PDA

View Full Version : இன்னும்!!கண்மணி
17-09-2010, 09:32 AM
கனவுகளில் வரும்
இராஜகுமாரனுக்கு
முடிகள் நரைத்து விட்டன.

அவன் குதிரைக்குக் கூட
வயதாகி விட்டது..

அவனுக்கான
என்காதல் மட்டும்
இன்னும் இளமையாக..

ஆதவா
17-09-2010, 09:44 AM
கனவுகளில் வரும்
இராஜகுமாரனுக்கு
முடிகள் நரைத்து விட்டன.

அவன் குதிரைக்குக் கூட
வயதாகி விட்டது..

அவனுக்கான
என்காதல் மட்டும்
இன்னும் இளமையாக..

ஓவரா கனவுகண்டா இப்படித்தாங்க.... பாட்டி.....

ஓட்டுப் பொறுக்கிகளின் வாக்கு வயசாயிட்டு உதிர்ந்து போனாலும் கொடுக்கப் போற நம்ம மனசு மட்டும் இளமையா கொடு கொடுன்னு சொல்லுதே...... அந்தமாதிரி,
ஒரே ஆள லவ்விட்டு இருந்தா, முதுமை மாத்திரமல்ல...... பல பிரச்சனைகளும் வரும்...

வாழ்த்துக்களுங்கோ!!

கண்மணி
17-09-2010, 09:53 AM
ஒரே ஆள லவ்விட்டு இருந்தா, முதுமை மாத்திரமல்ல...... பல பிரச்சனைகளும் வரும்...

வாழ்த்துக்களுங்கோ!!

இந்தப் பொன்மொழியை ஒரு பெரிய பேனரா மாத்தி உங்க கல்யாணத்துக்குக் கட்டிருவோம்...:D:D:D

ஆனால் கவிதையை நீங்கள் புரிந்து கொண்டதாக நான் நினைக்கலை..:icon_b:

ஆதவா
17-09-2010, 10:07 AM
இந்தப் பொன்மொழியை ஒரு பெரிய பேனரா மாத்தி உங்க கல்யாணத்துக்குக் கட்டிருவோம்...:D:D:D

ஆனால் கவிதையை நீங்கள் புரிந்து கொண்டதாக நான் நினைக்கலை..:icon_b:

படிக்கும்போதே தெரியும் வேற ஏதாவது அர்த்தம் இருக்கும்னு,....
நாலுதடவ படிச்சும் புரியலைன்னா, அஞ்சாவது தட்வ படிக்கக் கூடாது....
அப்பறமா தெளிஞ்சு வந்து படிச்சு தெரிஞ்சுக்கலாம்!!!

ஆதி
17-09-2010, 10:19 AM
கனவுகளில் வரும்
இராஜகுமாரனுக்கு
முடிகள் நரைத்து விட்டன.

அவன் குதிரைக்குக் கூட
வயதாகி விட்டது..

அவனுக்கான
என்காதல் மட்டும்
இன்னும் இளமையாக..

1. ஒரு முதிர்கன்னியின் கனவு என்று நேரடியாக பொருள் கொள்ளலாம்..

2. இராஜகுமாரனை கிடைக்க வேண்டிய பொருளாகவும், குதிரையை வரவேண்டிய அலையதர் "channel" ஆகவும் எடுத்துக் கொண்டால், எதிர்ப்பார்ப்புகள் பற்றிய
கவிதையாய் பொருள் கொள்ள இயலும்... எதிர்ப்பார்ப்புகள் என்று பொருள் கொள்ளும் போது அதில் ஒரு சங்கடம் இருக்கு, கிடைக்காதவரை பழைய பொருள் கூட புதிதாகத்தான் தோன்றும், ஆனால் இங்கே இராஜகுமாரனுக்கும், குதிரைக்கும் வயதாகிவிட்டிருக்கிறது...

3. கனவுகளில் வரும் இராஜகுமாரனுக்கு எனும் போது இந்த கனவு ஒரு முறை கண்ட கனவல்ல, ஒருவேளை இந்த கனவு ஏக்க கனவாக இல்லாமலும் இருக்கலாம், ஏக்க கனவாக இல்லாததால் கனவு ஏன் வருகிறது என்று தெரியாத ஒரு ஸ்தம்பிப்பு நிலையாகவும் இருக்கலாம், கேட்க கேட்க பிடித்துப் போகிற பாடல் மாதிரி காண காண கனவு பிடித்துப் போக அதன் மீதொரு ஈர்ப்புண்டாகி அதை எண்ணி மனம் ஏங்க ஆரம்பித்தும் இருக்கலாம்...

