PDA

View Full Version : சொல்லும்,பொருளும்



M.Jagadeesan
19-09-2010, 05:14 PM
திருக்குறளில் பயின்று வரும் பல சொற்கள் இன்று தம் உண்மைப்பொருளை இழந்து நிற்கின்றன.இன்று " தூக்கம்".என்ற
சொல்லுக்கு "உறக்கம்" என்று பொருள் கொள்கிறோம். ஆனால் வள்ளுவர்,"தூக்கம்" என்ற சொல்லுக்கு "காலம் தாழ்த்துதல்"என்று பொருள் கொள்கிறார்.மேலும் சில சொற்களைப் பார்ப்போம்.
"பொறி" என்ற சொல்லுக்கு இன்றைய பொருள் 'இயந்திரம்". அன்றைய பொருள் "ஐம்புலன்களில் ஒன்று"."வேளாண்மை" என்ற சொல்லுக்கு இன்றைய பொருள் "உழவுத்தொழில்".அன்றைய பொருள் 'உதவி' என்பது.."விருந்து' என்ற சொல்லுக்கு இன்றைய பொருள் 'உணவு"என்பது.அன்றைய பொருள் "புதியவர்" என்பது."எச்சம்" என்ற சொல்லுக்கு இன்றைய பொருள் "பறவையின் கழிவு' என்பது.அன்றைய பொருள் "மிகுதி" என்பது."மாடு" என்ற சொல்லுக்கு இன்றைய பொருள் "கால் நடை" என்பது.அன்றைய பொருள் "செல்வம்" என்பது."மடி" என்ற சொல்லுக்கு அன்றைய பொருள் "சோம்பல்" என்பது.இன்று "மடி" என்ற சொல்லுக்கு பல பொருள் உண்டு."வெண்மை" என்பது ஒரு நிறத்தைக் குறிக்கும் சொல்..அன்று "அறிவின்மை" என்று பொருள்படும். "கழகம்" என்ற சொல்லுக்கு இன்றையபொருள் "அமைப்பு" என்பது.அன்றைய பொருள் "சூதாடுகளம்". "கிழவன்" என்ற சொல்லுக்கு "முதியவர்" என்பது இன்றைய பொருள்.அன்றைய பொருள் "உரிமை உடையவன்" என்பது..

பாரதி
20-09-2010, 01:36 AM
மிகவும் நன்றி ஜெகதீசன் அவர்களே.
உங்களின் முயற்சி பலருக்கும் சொற்களை கற்பதில் உதவியாக இருக்கும்.

பொறி தட்டியது, எஞ்சிய உணவு, நிழக்கிழார்... போன்றவை நினைவுக்கு வருகின்றன.

கழகம் என்ற சொல்லுக்கான அன்றைய பொருள் இன்றைக்கும் அப்படியே பொருந்தத்தானே செய்கிறது!:lachen001:

குணமதி
20-09-2010, 03:00 AM
நீங்கள் குறிப்பிட்டுள்ள சொற்களும் அவற்றின் பொருளும் இலக்கிய ஆட்சியில் (செய்யுள் வழக்கு) இன்றும் பயன்படுத்தப்படுபவையே!

nambi
21-09-2010, 11:07 PM
சொல்லும் பொருளும் நன்று! பகிர்வுக்கு நன்றி!

அனுராகவன்
22-09-2010, 04:02 PM
நல்ல பதிப்பு ஜெகதீஷ் அவர்களே!!
நாமும் பயில நல்ல பகுதி..
தொடர்ந்து தாங்க..

M.Jagadeesan
27-09-2010, 06:49 AM
மிகவும் நன்றி ஜெகதீசன் அவர்களே.
உங்களின் முயற்சி பலருக்கும் சொற்களை கற்பதில் உதவியாக இருக்கும்.

பொறி தட்டியது, எஞ்சிய உணவு, நிழக்கிழார்... போன்றவை நினைவுக்கு வருகின்றன.

கழகம் என்ற சொல்லுக்கான அன்றைய பொருள் இன்றைக்கும் அப்படியே பொருந்தத்தானே செய்கிறது!:lachen001:

நன்றி