PDA

View Full Version : எது சொர்க்கம் ?



பாலகன்
20-09-2010, 07:05 AM
எது சொர்க்கம் ?

வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !

சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !

சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?

மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய் (zip file)
சுருங்கிப் போகுமோ?
வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?

சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா....

இது எனக்கு வந்த ஈமெயில்......... இதை நண்பர்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.

அன்புடன்
மகாபிரபு

ஆதவா
20-09-2010, 07:16 AM
கவிதை நன்றாக இருக்கிறது. இதை குறுங்கவிதையில் பதிக்கவேண்டாம்,.
படித்ததில் பிடித்தது பகுதியில் பதியுங்கள்

http://tamilmantram.com/vb/forumdisplay.php?f=111

பிரேம்
20-09-2010, 11:47 AM
இது படித்ததில் பிடித்தது பகுதிதானே..?????

பாலகன்
20-09-2010, 06:10 PM
இது படித்ததில் பிடித்தது பகுதிதானே..?????

நண்பரே இந்த பகுதிக்கு பின்னர் மாற்றப்பட்டது.

nambi
20-09-2010, 06:38 PM
கவிதை நன்று பகிர்வுக்கு நன்றி!