4. காதல் இளமையாக இருக்கிறது என்பதை காதலின் ஆழம் உணர்த்த பயன்படுத்தப்ப்பட்டதாய் கொண்டால் அவன் முடி நரைத்து, வயதாகி போனாலும் அவன் மீதான அன்பிலும்/உறவிலும் எந்த சலிப்பும்/விரிசலும் ஏற்படாமல் மலர்ந்த கொடிப் போல அப்படியே இருக்கிறதாய் கொள்ள முடியும்..

5. இன்னும் வேறு கோணத்தை பற்றி சென்றாலும் இராஜகுமாரனின் கதையும், அவன் வரும் குதிரையும் பழமையான ஒன்று, ஆனால் அவன் குறித்த பேசுக்குகளும், கவிதைகளும், சிந்தனைகளும், கதையும் இன்னும் இளமையாகவே இருக்கிறது மாறாமல்..

6. இந்த வாழ்க்கையும், அதன் வழிகளும் இராஜகுமாரன் & அவன் குதிரை மாதிரி பழையவை, நாம் வாழும் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் புதுமையானது, இளமையானது...

7. காதல் இளமையாக இருக்கிறது என்பதை மனதாகவும் பார்க்கலாம்..

---------------------

சிக்மண்ட் பிராய்ட் கனவு பற்றிய தன் புத்தகத்தில் கனவுகள் குறியீடுகளால் ஆனது னு சொல்றார்..

அதவானது ஆடையை பற்றி கனவு கண்டால் அது நிர்வாணத்தை பற்றி பேசுகிறது என்று பொருள் கொள்ள வேண்டுமாம்..

சமீபத்தில் என் நண்பன் ஒருவனின் கனவுக்கு பதில் கண்டு பிடித்த போது இதை நான் உணர்ந்து கொண்டேன்.. ஆனால் அதற்குள் கண்ட கனவுகளில் வந்த விஷயங்கள் நிறைவேறிவிட்டிருந்ததன.. :(

கவிதையை நான் சரியா புரிஞ்சுக்கிட்டனா னு தெரியல, ஆனால் எனக்கு தோன்றியதை எல்லாம் எழுதிருக்கேன், வாழ்த்துக்கள் அக்கா...

ஆதவா
17-09-2010, 10:47 AM
ஆதன்.... நீங்கள் சொன்னது கவிதையின் நேரடி பொருள்....
மறைபொருள் நிச்சயம் இருக்கிறது!! அது என்னவென்று தான் தெரிந்து கொள்ள வேண்டும்

பிரேம்
17-09-2010, 11:12 AM
அதன்.. ஓவரா.. கனவு காண கூடாது..
இந்த பொண்ணுங்களே இப்டித்தான் எசமான்..

ஆதி
17-09-2010, 12:05 PM
8. வீண்பகட்டு, ஜம்பன் என்று எல்லா பொய் முகமூடிகளோடும் அணிந்து அணிந்து உண்மை முகத்தை தொலைத்தது மட்டுமல்லாமல் அந்த பொய் முகங்களையே மெய்யென எண்ணவும் ஆரமித்ததோடு, அந்த பொய் முகத்தின் மீதான வசீகரத்தையும் இன்னும் ஈரமாய் வைத்திருக்கிறோம்..

9. நாகரீகம் என்னும் பெயரால் போலித்தனங்களோடு பழகிவிட்டோம், அவை நம் உண்மை பண்பாடாய் பழமை அடைந்துவிட்டது, என்றாலும் அந்த போலித்தனத்தை உணராமல் இன்னும் அதை நேசித்தவாறே இருக்கிறோம்..

சுகந்தப்ரீதன்
17-09-2010, 01:04 PM
எல்லோரும் கலர்கலரா கனவு காணும்போது.. கண்மணி ஏந்தான் கறுப்பு வெள்ளையில கனவு காணுதோ..?!:D ஒருவேளை ப்ளாஸ்’பேக்கா’ இருக்குமோ..?:icon_ush:

அமரன்
17-09-2010, 11:13 PM
பிறப்பின் இலக்கு இறப்பு.

கனவு இறந்து எதுவும் பிறக்காமல் பயனில்லை.

கனவில் வரும் பாத்திரங்கள் பழசு தட்டினாலும் பண்டம் மட்டும் அப்படியே இளமை குன்றாமல்.. குறைந்த பட்சம் முதுமை கூட அடையாமல். வேஸ்டு வேல்டு.

குணமதி
18-09-2010, 02:29 AM
1. ஒரு முதிர்கன்னியின் கனவு என்று நேரடியாக பொருள் கொள்ளலாம்..

