PDA

View Full Version : என்னத்தே எழுதி..!!!! என்னத்தே படிச்சு!!!வெற்றி
22-09-2010, 02:00 PM
ஆயசமாக இருந்தது , தேநீர் இருந்தால்
தேவலை என தோன்றியது .
ப்ச், அதில் என்ன இருக்கப்போகிறது ?
நிறைய தண்ணீர் , கொஞ்சம் அஸ்கா
தேயிலை இருக்குமோ ! இருக்காதோ ?

வேண்டாம், சினிமா ஏதும் போகலாமா....
ம்ஹூம் வேண்டவே வேண்டாம்
எவனே ஒருவனுக்கு நான் ஏன் சொம்பு
தூக்க வேண்டும் , சொந்த சிலவில்
தலைவலி வாங்குவானேன் ?

சரி நன்பனுக்கு தொ(ல்)லைபேசி
அழைப்பு கொடுக்கலாமா ? ம்ம்
ஒருவேளை போதையில் அவனிருந்து
அசிங்கமாக ஏதும் திட்டிவிட்டால் ?

வீட்டுக்கு போய் குழந்தைகளுடன்
பேசலாமா? ....வாய்ப்பே இல்லை
பரிட்ச்சை நேரம்.. மனைவி என்னை
நோண்டி நொங்கெடுப்பாள்..

ம்ம்ம் வாட் ஏன் ஜடியா சார் ஜீ
டாஸ்மாக்! ? ம்ம்ம்கூம் ஒரு வேளை
ஒரிசனல் சரக்கு இருந்து தொலைத்து
உடம்பு கெட்டுப்போச்ச்சுன்னா ? ..

யோசிக்கலானேன் ... ஏன் இப்படி
எனக்கு மட்டும்?,, யுரேக்கா,,,,,,
இந்த உலகில் எதுவுமே நிலையான
சுகம் இல்லை போலும்..

பக்கத்து டீகடை சென்றேன்.
ஒரு டீ என்றேன். வந்தது
குடித்தேன்.. ம்ம்ம் மச் பெட்டர்
இப்போதும் ஆயசாசமாகத்தான் இருக்கிறது
(பி.கு : இது என்ன கண்றாவி கவிதை என அலுத்துக்கொள்ளவேண்டாம் ... சலிப்பாக இருந்தது அதையே அந்த நிமிடத்தை அப்படியே வடித்து விட்டேன் :) )

Nivas.T
22-09-2010, 02:08 PM
இம் நல்லாருக்கு :D

ஒரு டீக்கு இப்படி யோசிக்கனுமா........:eek: இம்.............:lachen001:

அனுராகவன்
22-09-2010, 03:34 PM
டீக்குடித்தால் கவிதை வருமா?
இது நல்ல இருக்கு..நானும் ட்ரை பன்னுறேன்..
காலை டீ
மதியம் சூப்பு
மாலை பால்
இரவு கஞ்சி.....
இது எப்படி:cool:

பென்ஸ்
22-09-2010, 06:54 PM
மொக்கசாமி...

இது ஒரு மொக்க கவிதையாக இருந்தாலும்... இது சொக்க கவிதைதான்....

மனித மனம்... எளிதாக கிடைக்கும் என்றாலும் அதன் மேலான சுகத்திற்க்கு ஒரு "செர்ச்சு" அடித்து அதன் விளைவுகளை ஆராய்ந்து அப்புறம் சமயத்துக்கு தேவையானதை கொடுக்கிறதே... அருமை அல்லவா..????:D

தாமரை
23-09-2010, 06:22 AM
அதுசரி... நீங்களும் இவ்வளவு வெட்டியாவா இருக்கீங்க மொக்கை?

Narathar
23-09-2010, 07:17 AM
நல்லாத்தான் இருக்கு......

ஒரு கப் டீக்கு இத்தனை தூரம் யோசிப்பது
வாழ்த்துக்கள்!!!

தாமரை.......அது என்ன நீங்களும்????
அப்படீன்னா நீங்களும் என்றுதானே அர்த்தம்!!???
உடனேயே என்னையும் இதில் இழுத்துவிட வார்த்தை தேடுகின்றீர்கள். நான் ரொம்ப "பிஸி"ப்பா...... :D

நாராயணா!!!!!!

Ravee
23-09-2010, 07:17 AM
மொக்கை சார் டீ எல்லாம் வேணாம் ஜவ்வரிசி பாயசம் சாப்பிடுங்க ..... அதுதான் உங்களுக்கு தெரிஞ்சி ஒரிஜினலா இருக்கும் ..... :lachen001:

"பொத்தனூர்"பிரபு
23-09-2010, 07:59 AM
நல்லாத்தான் இருக்கு...:)

mania
23-09-2010, 08:28 AM
ஆஹா.....சூப்பரா இருந்தது......(நாமும் வெட்டியா தானே இருக்கோம்னு ஒரு டீ அடிச்சேன்.....சும்மா சொல்லக்குடாது....டீ சூப்பர்):D:D. நல்லாத்தான் இருக்கு மொக்க சாமி......
அன்புடன்
மணியா...:D

தாமரை
23-09-2010, 08:33 AM
நல்லாத்தான் இருக்கு......

ஒரு கப் டீக்கு இத்தனை தூரம் யோசிப்பது
வாழ்த்துக்கள்!!!

