PDA

View Full Version : சிறப்பு இரயில்!!!



கண்மணி
23-09-2010, 04:27 AM
எழுத்துக்களை வரிசையாய் நிறுத்திப் பிணைத்து
ஏதோ ஒரு காரணத்தை முன்னால் கோர்த்து
கற்பனை எண்ணையை நிரப்பி
எதோ ஒரு வார்த்தையை உரசி உசுப்பி
மெல்லப் பயணம் அனுப்பினேன்

சிலர் அதில் ஏறிக்கொண்டார்கள்
சிலர் சாளரத்தருகே நின்று
விடை கொடுத்தார்கள்.

முன்னும் பின்னுமாய் பயணம்
போய்க்கொண்டிருக்கிறது..

தங்கள் ஊருக்கு
இந்த இரயில் அழைத்துச் செல்கிறதென
சிலர் நம்பி ஏறிக் கொள்கிறார்கள்

சிலர் வரிகளைக்
கடக்க கூடாத இடங்களில் கடந்து
மோதப்பட்டுத்
திட்டிக் கொண்டிருக்கிறார்கள்

ஒரே வரிகளில்
முன்னும் பின்னுமாய்
பயணம்

ஒவ்வொரு முறையும்
ஏறிக்கொள்கிறவர்களின் இலக்கு
மாறிக்கொண்டே இருப்பதால்
புதிது புதிதாய் ஒரே பயணம்

ஒவ்வொரு பார்வையிலும்
ஒவ்வொரு பயணத்திலும்
அதே எழுத்துக்கள் விதவிதமாய்
தோற்றமளித்துக் கொண்டிருப்பதாய்
சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது..

அதே இரயிலில் சிலர்
தங்கள் சரக்குகளை விற்றுக் கொண்டிருந்தார்கள்.
வடை காஃபி டீ க்காக
யாரும் பயணிக்கவில்லை என்றாலும்

அந்த விற்பனைகள்
பயணத்தை இன்னும் சுவாரஸ்யமாக்கிக் கொண்டிருந்தன..

ஒவ்வொரு நிறுத்தத்தையும்
இன்று ஒரு பதார்த்தம்
அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது.

எழுத்து இரயிலோடு பதார்த்தங்களும் இணைந்து
இன்று
பயணங்கள் ருசியாகின.

இன்று கேட்கிறார்கள்
சிறப்பு இரயில் விடுங்கள்
நெரிசல் தாளவில்லையென!!!

கீதம்
23-09-2010, 05:25 AM
வழமையான எங்கள் கவிதை இரயில்களுக்கு மத்தியில் கண்மணிக்கவிதை சிறப்பு இரயில்தான். பிரமாதமாய்ப் போகிறது, பயணம். பாராட்டுகள், கண்மணி.

கண்மணி
23-09-2010, 05:47 AM
மொத்தத்தில எல்லோரும் கூவிக்கினே ஓடிகினிருக்கோம்.. சரிதான்.

அனுராகவன்
23-09-2010, 02:08 PM
ரயிலில் கவிதை படைக்க ஒரு ரசனை வேணும்..
நல்ல அழகாகதான் சொல்லி அசத்திவிட்டீர்கள்..
தொடருங்கள்..டடக்..கூகூ....

அமரன்
08-10-2010, 11:18 PM
திருவிழாவிடமும் தெரியவில்லை
திருவுளமும் புரியவில்லை..
விட்டால் ஏறிக்கொள்வேன்
சிறப்பில் ஏறுவதே சிறப்புத்தானே!