2. இராஜகுமாரனை கிடைக்க வேண்டிய பொருளாகவும், குதிரையை வரவேண்டிய அலையதர் "channel" ஆகவும் எடுத்துக் கொண்டால், எதிர்ப்பார்ப்புகள் பற்றிய
கவிதையாய் பொருள் கொள்ள இயலும்... எதிர்ப்பார்ப்புகள் என்று பொருள் கொள்ளும் போது அதில் ஒரு சங்கடம் இருக்கு, கிடைக்காதவரை பழைய பொருள் கூட புதிதாகத்தான் தோன்றும், ஆனால் இங்கே இராஜகுமாரனுக்கும், குதிரைக்கும் வயதாகிவிட்டிருக்கிறது...

3. கனவுகளில் வரும் இராஜகுமாரனுக்கு எனும் போது இந்த கனவு ஒரு முறை கண்ட கனவல்ல, ஒருவேளை இந்த கனவு ஏக்க கனவாக இல்லாமலும் இருக்கலாம், ஏக்க கனவாக இல்லாததால் கனவு ஏன் வருகிறது என்று தெரியாத ஒரு ஸ்தம்பிப்பு நிலையாகவும் இருக்கலாம், கேட்க கேட்க பிடித்துப் போகிற பாடல் மாதிரி காண காண கனவு பிடித்துப் போக அதன் மீதொரு ஈர்ப்புண்டாகி அதை எண்ணி மனம் ஏங்க ஆரம்பித்தும் இருக்கலாம்...

4. காதல் இளமையாக இருக்கிறது என்பதை காதலின் ஆழம் உணர்த்த பயன்படுத்தப்ப்பட்டதாய் கொண்டால் அவன் முடி நரைத்து, வயதாகி போனாலும் அவன் மீதான அன்பிலும்/உறவிலும் எந்த சலிப்பும்/விரிசலும் ஏற்படாமல் மலர்ந்த கொடிப் போல அப்படியே இருக்கிறதாய் கொள்ள முடியும்..

5. இன்னும் வேறு கோணத்தை பற்றி சென்றாலும் இராஜகுமாரனின் கதையும், அவன் வரும் குதிரையும் பழமையான ஒன்று, ஆனால் அவன் குறித்த பேசுக்குகளும், கவிதைகளும், சிந்தனைகளும், கதையும் இன்னும் இளமையாகவே இருக்கிறது மாறாமல்..

6. இந்த வாழ்க்கையும், அதன் வழிகளும் இராஜகுமாரன் & அவன் குதிரை மாதிரி பழையவை, நாம் வாழும் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் புதுமையானது, இளமையானது...

7. காதல் இளமையாக இருக்கிறது என்பதை மனதாகவும் பார்க்கலாம்..

---------------------

சிக்மண்ட் பிராய்ட் கனவு பற்றிய தன் புத்தகத்தில் கனவுகள் குறியீடுகளால் ஆனது னு சொல்றார்..

அதவானது ஆடையை பற்றி கனவு கண்டால் அது நிர்வாணத்தை பற்றி பேசுகிறது என்று பொருள் கொள்ள வேண்டுமாம்..

சமீபத்தில் என் நண்பன் ஒருவனின் கனவுக்கு பதில் கண்டு பிடித்த போது இதை நான் உணர்ந்து கொண்டேன்.. ஆனால் அதற்குள் கண்ட கனவுகளில் வந்த விஷயங்கள் நிறைவேறிவிட்டிருந்ததன.. :(

கவிதையை நான் சரியா புரிஞ்சுக்கிட்டனா னு தெரியல, ஆனால் எனக்கு தோன்றியதை எல்லாம் எழுதிருக்கேன், வாழ்த்துக்கள் அக்கா...

இப்படியெல்லாம் வலிய வலியத் தோண்டித்தோண்டி எதைஎதையோ பொருளாகக் கூறினால் பிராய்டுக்கு நேர்ந்ததைப்போல் நேரக்கூடும்! (நகைச்சுவைக்கே, பொறுத்துக்கொள்க!)

செல்வா
18-09-2010, 05:56 AM
காத்திருக்கிறேன்.....!

samuthraselvam
18-09-2010, 06:05 AM
அட எவ்வளவு பெரிய விஷயம் இது அதை இப்படி புரிஞ்சுகிட்டீங்களே ஆதாவா...

பருவம் ஆரம்பித்தது முதல் வந்த கனவு, இன்னும் நனவாகாமல் இருக்கிறது என்பதை தான் சொல்கிறார் கண்மணி...

