PDA

View Full Version : தலைப்பற்ற கவிதை



ஆதி
22-09-2010, 10:59 AM
என்னை பார்க்க வந்திருந்தாள் அம்மு
எப்பொழுதும் போன்ற மகிழ்ச்சியும்
குழந்தை போன்ற இனிமையும்
அவளின் குரல்களில் நேற்று இல்லை..

மிகவும் அயறர்ச்சியாகவும்
கனத்த துக்ககரம் நிறைந்தவளாகவும்
பாறையொன்றை வெட்டி முகத்தில் ஒட்டிக் கொண்டவளை போலவும்
இறுக்கமானவளாக இருந்தாள்..

அப்பொழுது என் வீட்டின் பின்புறத்தில்
உள்ள ஆலமரத்தின்
ஒரு பக்கத்தில் கழுகொன்று அலறிக் கொண்டும்
மற்றொரு பக்கத்தில் குயிலொன்று கூவிக் கொண்டும்
இன்னொரு பக்கத்தில் காகமொன்று கரைந்து கொண்டுமிருந்தது

அருகே சுற்றுச் சுவர்கள் எழுப்பிய
புதர் மண்டிய வெற்று மனையில்
கருநிறப் பாம்பொன்று சுவரேற
முயற்சித்துக் கொண்டிருந்தது..

அவளை அழைத்து அவற்றை காண்பித்தேன்

நிச்சலனத்தில் நிரம்பினாள் அம்மு....

அக்னி
22-09-2010, 11:10 AM
கவிதை,
பொருள் விளங்காத கனவாய்...

அனுராகவன்
22-09-2010, 11:13 AM
அம்முவுக்கு உடல் நிலை சரியில்லையோ..
பயம் வந்ததும் அவளை கவலை தொற்றிக்கொண்டு ஏதோ சிந்தனைபோல..
வரிகள் அனைத்தும் அருமை...

ஆதவா
22-09-2010, 12:13 PM
எனக்கு படித்தவுடனே தோன்றியது
அடுத்த படிநிலை...

புரிந்து கொள்ள முடியாத நடப்புகளை, தர்க்கங்களை விவரித்தல் அல்லது தன்னை நீங்குதல் என்பது கவிதையின் பிரதானம்.
குழந்தை போன்ற இனிமை இல்லாமல் போயிருத்தல், அவளின் அடுத்த நிலையைக் கூறுகிறது.
அவளது அயற்சி, துக்கம், இறுக்கம் யாவும் தாம் முன்பு கவனித்த பொருளொன்று/நிகழ்வொன்று... அல்லது எதுவாகிலும் தனக்கு பொருள் விளங்காமல் போனது குறித்து பேசுகிறது.
(அம்மு வயசுக்கு வந்துட்டான்னு நினைக்கிறேன்!!!)

பறவைகள் எனும் குறியீடுகள், அவளுக்கு சாதகமாகவோ பாதகமாகவோ விளங்குகின்றன.
பாம்பொன்றின் முயற்சி, அவளுக்கு அடுத்த நிலையை உணர்த்துவதாக இருக்கிறது!!

சரி.... இதில் எந்த சம்பவமும் இல்லை... அவ்வளவு ஏன்,
”என்னை” என்பது கூட மனுஷத்தனம் நிறைந்ததில்லை...

இது இன்னும் பல பொருள் குறித்து பேசப்படலாம்!!!

அன்புடன்
ஆதவா

தாமரை
22-09-2010, 12:18 PM
இப்படியே எழுதிகிட்டு இருந்தா பலர் தலையைப் பற்றத்தான் செய்வாங்க.. சும்மா சுத்துதில்ல...

இதை நம்ம மக்கள் ரொம்ப சிம்பிளா அந்தக் காலத்தில சொல்லிப்புட்டாங்க..

அதான்..

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம்..

அக்னி
23-09-2010, 09:30 AM
கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம்..

ஆதனும் ஆதவாவும் தானே...

தாமரை
23-09-2010, 09:40 AM
கவிதை,
பொருள் விளங்காத கனவாய்...






கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம்..



ஆதனும் ஆதவாவும் தானே...

