PDA

View Full Version : எழுதிக் கொண்டிருந்தான் அவன்



ஆதி
24-09-2010, 02:16 PM
யோசனையின்
ஆழத்தில் இறங்கி
எதையோ அவன் தேடிக் கொண்டிருந்தான்

அத்தருணத்தில்
வீரிட்டலறியது
என் அலைபேசி..

அமைதியான உறக்கத்திலிருந்து
எழுப்பப்பட்டவனை போல
பிரக்ஞை அறுபட
என்னை அவன் பார்த்தான்..

சின்ன குறுகுறுப்புமின்றி
அவ்வறையிலேயே நின்று
பேசத்துவங்கினேன் நான்
சத்தமாய்....

அல்லிராணி
28-09-2010, 04:17 AM
தம்பி ஆதன்,

சம்பவங்களை மட்டும் எழுதினா அது குறிப்பு
கூடவே சங்கதிகளையும் குறித்தால் அது களிப்பு!!!


அவன்
மௌனத்தில் தொலைந்திருந்தான்
நான்
சப்தத்தில் தொலைந்திருந்தேன்

இடைஞ்சல்
ஒருவருக்கொருவர்..

இப்படித்தானோ என்னவோ

இரவும் பகலும்
இடரும்பொழுதெல்லாம்
சிவந்து போகின்றன
கோபத்தில்..

தீபா
28-09-2010, 07:20 AM
அவன் நீயாக
நீ அவனாக...

மாத்தி போட்டீங்கதானே?
கவிதை நன்று!!



இரவும் பகலும்
இடரும்பொழுதெல்லாம்
சிவந்து போகின்றன
கோபத்தில்..

அக்கா..
அது கோபமா ?
நாணமா?
செங்கனிவாய் கொடுத்த
லிப்ஸ்டிக் கறையா ?

அல்லிராணி
28-09-2010, 09:39 AM
செங் "கனிவாய்"
இடறிக் கொடுப்பதில்லை
உரசிக் கொடுக்கும்..

காலைச் சிவந்தது பயத்தில் வெளுக்கும்
மாலைச் சிவந்தது வன்மத்தில் கருக்கும்

நாணத்தில் கொடுத்தது
வெளுக்குமோ? கருக்குமோ?

aren
28-09-2010, 09:44 AM
என்னவோ எழுதறீங்க, நமக்குத்தான் ஒன்னுமே புரியமாட்டேங்குது

தீபா
28-09-2010, 10:37 AM
செங் "கனிவாய்"
இடறிக் கொடுப்பதில்லை
உரசிக் கொடுக்கும்..
?


அதனால்தானே
இடறலோ உரசலோ
இல்லாமல் கொடுத்தேன்!!
சொல்முத்தம் :D

நாணம் என்ன நிறமோ
நான் சொல்ல?

ஆதி
28-09-2010, 10:39 AM
அதனால்தானே
இடறலோ உரசலோ
இல்லாமல் கொடுத்தேன்!!
சொல்முத்தம் :D

நாணம் என்ன நிறமோ
நான் சொல்ல?

உதடும் உதடும்
எழுத்தும் எழுத்தும்
உரசாமலா
சொல் முத்தம் ?

தீபா
28-09-2010, 11:02 AM
உதடும் உதடும் உரசினால்
காம யுத்தம்
எழுத்தும் எழுத்தும் உரசினால்
அறிவு பித்தம்
உதடும் எழுத்தும்
உரசினால்
கலைமுத்தம்

Nivas.T
28-09-2010, 11:46 AM
என்னவோ எழுதறீங்க, நமக்குத்தான் ஒன்னுமே புரியமாட்டேங்குது

இதை நான் வன்மையாக வழிமொழிகிறேன் :sauer028::sauer028::sauer028:

அல்லிராணி
28-09-2010, 11:52 AM
என்னவோ எழுதறீங்க, நமக்குத்தான் ஒன்னுமே புரியமாட்டேங்குது

எழுத்துக்கள் தெரிந்தவைதான்
வார்த்தைகளும் தெரிந்தவைதான்
வாக்கியக் கட்டும் தெரிந்ததுதான்

உள்ளே சொருகி வைத்த பொருள்மட்டுமே தெரியாமல் தவிக்கிறீரோ?

அமரன்
28-09-2010, 08:59 PM
உதடும் உதடும்
எழுத்தும் எழுத்தும்
உரசாமலா
சொல் முத்தம் ?

உம்’மா’:)

ஆதி
29-09-2010, 09:39 AM
தம்பி ஆதன்,

சம்பவங்களை மட்டும் எழுதினா அது குறிப்பு
கூடவே சங்கதிகளையும் குறித்தால் அது களிப்பு!!!


அவன்
மௌனத்தில் தொலைந்திருந்தான்
நான்
சப்தத்தில் தொலைந்திருந்தேன்

இடைஞ்சல்
ஒருவருக்கொருவர்..

இப்படித்தானோ என்னவோ

இரவும் பகலும்
இடரும்பொழுதெல்லாம்
சிவந்து போகின்றன
கோபத்தில்..

நகுலனிடம் கற்று கொண்டேன் இந்த பாணியை ஒரு சம்பவத்தை மட்டும் விவரித்துவிட்டு.. கருத்தை படிப்பவர்களிடம் விட்டுவிவது..

'ராமச்சந்திரனா என்றேன்

ராமச்சந்திரன் என்றான்

எந்த ராமச்சந்திரன் என்று

நான் கேட்கவுமில்லை

அவன் கூறவுமில்லை '

- நகுலன்

ராமச்சந்திரனை ஒரு ஆளாக மட்டும் எடுத்துக் கொள்ள கூடாது, ஒரு சம்பவமாக, ஒரு கவிதையாக, ஒரு பொருளாக, ஒரு எண்ணமாக, ஒரு தலைப்பாக இன்னும் பலவாக எடுத்துக் கொள்ளலாம்.. நமக்கு தெரியாத விஷயங்களை கூட நாம் தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ள எத்தனப்படுகிறோம் ஒரு அற்ப பெருமைக்காக. இதில் உள்ள தளங்கள் இன்னும் யோசிக்க யோசிக்க விரிவடையும்/மாறும்.....

அதனால் தான் நானும் படிம கவிதையாக ஒரு சம்பவத்தை மட்டும் விவரித்துவிட்டுவிட்டேன், கருத்தை சொல்லாமல்...