PDA

View Full Version : திருக்குறளும் ஏழு என்ற எண்ணும்



M.Jagadeesan
24-09-2010, 11:24 AM
திருக்குறளில், ஒன்று முதல் பத்து வரை உள்ள எண்களில் 'ஒன்பது' மட்டும் பயன்படுத்தப்படவில்லை. "ஏழு' என்ற எண் மிகுதியாக (எட்டு முறை)பயன்படுத்தப்பட்டுள்ளது..
ஏழு சீர்களைக் கொண்ட குறள் வெண்பாவை முதலில் எழுதியவர் திருவள்ளுவர்தான்.திருக்குறளில் மொத்த குறட்பாக்களின் எண்ணிக்கை 1330 .இதன் கூட்டுத்தொகை 7 .
(1 +3 +3 +0 =7 ) பொருள் அதிகாரம் எண்ணிக்கை 70 . இதன் கூட்டுத்தொகை 7 (7 +0 =7 ) காமத்துப்பால் அதிகார எண்ணிக்கை 25 .இதன் கூட்டுத்தொகை 7 .(2 +5 =7 ) அறத்துப்பால் அதிகார எண்ணிக்கை 38 .இதில் முதல் நான்கு அதிகாரங்கள் திருவள்ளுவர் எழுதியது அல்ல என்பார் வ.உ.சி.
அவர்கள்.இக்கருத்து ஆராய்ச்சிக்குரியது.அவருடைய கூற்றுப்படி அறத்துப்பால் அதிகார எண்ணிக்கை 34 . இதன் கூட்டுத்தொகை 7 (3 +4 =7 ) இறுதியாக "திருவள்ளுவர்" ஏழு எழுத்துக்களைக் கொண்ட ஒரு பெயர்.

Nivas.T
24-09-2010, 12:18 PM
அருமையான தகவல் நண்பரே

ஆனால் நான்கு அதிகாரங்கள் திருவள்ளுவரால் எழுதப்படவில்லை என்பதுதான் புதிதாகவும் உள்ளது சிறிது நெருடாவும் செய்கிறது

தகவலுக்கு மிக்க நன்றி :)