ஏம்பா கவிதையை கஷ்டமா ஒருத்தர் எழுதினா கவிதை புரியலியேன்னு தலையைச் சொறிஞ்ச..

கவிதையோட அர்த்தத்தை நான் ரொம்ப எளிதா விளங்கிரும்னு நம்பிச் சொன்னேன்..

இப்ப கோயில்ல ஆடின கொடுமை ஆதனும் ஆதவாவும் தானேன்னு கேட்கறியே...

அந்த ரெண்டுக் கொடுமையில ஒண்ணு நீ தான்.. இன்னொன்னு ?
அதுவும் நீதான்!!

செல்வா
23-09-2010, 01:16 PM
ஓ.. இதுக்குப் பேரு தான் பின் நவீனத்துவ மறுவாசிப்பா?

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
26-09-2010, 08:56 AM
கவிதை ஓ.கே. ஆனால் பாம்புக்கும் அம்முக்குவுக்குமிடையே உள்ள ஒற்றுமை விளங்கவில்லை. மற்ற அனைத்தும் தூக்கல்.

ஆதி
29-09-2010, 10:26 AM
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி..

ஆதவாவின் பின்னூட்டம் ஒரு கோணமென்றால், தாமரை அண்ணாவின் பின்னூட்டம் மறு கோணம்..

இரண்டும் இரு முனை இரண்டையும் மறுத்துவிட முடியாது..

--------------

உலக கவிதைகளின் கோட்பாடு என்பது மாறி கொண்டே வந்திருக்கிறது, ஒவ்வொரு கோட்பாடும் ஒரு கால அளவையில் முடிவுற்றிருக்கிறது.. அத்தனை கோட்பாடுகளையும் ஒரு பொதுச் சொல்லில் இசம் என்றும் நாம் அடைத்துவிடுகிறோம்..

செவ்விலக்கியவிசம் என்னும் classicism முதன் முதலில் தோன்றிய இசமாகும். இந்த இசமென்னும் கோட்பாடு கிரேக்க இலக்கியங்களில் இருந்தே பிறந்தது.. (இசங்கள் குறித்து தெளிவாக ஒரு கட்டுரை எழுதுகிறேன்)

இவ்வழி வந்தவைத்தான் நவீனம், பின்னவீனம் எல்லாம்..

1999-ஆம் ஆண்டில் பின்னவீனம் இறந்துவிட்டதாக அறிவித்து, ஸ்டக்கிஸ்டுகளால் வகுக்கப்பட்ட கோட்பாடுத்தான் மீள்நவீனத்துவம், கடவுளை புதுக்கோணத்தில் மக்களிடம் சேர்த்தல் என்பதே இதன் முதன்மையாக கொள்கை..

தமிழில் மீள்நவீனத்துவம்/மறுநவீனத்துவம் எனும் வார்த்தை/கோட்பாடு இன்னும் உட்சரிக்கப்படாமலே இருக்கிறது, மீள்நவீனத்துவம் குறித்த விவாதங்களும் பெரும்பாலும் துவங்கப்படவே இல்லை. மீள்நவீனம் குறித்த பேச்சுக்கள்/அதை அறிந்து கொள்ளும் முயற்சிக்கள் கூட இன்னும் துவங்கப்படவில்லை.

அப்படிப்பட்ட இந்த சூழலில், மீள்நவீனத்துவ கோட்பாட்டின் அடைப்படையில் இந்த படைப்பை உருவாக்க முயத்சித்தேன்..

மீள்நவீனத்துவன் புரியாவிட்டாலும், கவிதை புரிய வேண்டும் என்பதால் தான் கவிதையை எளிமைக்காக முயற்சித்தேன்..

//கவிதை ஓ.கே. ஆனால் பாம்புக்கும் அம்முக்குவுக்குமிடையே உள்ள ஒற்றுமை விளங்கவில்லை. மற்ற அனைத்தும் தூக்கல்.
//

ஆதவா சொன்னது போல் "என்னை" என்பதே நானல்ல(ஒரு மனிதனே அல்ல)..

அதுப்பொல் கவிதையின் கரு// அடுத்த படிநிலைக்கு செல்லுதல்//

அம்மு மனுஷியல்ல..