முதிர்க் கண்ணிகளுக்கும் அவர்களின் கனவில் ராஜகுமரனுக்கும் அவன் வலம் வரும் குதிரைக்கும் வயசானாலும் அந்தக் குதிரை மட்டும் ஓடிக்கொண்டே இருக்கும்...

அதெல்லாம் உங்களை மாதிரி பொடிப் பையன்களுக்கெல்லாம் புரியாது....

ஆதவா
18-09-2010, 06:50 AM

:medium-smiley-100:

அனுராகவன்
18-09-2010, 04:35 PM
கண்மணி கவிதை எழுத என்ன வேண்டும் என்று யோசித்தேன்..
அதற்கு சில எதுகை,மோனை என்று நினைத்தேன்..
ஆனால் இங்கு மூன்று வரிகளில் கொடுத்தை பார்த்தால் நானும் எழுத இது போன்ற கவிதை ஊக்கம் தருகிறது..
நரை,வயது,இளமை...

Nivas.T
18-09-2010, 04:55 PM
அழகுக் கவிதை :)

முடி நரைத்தும், குதிரை கிழடாகியும் அவர் இன்னும் ராஜகுமாரன் ஆ....................:eek:
:lachen001:

கண்மணி
23-09-2010, 04:12 AM
கனவுகளில் வரும்
இராஜகுமாரனுக்கு
முடிகள் நரைத்து விட்டன.

அவன் குதிரைக்குக் கூட
வயதாகி விட்டது..

அவனுக்கான
என்காதல் மட்டும்
இன்னும் இளமையாக..

இது கொஞ்சமா வஞ்சப் புகழ்ச்சியணி.. சில கவிதைகளை எங்கிருந்து எழுதத்தொடங்குகிறார்கள்.. எங்கிருந்து வாசிக்கத் தொடங்குகிறார்கள் என்பதை விட எங்கிருந்து பாதை மாறி பயணிக்க ஆரம்பிக்கிறதோ அந்த இடத்தில் இருந்து இரு முன்னும் பின்னும் பார்த்தால் அந்தக் கவிதையோட பாதையும் பயணமும் புரியும்..

இங்கே அதே மாதிரி ஒரு முரண்.. கனவு இராஜகுமாரனுக்கும் அவன் குதிரைக்கும் எப்பொழுதும் வயதாவதில்லை. இதுதான் இயல்பு.. ஆனால் அவனுக்கு வயதாகி, குதிரைக்கும் வயதாகி ஏன் கஷ்டப்படணும்?

பின்னால் பார்த்தால் அவனுக்கான அவள் காதல் மட்டும் இளமையாக.. அதாவது அந்தக் கனவை மேலும் மேலும் காண வேண்டும் என்ற ஆசை..

அவளுக்கு ஏன் வயசான இராஜகுமாரன் கிழட்டுக் குதிரை மேல் தட்டுத் தடுமாறி வரணும் என்ற ஆசை வரணும் என்ற கேள்விதான் கவிதையின் உட்பொருள்..

கனவு இராஜகுமாரன் தான் வாழ்க்கையே கனவாக்கினவன் என்ற எண்ணமா?

இருக்கலாம். நாம மிகவும் விரும்பும் ஒன்றின் மீது தவறு காணப்படும் போது வரும் கோபம் எப்பவுமே மிக அதிகம். அந்தக் கோபம் அந்த மிக விரும்பப்பட்ட ஒன்றின் மேலேயே திரும்பி அதை அழித்துவிடும். தான் மிகவும் விரும்பும் ஒன்றைத்தான் அப்போ மிகவும் வெறுப்போம்.. அதே நிலை அந்த முதிர்கன்னிக்கு..

அதனால் உண்டாகும் மனப்பிறழ்வுதான் கனவு இராஜகுமாரனை தொண்டு கிழமாக்கி கிழக் குதிரை மேல் பயணிக்க வைத்து குரூரமாக இரசிக்கிறது..

அதனால் இது இராஜகுமாரனின் மேல் இருக்கும் அன்பு அல்ல.. குரூரமான வெறியுணர்வு என்பதே உரிபொருள்..

அதாவது ஆதவா.. இதையெல்லாம் புரிஞ்சுகிட்டா வர்ர பெண்டாட்டி கிட்ட நீங்க ஜாக்கிரதையாய் இருக்கலாமில்ல,

கண்மணி
23-09-2010, 04:13 AM
அழகுக் கவிதை :)

முடி நரைத்தும், குதிரை கிழடாகியும் அவர் இன்னும் ராஜகுமாரன் ஆ....................:eek:
:lachen001:

இராணி இல்லாம முடிசூட்ட முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம்.. :lachen001::lachen001::lachen001: