PDA

View Full Version : விழிப்புணர்வு



அனுராகவன்
22-09-2010, 10:56 AM
விழிப்புணர்வு


வாழ்க்கை ஒரு சலசலப்புடைய
எங்கும் எதிலும் குறையுடைய
மதிகெட்ட இடமும் உண்டு,
அதற்காக
உங்கள் உரிமை விட்டு
வாழும் உயிரையும் விட்டு
ஏன் அனைத்து உடைமைகளும்
இழந்து நடுரோட்டில்
நின்று தலை
குணியும் நாளும் வந்து
அய்யோ,இப்படி
ஆகிவிட்டதே;...
இனியாது நான் மாற
மாட்டேனா ..என்று
புலம்பும் ஒரு வெகுளிதனமான
ஒரே விலங்கு
யார் தான் இந்த
மனிதன் தான்..

வாழ் பல்லாண்டு
அதற்காக ஏன்
வீழ்ந்தாய் சிறு
நிமிட ஆசைக்காக..
துயரமும் வரும்
துக்கமும் வரும்
எரிச்சலும் ,காழ்ப்புணர்ச்சியும்
தகாத சொல்லும்
எப்படி வருகிறது
யோசி மானிட...

அதற்கு ஒவ்வொரு நாழிகையும்
விழிப்புணர்வு எடுத்துவா..
வாழ்க்கையே இப்படி
கூறுப்போட்டு
விற்க்காமல்
வாழ ..எஜமானாக
அதில் நீயே அதிபதி..
உன் மனமல்ல..
ஆகா..ஒவ்வொரு
நிமிடமும் நட,சாப்பிடு...
விழிப்போடு செய்..
அதுபோதும்...
நீ மனிதனா மாறும் காலம்
வெகுதூரமில்லை..

இதோ..அழைக்கிறான் கடவுள்..