பாம்புக்கும் அம்முவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஆதவாவின் பின்னூட்டத்தில் உங்க கேள்விக்கு பதில் இருக்கு ஜூனத்
---------------------------------------------------

அப்புறம், கவிதையின் இன்னொரு முனையை பார்த்ததன் மூலம்..

போஸ்ட்ரீமாடனிஸ(பின்-மீள்நவீனத்துவ)த்தையும் நாம உருவாக்கிட்டோம்..

சரிதானே தாமரையண்ணா :)

தாமரை
29-09-2010, 06:08 PM
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி..

ஆதவாவின் பின்னூட்டம் ஒரு கோணமென்றால், தாமரை அண்ணாவின் பின்னூட்டம் மறு கோணம்..

இரண்டும் இரு முனை இரண்டையும் மறுத்துவிட முடியாது..

--------------

உலக கவிதைகளின் கோட்பாடு என்பது மாறி கொண்டே வந்திருக்கிறது, ஒவ்வொரு கோட்பாடும் ஒரு கால அளவையில் முடிவுற்றிருக்கிறது.. அத்தனை கோட்பாடுகளையும் ஒரு பொதுச் சொல்லில் இசம் என்றும் நாம் அடைத்துவிடுகிறோம்..

செவ்விலக்கியவிசம் என்னும் classicism முதன் முதலில் தோன்றிய இசமாகும். இந்த இசமென்னும் கோட்பாடு கிரேக்க இலக்கியங்களில் இருந்தே பிறந்தது.. (இசங்கள் குறித்து தெளிவாக ஒரு கட்டுரை எழுதுகிறேன்)

இவ்வழி வந்தவைத்தான் நவீனம், பின்னவீனம் எல்லாம்..

1999-ஆம் ஆண்டில் பின்னவீனம் இறந்துவிட்டதாக அறிவித்து, ஸ்டக்கிஸ்டுகளால் வகுக்கப்பட்ட கோட்பாடுத்தான் மீள்நவீனத்துவம், கடவுளை புதுக்கோணத்தில் மக்களிடம் சேர்த்தல் என்பதே இதன் முதன்மையாக கொள்கை..

தமிழில் மீள்நவீனத்துவம்/மறுநவீனத்துவம் எனும் வார்த்தை/கோட்பாடு இன்னும் உட்சரிக்கப்படாமலே இருக்கிறது, மீள்நவீனத்துவம் குறித்த விவாதங்களும் பெரும்பாலும் துவங்கப்படவே இல்லை. மீள்நவீனம் குறித்த பேச்சுக்கள்/அதை அறிந்து கொள்ளும் முயற்சிக்கள் கூட இன்னும் துவங்கப்படவில்லை.

அப்படிப்பட்ட இந்த சூழலில், மீள்நவீனத்துவ கோட்பாட்டின் அடைப்படையில் இந்த படைப்பை உருவாக்க முயத்சித்தேன்..

மீள்நவீனத்துவன் புரியாவிட்டாலும், கவிதை புரிய வேண்டும் என்பதால் தான் கவிதையை எளிமைக்காக முயற்சித்தேன்..

//கவிதை ஓ.கே. ஆனால் பாம்புக்கும் அம்முக்குவுக்குமிடையே உள்ள ஒற்றுமை விளங்கவில்லை. மற்ற அனைத்தும் தூக்கல்.
//

ஆதவா சொன்னது போல் "என்னை" என்பதே நானல்ல(ஒரு மனிதனே அல்ல)..

அதுப்பொல் கவிதையின் கரு// அடுத்த படிநிலைக்கு செல்லுதல்//

அம்மு மனுஷியல்ல..

பாம்புக்கும் அம்முவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஆதவாவின் பின்னூட்டத்தில் உங்க கேள்விக்கு பதில் இருக்கு ஜூனத்
---------------------------------------------------

அப்புறம், கவிதையின் இன்னொரு முனையை பார்த்ததன் மூலம்..

போஸ்ட்ரீமாடனிஸ(பின்-மீள்நவீனத்துவ)த்தையும் நாம உருவாக்கிட்டோம்..

