PDA

View Full Version : அன்பே...!!!



gopikrishnan.r
22-09-2010, 08:09 AM
கனவை நனவாக்கி
விழியில் மொழி பேசி
மயக்கி சென்றாயடி!

இதயம் ஒரு பாதி
இயங்க மறுத்தாலும்
நினைவில் நீ தானடி!

இனிய வாழ்க்கை தான்
நாளை நம் சொந்தம்
என்று சொன்னாயடி!

இழக்க ஏதுமில்லை
என்று சொன்னவுடன்
யார் நீ என்றாயடி!!!

அனுராகவன்
22-09-2010, 03:54 PM
நல்ல முயற்சி..
என் வாழ்த்துக்கள்...

gopikrishnan.r
24-09-2010, 11:51 AM
நல்ல முயற்சி..
என் வாழ்த்துக்கள்...

நன்றி அனு...

Nivas.T
24-09-2010, 12:09 PM
அழகுக் கவிதையாய்
காதல் தோல்வியின்
கண்ணீர்

அருமை நண்பரே

gopikrishnan.r
25-09-2010, 06:09 AM
அழகுக் கவிதையாய்
காதல் தோல்வியின்
கண்ணீர்

அருமை நண்பரே

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி அன்பரே....

vasanth111193
30-09-2010, 12:11 PM
மிகவும் நன்றகாக உஅளது என் அண்ணன் ஆன gopikrishnan.ர.

gopikrishnan.r
08-10-2010, 01:17 PM
நன்றி வசந்த்....

சிவா.ஜி
08-10-2010, 03:43 PM
முதல் ஒன்பது வரிகள் ஓக்கே....கடைசி மூணுவரிகள்...குழப்பம்.

எதை இழக்கனும்...ஏன் இழக்கனும்.....???

அமரன்
08-10-2010, 05:45 PM
எண்பதுகளில் வந்த பாடல்களைப் போல இதயத்தை வருடிச், செல்கிறது கவிதை.

பராட்டுகள்

அனுராகவன்
08-10-2010, 06:01 PM
பராட்டுகள்
அமரன் எங்கே இவ்வளவு அவசரம்...
புகைவண்டிக்கு செல்லனுமா..
(சும்மா ஒரு தமாசு)

gopikrishnan.r
09-10-2010, 08:33 AM
முதல் ஒன்பது வரிகள் ஓக்கே....கடைசி மூணுவரிகள்...குழப்பம்.

எதை இழக்கனும்...ஏன் இழக்கனும்.....???

வேலை, அந்தஸ்து,பணம் என்று ஏதாவது ஒன்றை சார்ந்தே இருக்கிறது இன்றைய காதல்....
இவை காதலிக்கும் போது தெரிவதில்லை.ஆனால் திருமணம் என்று வரும் போது மேற்கூறியவற்றுள் எதையாவது சூழ்நிலையின் காரணமாக இழக்க நேரிடும் போது அந்த மூன்று வரிகள் பொருந்த நேரிடலாம்....