.
பா. பாதை மாறாதே.
பி. பிஞ்சிலே பழுக்காதே.
பீ. பீற்றல் தவிர்.
பு. புலால் உண்ணாதே.
பூ. பூரியர் நீங்கு.
பெ. பெண் நலம் பேண்.
பே. பேய்க்கு அஞ்சேல்.
பை. பைங்கூழ் விளை.
பொ. பொருட்பெண்டிர் நீங்கு.
போ. போகாறு சுருக்கு.
ம. மரபினைப் போற்று.
மா. மானமே உயிர்.
மி. மினிக்கித் திரியாதே.
மீ. மீச்செலவு செய்யாதே.
மு. முக்கனி உண்.
மூ. மூர்க்கம் தவிர்.
மெ. மெச்ச வாழ்.
மே. மேனியைப் பேண்.
மை. மையல் ஒழி.
மொ. மொழி உன் விழி.
மோ. மோகத்தை நீக்கு.
வ. வசையற வாழ்.
வா. வாய்மையே வெல்லும்.
வி. விழலுக்கு இறைக்காதே.
வீ. வீரியம் பேசேல்.
உ. உண்டி சுருக்கு.
ஊ. ஊர்வம்பு பேசாதே.
வெ. வெகுளி அடக்கு.
வே. வேகம் தீது.
வை. வைராக்கியம் விடு.
ஒ. ஒற்றுமையே வலிமை.
ஓ. ஓவியம் பயில்.

அனுராகவன்
25-09-2010, 03:20 PM
அருமையாக இருக்கு நண்பரே..முயற்சிக்கு என் நன்றி..
தொடர்ந்து எழுதுங்கள்..
ஒவ்வொன்றும் மிக தெளிவு...

குணமதி
26-09-2010, 01:18 AM
பாராட்டிற்குரிய முயற்சி.

ஆத்திசூடி - என்பதே சரியான பெயர்.

M.Jagadeesan
26-09-2010, 01:19 AM
அருமையாக இருக்கு நண்பரே..முயற்சிக்கு என் நன்றி..
தொடர்ந்து எழுதுங்கள்..
ஒவ்வொன்றும் மிக தெளிவு...

மிக்க நன்றி.

M.Jagadeesan
26-09-2010, 05:50 AM
பாராட்டிற்குரிய முயற்சி.

ஆத்திசூடி - என்பதே சரியான பெயர்.

நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
27-09-2010, 05:40 AM
நல்ல முயற்சி. பாராட்டு. பாரதிதாசனும் ஆத்திசூடி இய்ற்றியுள்ளார்.
சொ.ஞானசம்பந்தன்

M.Jagadeesan
27-09-2010, 06:41 AM
நல்ல முயற்சி. பாராட்டு. பாரதிதாசனும் ஆத்திசூடி இய்ற்றியுள்ளார்.
சொ.ஞானசம்பந்தன்

தங்கள் பாராட்டுக்கு நன்றி.

leomohan
27-09-2010, 07:43 AM
நல்ல முயற்சி. பாராட்டுகள் நண்பரே.

Mano.G.
27-09-2010, 08:41 AM
வாழ்த்துக்கள் நண்பரே
உங்கள் ஆத்திச்சூடி
ஔவையின் ஆத்திச்சூடி போல்
தமிழர் அனைவரும் வாசித்து
இன்புற வாழ்த்துக்கள்

தீபா
27-09-2010, 08:56 AM
நல்ல முயற்சி,
ஆத்திச்சூடி நிறையபேர் முயற்சி செய்கிறார்கள். உங்களது நன்றாக இருக்கிறது.
கடைசியா எதுக்கு திரும்ப ஒ, ஓ ஆகியன கொடுத்திருக்கீங்க சார்?

M.Jagadeesan
28-09-2010, 03:53 AM
நல்ல முயற்சி. பாராட்டுகள் நண்பரே.

தங்கள் பாராட்டுக்கு நன்றி.

M.Jagadeesan
28-09-2010, 03:55 AM
வாழ்த்துக்கள் நண்பரே
உங்கள் ஆத்திச்சூடி
ஔவையின் ஆத்திச்சூடி போல்
தமிழர் அனைவரும் வாசித்து
இன்புற வாழ்த்துக்கள்

நன்றி.

M.Jagadeesan
28-09-2010, 04:07 AM
நல்ல முயற்சி,
ஆத்திச்சூடி நிறையபேர் முயற்சி செய்கிறார்கள். உங்களது நன்றாக இருக்கிறது.
கடைசியா எதுக்கு திரும்ப ஒ, ஓ ஆகியன கொடுத்திருக்கீங்க சார்?

நன்றி. ஒளவையின் ஆத்திசூடியிலும் ஒ,ஓ ஆகிய எழுத்துக்கள் இருமுறை வருகின்றன.

nambi
28-09-2010, 06:37 AM
அருமை! நல்ல முயற்சி! பகிர்வுக்கு நன்றி!

M.Jagadeesan
29-09-2010, 02:09 PM
அருமை! நல்ல முயற்சி! பகிர்வுக்கு நன்றி!

பாராட்டுக்கு நன்றி.