PDA

View Full Version : கடன்காரர் - குட்டிக்கதை

சொ.ஞானசம்பந்தன்
21-09-2010, 05:33 AM
”ஏன்’யா முத்துசாமி! உன்னிடம் நான் கடன் வாங்கியது எப்போது?”

“ஒரு மாதத்துக்கு முன்னே”.

“எப்போது தருவதாகச் சொன்னேன்?”

“இருபது நாளில்”.

“கெடு தாண்டிவிட்டதா இல்லையா?”

“ஆமாம்”.

”பின்னே ஏன்’யா வந்து கேட்கவில்லை?”

“நீங்களே வந்து தருவீர்கள் என்று இருந்து விட்டேன்”.

“நன்றாக இருக்கிறதே! வாங்குவதற்கும் நான் வர வேண்டும்; கொடுப்பதற்கும் உன்னைத் தேடி வந்து நான் அலைய வேண்டுமா?”

“மன்னியுங்கள். எங்கே ஓடிப் போய்விடப் போகிறீர்கள் என்று நினைத்தேன்”.

”நான் ஓட மாட்டேன் என்பதற்கு என்னய்யா உறுதி?”

“உறுதியில்லைதான். அப்படி நான் எவ்வளவு தந்து விட்டேன்? ஆயிரமா, பத்தாயிரமா? இருநூறு தானே?”

“இருநூறு உனக்குக் கேவலமாகத் தெரிகிறதா? இருநூறு வாங்கின நான் கேவலமானவன் என்று குத்திக் காட்டுகிறாயா?”

“ஐயையோ! அப்படியில்லை. பணம் வந்ததும் தூக்கி எறிந்து விடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.”

“என்னது? எறிகிறதா? பணத்தை மதிக்க வேண்டுமய்யா. ‘பொருள்தனைப் போற்றி வாழ்’ என்று ஒளவையார் சொன்னதைப் படித்ததில்லையா?”

“நீங்கள் சொல்வது சரிதான். நானே வந்து வாங்கிக் கொள்வேன்”.

“எப்போது?”

“நாளைக் காலையிலே”.

“கண்டிப்பாக வர வேண்டும். டிமிக்கி கொடுத்தால் நான் பொல்லாதவன் ஆகிவிடுவேன்.”

“கோபிக்காதீங்க. நிச்சயமாக வருவேன்.”

“வார்த்தை தவற மாட்டாயே?”

“மாட்டேன்.”

“ஜாக்கிரதை! காத்திருப்பேன்!”

(ஆனந்த விகடனில் எழுதியது)

அன்புரசிகன்
21-09-2010, 06:01 AM
என்னால ஒரு முடிவுக்கு வரமுடியல... :D

தாமரை
21-09-2010, 06:15 AM
ஐயா இன்னும் பெரிய கடனா வாங்க அடி போடுகிறார் என நினைக்கிறேன்.

ஹி ஹி...:D:D:D

M.Jagadeesan
21-09-2010, 06:25 AM
கடன் கொடுத்தார் நெஞ்சம்போல் கலங்கினான்
இலங்கைவேந்தன்.
கம்பன் இன்று இருந்தால் இப்படித்தான் பாடியிருப்பான்.

சிவா.ஜி
21-09-2010, 07:54 AM
இனிமேல் அந்தக் கடன் கொடுத்தவரே...வாங்கியவரைத் தேடிப்போய் இன்னும் கொடுப்பார். கொடுத்துவிட்டு....கெடுநாளைச் சரியாய் நினைவில் வைத்துப் போய் வாங்கிக்கொள்வார்....இல்லண்னா திட்டு விழுமே....

நல்லாருக்கு ஐயா. வாழ்த்துக்கள்.

Nivas.T
21-09-2010, 08:11 AM
இந்த கலாத்துல எனக்கு தெரிஞ்சி யாரும் இப்படி இல்ல

மிக்க நன்றி ஐயா

கீதம்
21-09-2010, 09:22 AM
நகைச்சுவைப் பகுதியில் பதிக்கவேண்டியது, தவறிப்போய் கதைப்பகுதியில் பதித்துவிட்டீர்கள்.

நல்லதொரு கற்பனை. பாராட்டுகள்.:icon_b:

rajesh2008
21-09-2010, 10:46 AM
இந்த கலிகாலத்தில் இப்படி ஒரு மனிதரா? அவருக்கு இன்னும் கடன் கொடுக்கலாம்

அனுராகவன்
22-09-2010, 01:45 PM
ஆயிரம் ரூபாய் வாங்கினால் நீங்க அவரை நினைக்கனும்..
அதற்குமேல் வாங்கினால் (10 லட்சம் வாங்கினால்) அவர் உங்களை நினைத்து பார்ப்பார்..
எனக்கும் முடிவு தெரியல..
கடன்பாட்டார் மனது....:confused::confused:

சொ.ஞானசம்பந்தன்
23-09-2010, 04:56 AM
என்னால ஒரு முடிவுக்கு வரமுடியல... :D

எதைப் பற்றி?

சொ.ஞானசம்பந்தன்
23-09-2010, 04:58 AM
ஆயிரம் ரூபாய் வாங்கினால் நீங்க அவரை நினைக்கனும்..
அதற்குமேல் வாங்கினால் (10 லட்சம் வாங்கினால்) அவர் உங்களை நினைத்து பார்ப்பார்..
எனக்கும் முடிவு தெரியல..
கடன்பாட்டார் மனது....:confused::confused:

மெய்தான்.

சொ.ஞானசம்பந்தன்
27-09-2010, 05:43 AM
கடன் கொடுத்தார் நெஞ்சம்போல் கலங்கினான்
இலங்கைவேந்தன்.
கம்பன் இன்று இருந்தால் இப்படித்தான் பாடியிருப்பான்.

இது கம்ப ராமாயணத்தில் இல்லாமையால் கம்பர் வாக்கல்ல. யாரோ இயற்றிய தனிப் பாடல்.

சொ.ஞானசம்பந்தன்
27-09-2010, 05:45 AM
நகைச்சுவைப் பகுதியில் பதிக்கவேண்டியது, தவறிப்போய் கதைப்பகுதியில் பதித்துவிட்டீர்கள்.

நல்லதொரு கற்பனை. பாராட்டுகள்.:icon_b:

நகைச்சுவைப் பகுதியில் பதிந்திருக்கலாந்தான்.கதை என விகடன் வெளியிட்டமையால் கதைப் பகுதியில் சேர்த்தேன். பாராட்டுக்கு நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
27-09-2010, 05:46 AM
இந்த கலாத்துல எனக்கு தெரிஞ்சி யாரும் இப்படி இல்ல

மிக்க நன்றி ஐயா

பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
27-09-2010, 05:48 AM
இனிமேல் அந்தக் கடன் கொடுத்தவரே...வாங்கியவரைத் தேடிப்போய் இன்னும் கொடுப்பார். கொடுத்துவிட்டு....கெடுநாளைச் சரியாய் நினைவில் வைத்துப் போய் வாங்கிக்கொள்வார்....இல்லண்னா திட்டு விழுமே....

நல்லாருக்கு ஐயா. வாழ்த்துக்கள்.

பாராட்டுக்கு உளமார்ந்த நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
27-09-2010, 05:50 AM
ஐயா இன்னும் பெரிய கடனா வாங்க அடி போடுகிறார் என நினைக்கிறேன்.

ஹி ஹி...:D:D:D

அப்படியெல்லாம் இல்லை..