PDA

View Full Version : வழு தொடர்பாக...!



குணமதி
22-09-2010, 11:47 AM
வழு
வழாநிலை
வழுவமைதி


உயர்திணை அஃறிணை என்னும் இரண்டு திணைகள்,

ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்னும் ஐம்பால்கள்,

இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் முக்காலங்கள்,

தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூவிடங்கள்,

வினா,

விடை,

மரபுகள் - ஆகிய ஏழும் சொற்றொடர்களில் தத்தம் இலக்கணமரபு தவறி வந்தால் அவை வழுவாம்.


வழு - இலக்கணக் குற்றம்.

வழா நிலை - இலக்கணக்குற்றம் இல்லாமல் அமைத்தல்

வழுவமைதி - இலக்கணக்குற்றம் உள்ளதாகக்கருதப்பட்டாலும் அமைதி கூறி ஏற்றுக்கொள்வது


எடுத்துக்காட்டுகள் :


திணை வழு - அவன் வந்தது

பால் வழு - அவன் வந்தாள்

இட வழு - நாம் வந்தான்

கால வழு - நாளை வந்தாள்

வினா வழு - கறக்கிற எருமை பாலோ சினையோ?

விடை வழு - பட்டுக்கோட்டைக்கு வழி எது என்றால் கொட்டைப்பாக்கு எட்டுப்பணம் என்பது

மரபு வழு - யானை செலுத்துவாரை இடையர் என்பது


வழுவமைதி தொடரும்...

அனுராகவன்
22-09-2010, 01:48 PM
வழுவமைதி அருமை...
ஆனால் இதை படிக்க அகராதி வேணும் போல..
தொடருங்கள் ..

பாரதி
22-09-2010, 02:59 PM
மிகவும் நன்றி குணமதி.
பலரும் அறிந்து கொள்ள வேண்டியவற்றை தொடர்ந்து தாருங்கள்.

குணமதி
23-09-2010, 03:17 AM
வழுவமைதி அருமை...
ஆனால் இதை படிக்க அகராதி வேணும் போல..
தொடருங்கள் ..

புரியாததைக் கேளுங்கள், இயன்றவரை விளக்குகிறேன்.

பின்னூட்டத்திற்கு நன்றி.

குணமதி
23-09-2010, 03:18 AM
மிகவும் நன்றி குணமதி.
பலரும் அறிந்து கொள்ள வேண்டியவற்றை தொடர்ந்து தாருங்கள்.

தொடர்ந்து எழுத எண்ணியுள்ளேன்.

மிக்க நன்றி.

கீதம்
23-09-2010, 05:38 AM
அருமையான முயற்சி. இந்தத்திரி இலக்கணம் கற்க விரும்பும் என்னைப்போன்ற பலருக்கும் உதவுவதாக அமையும் என்று நம்புகிறேன். மிகவும் நன்றி, குணமதி அவர்களே.

குணமதி
24-09-2010, 03:58 AM
மிக்க நன்றி.

ஆதவா
24-09-2010, 04:39 AM
அருமைங்க.. வழு தொடர்பானவைகள் நன்றாக புரிந்தது!!
தமிழ் இலக்கணம் முழுக்கவும் நீங்கள் எழுதினால் எங்களைப் போன்றோர் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்!!!

Narathar
24-09-2010, 04:45 AM
அருமையான பதிவு
இது இப்படியே தொடரட்டும்

rajesh2008
24-09-2010, 09:24 AM
வழுவமைதியையும் உதாரணத்தோடு விளக்குங்கள்

குணமதி
24-09-2010, 02:30 PM
அருமைங்க.. வழு தொடர்பானவைகள் நன்றாக புரிந்தது!!
தமிழ் இலக்கணம் முழுக்கவும் நீங்கள் எழுதினால் எங்களைப் போன்றோர் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்!!!

நன்றி.

எனக்குத் தெரிந்தவரை அவ்வப்போது எழுத எண்ணியுள்ளேன்.

குணமதி
24-09-2010, 02:31 PM
அருமையான பதிவு
இது இப்படியே தொடரட்டும்

மிக்க நன்றி.

குணமதி
24-09-2010, 02:32 PM
வழுவமைதியையும் உதாரணத்தோடு விளக்குங்கள்

அப்படியே!

பின்னூட்டமிட்டதற்கு நன்றி.