PDA

View Full Version : காவிரிப் பெண்.



M.Jagadeesan
21-09-2010, 10:28 AM
பிறந்த வீட்டின் மாண்பைக் காத்து
புகுந்த வீட்டின் பெருமையை நாளும்
கண்போல் எண்ணிக் கடமையை ஆற்றும்
பெண்ணே சிறந்த பெண் ஆவாள்.

கன்னட மண்ணிலே பிறந்தது வளர்ந்தாய்
எந்தமிழ் நாட்டிடை புகுந்து மகிழ்ந்தாய்
புகுந்த வீட்டைப் புறந்தள்ளி வைத்திட்டு
பிறந்த வீட்டின் நலன்களை நாடும்

காவிரிப் பெண்ணே உனக்கிது தகுமோ ?
கானல் நீரோ? காவிரி நீரென
ஏங்கிடச் செய்தாய் இனியும் துயரினைத்
தாங்கிட எம்மால் ஆகாது தாயே.

ஆதி
21-09-2010, 10:54 AM
வணக்கம் ஜெகதீசன் ஐயா..

பாடல் நன்று..

சின்ன நெருடல் மனிதருக்கு தானே மாநிலமும் பிரிவும்.. மாநதிக்கு எல்லாம் மண் தானே.. பிரிந்தது நாம் பிரித்ததும் நாம்..

சிவா.ஜி
21-09-2010, 01:18 PM
காவிரி பிறந்தபோது...பிரிவில்லையே ஐயா....

ஆதன் சொன்னதைப்போல.....தண்ணீருக்கும் தோஷமுண்டாக்கி...அவளை தூஷிக்குமாறு செய்தது....மனிதமே இல்லாத பக்கத்து மாநில மாக்கள்தானே.
காவிரித்தாயை நொந்து என்ன பயன்.

தலைமகனுக்கும் கடை மகனுக்கும் ஒரே அளவான பாசம் காட்டுபவள்தானே தாய். தலைமகனே பெரும்பங்கு பிடுங்கிக்கொண்டால், கடைமகனுக்கு என்ன மிஞ்சும் என்ற தவிப்போடு...தீருவதற்குள் கொஞ்சமாவது அவனுக்குக் கொடுத்துவிட வேண்டுமெனத்தானே தலைவிரிக்கோலமாய்....ஓடி வருகிறாள்.

வாழ்த்துக்கள் ஜெகதீசன்.

அனுராகவன்
22-09-2010, 04:04 PM
வாழ்த்துக்கள் ஜெகதீசன்.
நல்ல வரிகள்..
காவிரி உன்னை கா விரித்தாயே..
கானல் நீர் கொடுத்தாலும் அது மண்ணை ஒன்றும் செய்வதில்லை..

M.Jagadeesan
30-01-2013, 06:31 AM
ஆதி , சிவா.ஜி, அச்சலா ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி.