PDA

View Full Version : கவனமாக இருங்கள்...



சசிதரன்
24-09-2010, 04:34 PM
நிச்சயம் ஒரு நாள்
அந்த இரவு வரும்.

நட்சத்திரங்களை ரசிக்க பிடிக்காமல்
அதன் வெப்பத்தில் உடல் கருகும் ஓர் இரவு.

கனவின் போர்வையை கிழித்தெறிந்து
இருள் பருகி விழித்திருக்கும் ஓர் இரவு.

அத்தனை முகமூடிகளையும் கழற்றி வைத்து
சுயம் கரைய அழும் ஓர் இரவு.

அந்த ஒரு இரவு உங்களுக்கு தரலாம்...
நிச்சயமற்ற தருணங்களின் பிரமிப்பை..
உங்கள் முகமூடிகளின் எண்ணிக்கை குறித்த பயத்தை..
பருக பருக மயக்கம் தரும் இருளின் போதையை..
இல்லாதிருத்தல் குறித்த உணர்வை...

பின் ஒரு தருணத்தில்
விடியவே விடியாத ஓர் இரவாகவும்
அது மாறிவிடும் சாத்தியமுண்டு.

கவனமாக இருங்கள்...
அது இன்றைய இரவாகவும் இருக்கலாம்.

Nivas.T
24-09-2010, 04:37 PM
கவிதை அழகு

எவ்வளவு கவனமாக இருந்தாலும்
இரவு வருவதை தவிர்க்க முடியாதே :)

சசிதரன்
24-09-2010, 04:42 PM
நான் சொல்லும் இரவை நாம்தான் முடிவு செய்கிறோம் நிவாஸ்...:icon_ush:

அனுராகவன்
25-09-2010, 06:50 PM
இரவுகள் ஆயிரம் அதில்
நீ சொல்வது எது;
பல கடமைகள் நடப்பது
இதில் காண்பது எது;
இரவுகள் வரும்
அதற்கு பகல் வேண்டாமா?
இல்லையேல் சுரஷ்யம் வரா..

நன்றி நண்பரே!!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
26-09-2010, 09:04 AM
வாழ்வின் பெரிய சூட்சமத்தை இரவாய் வருணித்து உள்ளீர்கள். இரவு போன்றே வாழ்வின் சில அத்தியாவசியங்கள் வருவதை தவிர்க்க இயலாது. பின்றீங்க பாஸ்.

Nivas.T
26-09-2010, 09:14 AM
நான் சொல்லும் இரவை நாம்தான் முடிவு செய்கிறோம் நிவாஸ்...:icon_ush:

:D
ஹி..ஹி,,,ஹி,,,,,,:D:D:D:D
புரியுது :D
நான் கொஞ்சம் டியூப்லைட் சசி :D:D:D:D

தீபா
27-09-2010, 09:02 AM
அப்படி பல இரவுகள் வருவது போலிருந்து பின் வராமல் போய்விடுகிறது
ஆக்சுவலி எப்படியோ தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிரேன்.

நல்ல கவிதை,
வாழ்த்துக்கள் சசி அவர்களே

-தீபா