சரிதானே தாமரையண்ணா :)

நீங்க இப்படிப் பார்த்தால் 16 அர்த்தம் படிச்சமே அந்தக் கவிதையை எந்த இசத்தில் சேர்ப்பது?

அந்தக் கவிதை பிறந்த கதை சொல்கிறேன் கேள்..

ஒரு முறை ஒரு கோப்பைத் தேனீர் என்று யவனிகாக்கா ஒரு கவிதை எழுதினாங்க கவிச்சமர்ல

அதை அப்படியே வரிக்கு வரி தலைகீழா (மேலிருந்து கீழாக இருந்ததை கீழிருந்து மேலாக மாற்றி எழுதி) எழுதி கண்ணாடிக் கவிதைன்னு ஒரு பெயர் வச்சேன்...

ஆனால் என் மருமகளுக்கு அதில் திருப்தியில்லை, மாமா எண்டர் தி டிராகன் படத்தில கிளைமாக்ஸ் ஞாபகம் இருக்கில்ல என்று கேட்டாள்... ஆமாம் சுத்தியும் கண்ணாடி இருக்க மாளிகையில் சண்டை நடக்குமே ஞாபகம் இருக்கு என்றேன்.

மாமா கண்ணாடிக் கவிதை எழுதினா அப்படி இருக்கணும் என்றாள் மருமகள்..

அதற்கும் வாய்ப்புக் கிடைச்சது. கவிச்மர்லயே எழுதினேன். அதில் என்ன நயம் என்றால் அந்தப் படத்தில் கண்ணாடியில் வில்லனின் பிம்பங்கள் பலவாகத் தெரிவது போல் இங்க அர்த்தங்கள் பலவாக இருக்கும்.

அந்தப் படத்தில் புரூஸ்லி உண்மை வில்லனைக் கண்டு பிடிக்க என்ன செய்வார்? ஒவ்வொரு கண்ணாடியா உடைப்பார். கண்ணாடியில் தெரியும் போலி உருவங்கள் மறைய நிஜ வில்லன் வெளிப்படுவான்.

அதே போல் அனைத்து அர்த்தங்களையும் உடைத்தால் மட்டுமே உண்மை உருவம் தெரியணும் என்ற நோக்கில் எழுதப்பட்டது அது.

மீள் நவீனத்துவத்தை நாம ஆரம்பிக்கலியேன்னு நீங்க சொல்றதை ஒத்துக்க மாட்டேன். சொற்சிலம்பத்தில் பார்த்தீங்கன்னா எங்களையே இறை உருவங்களா வச்சுத்தான் வாதங்களை செய்துகிட்டு இருப்போம், நான் சிவன்.. அவங்க காளியாத்தா.. அதே சமயம் அந்த கதைகளுக்குள்ளே கருத்துக்களை பொத்தி வச்சிருப்போம். இன்னும் 50 ஆண்டுகள் கழித்து இதை ஒரு இசம் என்று சொல்லி யாராவது சொல்லி மேலை நாடுகளுக்கு பெருமை சேர்க்கலாம். ஆனால் இதுவோ இந்தியாவில் 7500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருக்கு என்பதுதான் உண்மை.

கத்திக் கொண்டிருக்கிற யாருக்கோ தெரியலை என்பதற்காக அவை நம்மிடம் இல்லை என்று அர்த்தமில்லை. உங்க கண்ணெதிரிலேயே படைக்கப்பட்ட பல விசித்திரப் படைப்புகள் நம்ம மன்றத்தில் இருக்கு.

நம்ம நாட்லதான் இலக்கியங்களில் அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கையும் இணைத்தும் பிரித்தும் கலந்தும் பிசைந்தும் ஒன்றில் ஒன்றை மறைத்தும் பல வகை இலக்கியங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அந்த நுட்பங்களெல்லாம் வெளிநாடுகளில் கிடையாது.

தமிழ்ச் சங்கம் - அந்த காலத்தில் இதற்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு இருந்தது தெரியுமா?

