PDA

View Full Version : சாதியும் சாமியும் ..



"பொத்தனூர்"பிரபு
21-09-2010, 05:48 AM
http://2.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TJd48RwSF-I/AAAAAAAAA7Y/uTIzEYZS5rI/s320/ther.jpg (http://2.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TJd48RwSF-I/AAAAAAAAA7Y/uTIzEYZS5rI/s1600/ther.jpg)
http://1.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TJd5AgrcemI/AAAAAAAAA7c/yxiVaPOO940/s320/tbldistrictnews_81335085631.jpg (http://1.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TJd5AgrcemI/AAAAAAAAA7c/yxiVaPOO940/s1600/tbldistrictnews_81335085631.jpg)








உச்சி முதல் பாதம் வரை
ஊரு மெச்சும் அலங்காரம்


தங்கத்தால மேனியெல்லாம்
தகதகனு மின்னுதய்யா
தள்ளி நின்னு பார்க்கையிலே
மனச ஏதோ பண்ணுதய்யா


வான ஒசரம் தேருகட்டி
வகையாய் அம்மனை அதுல வச்சு
வடம் பிடிச்சு இழுக்கையில
வந்ததையா வாய்ப்பேச்சு


வடக்கு வழி போனா ஒரு சாதி
கிழக்கு வழி போனா ஒரு சாதி
எந்த வழி போறதுனு ரெண்டும் மோதி


சாமிய மறந்துட்டான்
சாக்கடையில சாச்சு புட்டான்
தேரேரி வந்த அம்மன்
தெருவோரம் கிடக்குதய்யா


காவல்காக்குற அம்மனுக்கு
காக்கி சட்டை காவலுக்கு நிக்குதய்யா




பிரியமுடன் பிரபு ...
http://priyamudan-prabu.blogspot.com/2010/09/blog-post_21.html
:icon_rollout:

தாமரை
21-09-2010, 06:16 AM
சாதியைக் கண்(டி)டுக்காத சாமிக்கு நல்லா வேணும்!!!:eek::eek::eek:

"பொத்தனூர்"பிரபு
21-09-2010, 06:23 AM
சாதியைக் கண்(டி)டுக்காத சாமிக்கு நல்லா வேணும்!!!:eek::eek::eek:
////

கண்டிப்பா
எங்க ஊரில் முழுசா திருவிழா எடுத்து 16 வருஷம் ஆகுது , அதை நினைத்து எழுதினேன்

சிவா.ஜி
21-09-2010, 07:59 AM
அதுதான் வீதிக்கொரு சாதி, சாதிக்கொரு சாமின்னு நாறுதே.....

நல்லா வந்திருக்குக் கவிதை. வாழ்த்துக்கள் பிரபு.

Nivas.T
21-09-2010, 08:07 AM
எண்சான் உடம்புக்கு
முந்நூறு சாதியாம்
சாதிக்கு பத்துன்னு
மூவாயிரம் சாமியாம்

சாகப்போற மனுசனுக்கு
சாதி ஒரு கேடு
சாம்பலாகுற மனுசனுக்கு
சாமி ஒரு கேடு

பூமகள்
22-09-2010, 10:23 AM
எதார்த்தத்தை எடுத்தியம்பும் கவிதை.. வரிகள் எளிமையாகவும் இயல்பாகவும் இருக்கின்றன. வாழ்த்துகள் பிரபு.



சாகப்போற மனுசனுக்கு
சாதி ஒரு கேடு
சாம்பலாகுற மனுசனுக்கு
சாமி ஒரு கேடு
வாவ்.. கலக்கல் நிவாஸ்.. நறுக்கென்றிருந்தது. பாராட்டுகள். :)

rajaplus2
22-09-2010, 11:56 AM
சாதியும் சாமியும் சாமானியனுக்கு தேவை இல்லை

அனுராகவன்
22-09-2010, 03:52 PM
சாதிகள் இல்லையடி பாப்பா..பாரதி வரி மறந்தால்..
இந்த நிலை நமக்கு...
நல்ல வரிகள்..

"பொத்தனூர்"பிரபு
23-09-2010, 07:23 AM
எண்சான் உடம்புக்கு
முந்நூறு சாதியாம்
சாதிக்கு பத்துன்னு
மூவாயிரம் சாமியாம்

சாகப்போற மனுசனுக்கு
சாதி ஒரு கேடு
சாம்பலாகுற மனுசனுக்கு
சாமி ஒரு கேடு

நல்லா சொன்னிங்க
நன்றி

"பொத்தனூர்"பிரபு
23-09-2010, 07:26 AM
சாதியும் சாமியும் சாமானியனுக்கு தேவை இல்லை

ஆமாம் , நான் கடவுள் படத்துல வரும் வசனம்தான் நியாபகம் வருது

Narathar
23-09-2010, 07:29 AM
சாமிய மறந்துட்டான்
சாக்கடையில சாச்சு புட்டான்
தேரேரி வந்த அம்மன்
தெருவோரம் கிடக்குதய்யா


காவல்காக்குற அம்மனுக்கு
காக்கி சட்டை காவலுக்கு நிக்குதய்யா




பிரியமுடன் பிரபு ...
http://priyamudan-prabu.blogspot.com/2010/09/blog-post_21.html
:icon_rollout:

நன்றாகச்சொன்னீர்கள்!!!!!!
மிக அருமையான வரிகள்,
வாழ்த்துக்கள்......

அது சரி இத்தனை காலமாக எங்கே போயிருந்தீர்கள்? ( ஒரு வேளை நான் வராத காலங்களில் நீங்கள் வந்தீர்களோ???)

Narathar
23-09-2010, 07:31 AM
எண்சான் உடம்புக்கு
முந்நூறு சாதியாம்
சாதிக்கு பத்துன்னு
மூவாயிரம் சாமியாம்

சாகப்போற மனுசனுக்கு
சாதி ஒரு கேடு
சாம்பலாகுற மனுசனுக்கு
சாமி ஒரு கேடு

உங்கள் நியாயமான கோபம்
கவி வரிகளில் தெரிகின்றது

வாழ்த்துக்கள் நிவாஸ் "டீ" (சூடாக இருக்குமோ??? :D)

"பொத்தனூர்"பிரபு
23-09-2010, 07:39 AM
நன்றாகச்சொன்னீர்கள்!!!!!!
மிக அருமையான வரிகள்,
வாழ்த்துக்கள்......

அது சரி இத்தனை காலமாக எங்கே போயிருந்தீர்கள்? ( ஒரு வேளை நான் வராத காலங்களில் நீங்கள் வந்தீர்களோ???)


வேலை காரணமா அதிகம் வரவில்லை
வந்தாலும் கொஞ்சம் படிப்பதோடு சரி

இனி தொடர்ந்து வருவேன்

Ravee
23-09-2010, 07:47 AM
எளியவரிகளில் உங்கள் உணர்ச்சிகள் நன்று பிரபு :)

"பொத்தனூர்"பிரபு
23-09-2010, 07:49 AM
எளியவரிகளில் உங்கள் உணர்ச்சிகள் நன்று பிரபு :)
நன்றி