PDA

View Full Version : காலம்



பிரேம்
24-09-2010, 11:06 AM
காலங்கள் கடந்து விட்டது...

கிரிக்கெட்டுக்காக வேலியில் கீறல் பட்டு..
விளையாட்டாய் கடந்தது விடலை காலம்..

கணக்கு வாத்தியார் மேல் கோபப்பட்டு
காணாமலே போய்..பின் கிடைத்து..
கடந்தே போனது பள்ளிக்காலம்..

காதலிக்காக காம்பவுண்ட் சுவர் தாண்டி..
காலை உடைத்து கொண்டு..
பாழாய் போனது பருவ காலம்...

இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன்..
என் கடந்த காலத்தை...
.....................................................................
எல்லாரும் என்ன மன்னிக்கணும்..இது என்னோட முதல் முயற்சி..

கீதம்
29-09-2010, 08:18 AM
கடந்தகாலத்தைத் தேடும் முயற்சியில் நிகழ்காலத்தைத் தொலைத்துவிடாதீர்கள். முயற்சி நன்று. தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

தாமரை
29-09-2010, 08:28 AM
பதிலும் விவாதங்களும் இங்கே இருக்கு

தேடிக்கொண்டிருக்காதே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7248)

இப்படிப்பட்ட ஆரோக்யமான அலசல்களை தமிழ்மன்றத்தில் மட்டும்தான் காண முடியும்.

Nivas.T
29-09-2010, 09:05 AM
நேற்று என்பது இறந்தது
நாளை என்பது பிறக்காதது
இன்று என்பது நிசம்
அதுவும் இக்கணம் என்பதே ஆகும்

அழக்கான கவிதை நண்பரே

உங்களது முயற்சி தொடரட்டும்

வாழ்த்துக்கள் :)

பிரேம்
30-09-2010, 01:19 AM
ஊக்குவித்த எல்லாருக்கும் நன்றி..

பிரேம்
30-09-2010, 01:29 AM
கடந்தகாலத்தைத் தேடும் முயற்சியில் நிகழ்காலத்தைத் தொலைத்துவிடாதீர்கள். முயற்சி நன்று. தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

அதெல்லாம் தொலைக்க மாட்டேன்.. சும்மா ஒரு flow ல எழுதிட்டேன்..இருந்தாலும் உங்க அட்வைஸ் மைண்ட்ல இருக்கும்..நன்றி..தல..