PDA

View Full Version : ஏதோ சொல்கிறாய்......



Nivas.T
18-09-2010, 05:09 PM
என்னை நோக்கி
ஓடிவருகிறாய்
நகரவில்லை நான்
பாய்ந்து வருகிறாய்
பயப்படவில்லை நான்
சில நேரம் அடிக்கிறாய்
சில நேரம் அணைக்கிறாய்
ஆசையாய் அடைகிறாய்
அவ்வப்போது அத்து மீறுகிறாய்
ஈரமாக்கிச் செல்கிறாய்
பரிசை தந்து
ஏதோ சொல்கிறாய்
விளங்கவில்லை
அலையே

அனுராகவன்
18-09-2010, 06:09 PM
கவிதைக்கு அடிமேல் அடி சேர்ப்பதுப்போல அணி..
அதுபோல் உங்கள் கவியில் அலையே மையமாக வைத்து கவி படைத்த உங்கள் திறமை..
இன்னும் பல தாங்க..அப்பதான் கவி இன்னும் மேருகேறும்..
:)

Nivas.T
19-09-2010, 05:57 AM
நிச்சயமாக

மிக்க நன்றி அனு:)