இங்கே அரங்கேற்றப்படும் கவிதைகளுக்கு அதி பயங்கர வாதப் பிரதிவாதங்கள் இருக்கும். கடுமையான விமரிச்னங்கள் ஆய்வுகள் இருக்கும். அத்தனையும் தாண்டி வந்தால் மட்டுமே அது அங்கீகரிக்கப்படும்.

இன்றைய கவிஞர்களோ ஒருத்தர் ஒரு சின்னப் பிழை சொன்னாலே போதும். உடனே வாடி விடுகிறார்கள். பொறுமுகிறார்கள். வசை பாடுகிறார்கள். தனக்குள் இருக்கும் அத்தனை வெறுப்புகளையும் வெறித்த்னத்தையும் அவர்கள் மேல் பாய்ச்சுகிறார்கள்.

அதில் நம்ம மன்றத்தில் வித்தியாசப்பட்டே நிக்குது. விமர்சனங்களும், புதுப்பார்வைகளும், செறிவூட்டப்படும் கருக்கள் என ஆரோக்யமான விஷயங்கள் நடக்கின்றன. அதனாலதான் பல எண்ணிப் பார்க்கவே முடியாத நுட்பங்கள் கொண்ட கவிதைகள் நம்ம மன்றத்தில் உண்டாகின்றன.

ஆனால் அந்த நுட்பங்கள் விவரிக்கப்படுகின்றனவா என்றால் இல்லை, அவை விவரிக்கப்பட்டால் அத்தனை இசங்களும் இங்கே வசமாகி இருப்பதை நீங்க பார்க்கலாம் ஆதன்.. 4000 ஆண்டுகள் வளர்ந்த இசங்கள் நாலைந்து ஆண்டுகளில் இங்கே பலபரிமாணங்களை கடந்து விடுகிறது..

ஆனால் நம் தமிழர்களின் பிரச்சனை என்னன்னா தங்களை மிகப் பெரிய கவிஞர்களாக கருதிக் கொள்பவர்கள் வெளிநாட்டு இலக்கிய பாணியின் பின்னால் வெள்ளைத்தோலுக்கு மயங்கிய விடலைகளாக அலைந்து கொண்டு இருக்கிறார்கள். இங்குள்ள நுட்பங்களை உதாசீனம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அதனால என்ன இசம் என்று வேண்டுமானாலும் சொல்லுங்க. ஆனால் அது நம்மிடம் இல்லைன்னு மட்டும் சொல்லாதீங்க...

ஆதி
30-09-2010, 12:01 AM
அண்ணா நம்ம கிட்ட இசங்கள் குறித்தான விவாதமில்லை என்று சொன்னேன் ஒழிய இசமே இல்லை என்று சொல்லவில்லை...

இலக்கணமில்லாமல் எழுதப்படுகிற படைப்பான செந்தொடைக்கும் புதுக்கவிதைக்கும் வேறுபாடு இல்லை, என்றாலும் நாம் அதை பின்பற்றுவது குறித்து யோசித்துக் கூட பார்க்கவில்லை, மேலை நாட்டில் எழுதப்பட்டவுடன் தான் இங்கும் யாப்பை கடந்து கவிதைகள் எழுதும் முயற்சி என்று பேச்சுக்கள் ஆரம்பித்தோம்.. ஆனால் செந்தொடை(புதுகவிதை, நவீனம், பின்னவீனம்,இசங்கள்) என்பது யாப்பில் அடுங்கிவிடுகிற ஒன்றே என்று இன்னும் பலருக்கு புரி(தெரி)யவில்லை.. என்னோட ஆதங்கம் எல்லாம் நம்மிடம் உள்ள வசதி ஒன்றை நாமேன் பயன்படுத்துவதில்லை என்பதுதான் ?

கீதாஞ்சலியை தாகூர் முதலில் வங்காள மொழியில் தான் எழுதினார், ஆனால் அதை பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லை, பிறகு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார், நல்ல வரவேற்பு கிடைத்ததுடன்/நோபல் பரிசும் கிடைத்தது. "
நோபல்" பரிசு என்பது உலக அங்கிகாரம். எத்தனையோ நாள் யோசித்திருக்கிறேன் ஏன் திருக்குறள் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க படவில்லை என்று, காரணம் நோபல் பரிசு கிடைத்தால் மேலை நாட்டவர்களின் பார்வை நம் இலக்கியங்கள் மீது திரும்புமே எனும் ஆசைத்தான்...

