PDA

View Full Version : லினக்ஸ்க்கு புதியவள்



தீபா
24-09-2010, 06:47 AM
எனக்கு லினக்ஸ் பற்றி துளியும் தெரியாது. விண்டோஸ் 7 உபயோகித்து வருகிறேன். விண்டோஸிலேயே லினக்ஸை உபயோகப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறேன். பல டிவைஸ்களை முழுமையாக சோதனை செய்தபிறகு முழுமையாக லினக்ஸுக்கு மாறிவிடலாம் என்று நினைக்கிறேன்.
ஆகவே, எனக்கு படிப்படியாக எப்படி செய்யவேண்டும் என்று சொல்வீர்களா?

கூடவே, எந்தந்த உபரி மென்பொருட்கள் தேவை, தமிழில் எழுத்தடிக்க..... மற்றபடி, நிறுவுவதற்கு முன்பு தேவையானவை ஆகிய அனைத்தும் சொல்வீர்களா? நிறுவிய பின் எழும் கேள்விகளை லினக்ஸ் பயன்படுத்தியபிறகு கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்
இங்குள்ள சில திரிகள் படித்து குழப்பமாக இருக்கிறேன்.

எனக்குத் தேவை.... ஒண்ணாம் வகுப்பிலிருந்து பாடம்..

தீபா
24-09-2010, 09:45 AM
இந்த பதிவை உபுண்டு 10.04 லிருந்து எழுதுகிறேன். USB யில் Test முறையில்ல் இருக்கிறேன். பல விஷயங்கள் புரியவில்லை. வின்டோஸில் இருக்கும் நோட் பேட் போல இதில் இல்லையா? தமிழில் டைப் செய்து தனியே சேமித்து வைக்க முடியவில்லை??

பாரதி
24-09-2010, 11:26 AM
எனது மடிக்கணினியில் நான் உபுண்டு 10.04ஐதான் பயன்படுத்துகிறேன். விண்டோஸில் இருக்கும் எல்லாப்பயன்களும் லினக்ஸிலும் உண்டு. மன்ற மின்நூல்கள் பகுதியில் இருக்கும் லினக்ஸ் புத்தகத்தை பதிவிறக்கி படியுங்கள். உங்களுக்கு எளிதில் விளங்கும்.

தமிழில் தட்டச்ச ஐபஸ் என்ற உள்ளடங்கிய மென்பொருள் உபுண்டுவில் இருக்கிறது. தமிழில் தட்டச்சி கோப்புகளை சேமிக்க முடியும்.

லினக்ஸ் புத்தகத்தைப் படித்து, லினக்ஸை நிறுவுங்கள். பின்னர் உங்கள் ஐயங்களை விளக்கமாக கேளுங்கள். என்னால் முடிந்த வரை உதவுகிறேன்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் லினக்ஸில் ஆர்வம் கொண்டு ஒருவர் திரி தொடங்கி இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. முறையான பயன்பாட்டிற்கு பின்னர் லினக்ஸை போல சிறந்த ஒரு இயங்குதளம் வேறெதுவும் இருக்காது என்று உணர்வீர்கள்.

Nivas.T
24-09-2010, 02:13 PM
லினக்ஸ் ஒரு நல்ல அபரடிங் சிஸ்டம், எளிதுதான்
விண்டோஸ் விட மிக பாதுகாப்பனது

http://www.linux.org/lessons/beginner/toc.com/
http://beginnerlinuxtutorial.com/

இவை உதவுமா என்று பாருங்கள்

நூர்
30-09-2010, 04:59 AM
நண்பர்களே, எனக்கு ஒரு சந்தேகம். என்னிடம் உபுண்டு CD இருக்கிறது.(அதை இன்னும் நான், உபயோகிக்கவில்லை.)

அபரடிங் சிஸ்டம் லினக்ஸ்,உபுண்டு இரண்டும் ஒன்றா அல்லது வேறு,வேறா ?

நன்றி.

தீபா
30-09-2010, 08:14 AM
உபுண்டுவை VMware வழியாக இன்ஸ்டால் செய்து பார்த்தேன். mp3 பாடல் கூட எடுக்க மாட்டேங்குதே ஏன்?