தாமரை.......அது என்ன நீங்களும்????
அப்படீன்னா நீங்களும் என்றுதானே அர்த்தம்!!???
உடனேயே என்னையும் இதில் இழுத்துவிட வார்த்தை தேடுகின்றீர்கள். நான் ரொம்ப "பிஸி"ப்பா...... :D

நாராயணா!!!!!!

பிஸின்னா என்ன? ஒரு சிப் அடிக்கலாம்னு தோணுது தானே

tea எப்பவுமே Wet tea தான். சாப்பிட ட்ரை (Try, Dry) பண்ணலாம்.

வெற்றி
25-09-2010, 08:44 AM
டீக்குடித்தால் கவிதை வருமா?
இது நல்ல இருக்கு..நானும் ட்ரை பன்னுறேன்..
காலை டீ
மதியம் சூப்பு
மாலை பால்
இரவு கஞ்சி.....
இது எப்படி:cool:
கூடவே "கடன் கிடையாது" ன்னு சேர்த்து போர்டு போட்டுகிட்டா நல்லா யாவாரம் ஆகும் :cool:

மொக்கசாமி...
இது ஒரு மொக்க கவிதையாக இருந்தாலும்... இது சொக்க கவிதைதான்....
மனித மனம்... எளிதாக கிடைக்கும் என்றாலும் அதன் மேலான சுகத்திற்க்கு ஒரு "செர்ச்சு" அடித்து அதன் விளைவுகளை ஆராய்ந்து அப்புறம் சமயத்துக்கு தேவையானதை கொடுக்கிறதே... அருமை அல்லவா..????:D
ஆமா அண்ணா " இது ஒரு பின்நவீனத்துவ" கவித.. :)

அதுசரி... நீங்களும் இவ்வளவு வெட்டியாவா இருக்கீங்க மொக்கை?
ஆமாம்... நிஜமாவே,, :frown:

நல்லாத்தான் இருக்கு......
ஒரு கப் டீக்கு இத்தனை தூரம் யோசிப்பது
வாழ்த்துக்கள்!!!

காலரையணாவுக்கு கூட லாயிக்கில்லா காதலுக்கு பக்கம் பக்கமாக எழுதுகிறோம் ..4 ரூபாய் சமாச்சரம் ஆச்சே,,, இட் ஈஸ் ஸ்பெசல் .. :lachen001:

மொக்கை சார் டீ எல்லாம் வேணாம் ஜவ்வரிசி பாயசம் சாப்பிடுங்க ..... அதுதான் உங்களுக்கு தெரிஞ்சி ஒரிஜினலா இருக்கும் ..... :lachen001:
ஏன் இந்த கொல வெறி... !!!?? :D

நல்லாத்தான் இருக்கு...:)
நன்றி ஜயா,,

praveen
25-09-2010, 09:24 AM
முதலிலே முடிவு செய்து விட்டீர்களே, தேநீர் என்று, பின்னர் என்ன?.

ஆக மொத்தத்தில் டீ அடிக்கடி குடிப்பீர்கள் போல தெரிகிறது.

அவ்வப்போது எழுதுங்கள். எனக்கு படிக்கும் போதே புரிகிறது மாதிரி உள்ளதையே கவிதை என ஒத்துக்கொள்வேன்.

இந்தக்கவிதையை பார்த்து விட்டு லொள்ளுவாத்தியாரும் தானும் எழுதுகிறேன் என்று கவிதை எழுதினால் மன்றம் தாங்காது :)

ஓவியன்
25-09-2010, 11:39 AM
ஒரு திரைப்படம் பார்ப்பதிலும் ஒரு கோப்பைத் தேனீர் பெட்டர் என்று சொல்லுறீங்க...!! :cool: :icon_b:என்னைப் பொறுத்த வரை அதுவும் உண்மைதான், ஏன்னா மற்றதெல்லாம் தலைவலி கொடுக்க, எனக்கு தேனீர் மட்டும் தலைவலி நீக்கும் மருந்தாக இருக்கிறது..!! :rolleyes:

த.ஜார்ஜ்
25-09-2010, 01:09 PM
மொக்க சாமி... இப்படியே நிறைய யோசிங்க.. சீக்கிரம் கவிதா உலகத்த நாம கைபத்திரலாம்.

அமரன்
25-09-2010, 09:57 PM
அட..

நானும் இந்த உலகத்தில ஒருத்தன்தான்..

தீபா
27-09-2010, 09:05 AM
மொக்கசாமி...

இது ஒரு மொக்க கவிதையாக இருந்தாலும்... இது சொக்க கவிதைதான்....

மனித மனம்... எளிதாக கிடைக்கும் என்றாலும் அதன் மேலான சுகத்திற்க்கு ஒரு "செர்ச்சு" அடித்து அதன் விளைவுகளை ஆராய்ந்து அப்புறம் சமயத்துக்கு தேவையானதை கொடுக்கிறதே... அருமை அல்லவா..????:D

எனது ஆதர்ச கதாநாயகனின்:cool: பின்னூட்டம் பெற்ற இக்கவிதை
கொஞ்சம் யோசிக்க வைக்கும் எள்ளல் மிகுந்த கவிதை,
வாழ்த்துக்கள் மொக்கச்சாமி அங்கில் :)