செல்வா, ஆதவா, மூர்த்தி இவங்க கிட்ட பேசும் போதெல்லாம் சொல்லிருக்கேன், மேலை நாடுகளில் இருந்தே நாமேன் கோட்பாடுகளை உள்வாங்கிகிட்டிருக்கோம், நாமேன் ஒரு கோட்பாட்டை உருவாக்கி மேலை நாடுகளுக்கு எடுத்து செல்ல கூடாது ? என்று கேட்டிருக்கேன், இசங்களை பற்றி அதிகாம பேசுறதுக்கும், கவிதையின் அடுத்தக்கட்ட நகர்வு என்னாவாக இருக்கும் என்று கேள்விபதில் திரியில் கேட்டத்துக்கும் இதுவே காரணம்...

பிறரை நாம் ஏற்றுக் கொண்டால் பிறர் நம்மை ஏற்றுக் கொள்வார்கள் என்பதை மிக ஆழமாய் நம்புகிறேன், ஒரு கோட்பாடு மேலை நாட்டில் பிறந்தால் அதை பயன்படுத்தி நாம் சினிமாக்கள் எடுத்துவிடுகிறார்கள், இங்கு நாம் வணிகமயத்தை இன்னும் தாண்டாமலே இருக்கிறோம், தினமணியை விட தினதந்தியித்தான் விரும்புகிறார்கள்.. "கடவுளுக்கு எதிரான சத்தியாகிரகம்" கருவை பற்றி நீங்கள் சொல்லும் போது கூட இந்த கருவை இங்க கண்டுக்க மாட்டாங்க இதையே நீ ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து போட்டா தூக்கி வச்சு கொண்டாடுவாங்க னு சொன்னீங்க, இந்த நிலையை மாற்றத்தான் நான் யோசிக்கிறேன். புது புது இசங்களை பற்றி பேசுவது ஒரு புது இசத்தை உருவாக்கும் எத்தனிப்பில் தான் அண்ணா..

தாமரை
30-09-2010, 01:15 AM
கடவுளை எதிர்த்து சத்தியாகிரகம்... கொல்லிமலையில் இருந்து இறங்கும் போது விவாதித்தது.. இதைக் கொல்லி மலை திரியில் நீ விவரித்தே ஆகணும், அன்றிலிருந்து இதை நாம விவாதிச்சிகிட்டுதான் இருக்கோம். இரவிக்கு ஃபோன் போடுங்கப்பா..

அதை விடு.. அகத்திணைகள் அப்படின்னு இருக்கே.. அதில் எவ்வளவு படிமங்கள் இருக்கு யோசிச்சியா? பிறிது மொழிதல் அணி - உவமையணி - உருவக அணி - வஞ்சப்புகழ்ச்சி அணி - தற்குறிப்பேற்ற அணி இப்படி பல அணிகள் இருக்கே.. இவைகள் தானே "த்துவங்களின்" அடிப்படையே.. இவற்றையும் இசங்களையும் ஆராய்ந்து ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதினா அப்போதான் தமிழ் திரும்பிப்பார்க்கப்படும். செந்தமிழ் மாநாடு என்று சொல்லி யாருக்கோ ஐஸ் வைப்பதால் இல்லை.

எங்கு விவாத விமர்சனங்கள் நடக்கிறதோ அங்கதான் தரம் உயரும். நம்ம படைப்பாளி அதுக்கு தயாரா இருக்கறதில்லையே..

நீ சொன்ன மாதிரி தமிழுக்கு ஆங்கிலத்தில் வாழ்த்துரை வழங்கணும் என்பது சரியான கூற்று. விவாதங்கள் விமர்சனங்கள் மற்றவர்களுக்கு புரிகிற மாதிரி இருந்தால் அது கொண்டாடப்படும். (கவிதை புரியாத மாதிரி இருந்தாலும்)..

"த்துவ"ங்களைத் தெரியும். தமிழும் தெரியும் என்கிற எழுத்தாளர்கள் ஏன் இதை முயற்சிக்கக் கூடாது?