பாரதி
30-09-2010, 05:38 PM
நண்பர்களே, எனக்கு ஒரு சந்தேகம். என்னிடம் உபுண்டு CD இருக்கிறது.(அதை இன்னும் நான், உபயோகிக்கவில்லை.)

அபரடிங் சிஸ்டம் லினக்ஸ்,உபுண்டு இரண்டும் ஒன்றா அல்லது வேறு,வேறா ?


அன்பு நண்பரே,
ஆபரேட்டிங் சிஸ்டம் என்றழைக்கப்படும் இயங்குதளம்தான் லினக்ஸ். விண்டோஸ்98, விண்டோஸ் மீ, எக்ஸ்-பி, விஸ்டா.... இதைப்போன்ற இயங்குதளம்தான் லினக்ஸ்.

லினக்ஸை யார் வேண்டுமானாலும் தங்கள் தேவைக்கேற்ப வடிவமைத்துக்கொள்ளலாம். திறவூற்று மென்பொருளும் கூட. அப்படி லினக்ஸை பலரும் தங்கள் விருப்பம் போல வடிவமைத்து வருகிறார்கள். அவற்றில் ஒன்றுதான் உபுண்டு. உபுண்டுவைப் போன்று ரெட் ஹேட், மாண்ட்ரீவா, சூசி, லினக்ஸ் மிண்ட், டாம்ன் சுமால் லினக்ஸ், குபுண்டு என்று நூற்றுக்கணக்கில் லினக்ஸ் வெளியீடுகள் இருக்கின்றன.

நமக்கு தேவையான லினக்ஸ் எது என்பதை தேர்ந்தெடுத்து நாம் நிறுவிக்கொள்ளலாம். இப்போதைய நிலையில் அதிகமான பயனாளர்களைக் கொண்டிருப்பது உபுண்டு லினக்ஸ்.

லைவ் சிடி என்ற முறையில் லினக்ஸ் இயங்குதளத்தை விண்டோஸிலேயே பார்வையிடலாம். அதாவது லினக்ஸ் நமது கணினியில் நிறுவப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை நாம் காண்பதற்கு லைவ்சிடி உதவும்.

பாரதி
30-09-2010, 05:43 PM
உபுண்டுவை VMware வழியாக இன்ஸ்டால் செய்து பார்த்தேன். mp3 பாடல் கூட எடுக்க மாட்டேங்குதே ஏன்?

உபுண்டுவிலும் கூட நாம் வி.எல்.சி மீடியா பிளேயரை நிறுவி நம் விருப்பம் போல பாடல்களைக் கேட்க இயலும். வி.எல்.சியைப் போன்றே பல மென்பொருட்கள் இருந்தாலும் கூட விண்டோஸில் வி.எல்.சியைப் பயன்படுத்தியவர்களுக்கு லினக்ஸிலும் அதைக் கையாள்வது மிகவும் எளிது.

நீங்கள் வி.எம்.வேர் மூலமாக நிறுவுவதைக் காட்டிலும் விண்டோஸை ஒரு பகுதியிலும், லினக்ஸை இன்னொரு பகுதியிலும் நிறுவி பயன்படுத்துங்கள் என பரிந்துரைக்கிறேன். உண்மையில் லினக்ஸை நிறுவியதற்கு மிகவும் மகிழ்வீர்கள். நமக்கு சற்று பொறுமை அவசியம். அவ்வளவுதான்.

நூர்
01-10-2010, 05:35 AM
அன்பு நண்பரே,
ஆபரேட்டிங் சிஸ்டம் என்றழைக்கப்படும் ............ நிறுவப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை நாம் காண்பதற்கு லைவ்சிடி உதவும்.

நண்பர் பாரதி அவர்களுக்கு நன்றி.

SureshAMI
25-01-2011, 01:33 PM
இன்டர்நெட் வசதி இருந்தால் VMWARE லும் ஆடியோ வீடியோ codec களை இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும். இல்லையென்றால் VirualBox பயன்படுத்துங்கள்