PDA

View Full Version : ஐயத்தை தீர்ப்பவருக்கு ஆயிரம் பொற்காசுகள்...!!!rajaplus2
17-09-2010, 07:47 AM
சுட்ட பழம் என்றால் என்ன? சுடாத பழம் என்றால் என்ன?

சிவா.ஜி
17-09-2010, 07:56 AM
உங்கக்கிட்ட இருக்கிற பழத்தை உங்களுக்கே தெரியாம சுட்டா...அது சுட்ட பழம்.

நானே காசு குடுத்து வாங்கினா அது சுடாத பழம்...ஹி...ஹி...!!!:lachen001:

செல்வா
17-09-2010, 08:07 AM
கேள்வி பார்வேர்டு டு கண்மணியக்கா... :aetsch013:

ஆதி
17-09-2010, 08:26 AM
சுட்ட பழம் என்றால் என்ன? சுடாத பழம் என்றால் என்ன?

பழம் என்பதை பழமை என்று எடுத்துக் கொண்டால் வரலாறு என்று பொருட்கொள்ள முடியும்..

சுட்டது என்பதற்கு பதமானது என்று ஒரு பொருள் உண்டு..

முமையான வரலாறு என்று சொல்லலாம்..

சுடாததால் வரலாறு அரைகுறையானது என்று கொள்ளலாம்.. :D

நேர் அர்த்தத்தில் பார்த்தால் பதமான பழம், முழுசாய் பழுத்தப்பழம்..

சுடாத பழம் செங்காய், (செந்தொடை மாதிரி தானடா செல்வா ? :D)

இப்ப எல்லாம் பழத்தை புகைப்போட்டு பழுக்க வைக்கிறாங்க, அப்படி பட்ட பழங்களை சுட்ட பழம் என்று எடுத்துக்கலாம், தானா பழுத்ததை சுடாத பழம் என்றும் எடுத்துக்கலாம்..

சுட்ட பழத்தை வெதும்பி பழுத்தல் என்று எடுத்துக்கிட்டா சுடும் தானே :D வெதும்பிவயவரை..

கண்மணி
17-09-2010, 09:02 AM
சுட்ட பழம் - சோதனைகள் தாங்கி அனுபவங்கள் வாங்கிப் பெற்ற முதுமை
சுடாத பழம் - அலுங்காம குலுங்காம வயதானதால் மட்டுமே வந்த முதுமை

சுடாத பழமே கொடு என்றுப் புரியாமல் கேட்ட அவ்வைக்கு மரமுலுக்கி பழமுதிர்த்த ஐயன், அவ்வை பழத்தை ஊதி மண் நீக்க முயன்றபோது கேட்டான்..

பழம் சுடுதா என்று.

அனுபவம் கிட்டியதா என்பது அதன் பொருள்.

சுடுவது என்பதற்கு பொருள் என்ன? சுடுவதால் என்ன நடக்கிறதோ அதுதான். பதப்படுகிறது மனது.

தீயாக வந்து பழத்தைச் சுடுவதாக அர்த்தமில்லை..

பழத்தை யாரோ தீயில் சுடுகிறார்கள். அது சுவைபெற..

அதாவது சோதனைகள். இறைவன் சோதனைகளில் சுட்டுச் சுவையேறிய பழம் சுட்ட பழம். திருநாவுக்கரசர்.

நம் மன்றத்தில் கூட பல விமர்சன நெருப்பைத் தாங்கி சுட்ட பழமான படைப்பாளிகள் உண்டு.

lenram80
17-09-2010, 04:28 PM
சுட்ட பழம் - கலைஞர்
சுடாத பழம் - அழகிரி

பாலகன்
17-09-2010, 05:17 PM
சுட்ட பழம் - கலைஞர்
சுடாத பழம் - அழகிரி

இது புதுசால்ல இருக்கு :D

குணமதி
18-09-2010, 02:20 AM
மரத்தின் கீழே விழுந்திருக்கும் பழத்தை எடுத்து ஊப்... ஊப்... என்று ஊதினீர்களாயின், அது சுட்ட பழம்!
(தூசு போக்க நீங்கள் ஊதியிருக்கலாம்!)

Ravee
18-09-2010, 09:23 AM
மதுரையில் எந்த பெட்டிக்கடையில் போய் சுடாதபழம் என்றால் சிறிய அட்டை பெட்டியில் இருந்து ஒரு வெண் குழலை எடுத்து தருவார்கள். பாவம் சில ஏழை தொழிலாளிகளுக்கு கையில் காசு இல்லாமல் வாயும் ஊரும் போது கடைக்கு வெளியே ஆங்காகு கிடக்கும் சுட்டபழங்களை பொறுக்கி கொள்வார்கள்.

முடியலை இதுக்கும் மேல தெளிவா சொல்ல முடியலை.....:lachen001:

Narathar
18-09-2010, 02:11 PM
பொற்காசெல்லாம் இங்க வேலைக்கு ஆகாது
இ - காசு கொடுத்தாத்தான் இங்க வேலை நடக்கும்

Nivas.T
18-09-2010, 02:45 PM
பொற்காசெல்லாம் இங்க வேலைக்கு ஆகாது
இ - காசு கொடுத்தாத்தான் இங்க வேலை நடக்கும்

:D - காசு

அன்புரசிகன்
20-09-2010, 02:08 AM
சரி அந்த ஆயிரம் பொற்காசை எனக்கு அனுப்புங்க. பதிவுகளின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் பொற்காசு பகிர்ந்தளிக்கப்படும். :lachen001:


பொற்காசெல்லாம் இங்க வேலைக்கு ஆகாது
இ - காசு கொடுத்தாத்தான் இங்க வேலை நடக்கும்
அவரிடம் இருக்கிறதே 200க்கு கீழ. இதுல இ காசு கொசுக்காசு என்றால் அவர் எங்க போவார். :eek:

பாவூர் பாண்டி
20-09-2010, 03:59 AM
சுட்ட பழம், வறுமையின் நிறம் சிகப்பு படம் பார்த்தவர்களுக்கு எளிதில் புரியும் :violent-smiley-034:

அனுராகவன்
22-09-2010, 03:45 PM
சுட்ட பழமா-ஒரு மனிதரின் பொருளையோ,கவிதையோ சுட்டால் அதனை சொல்லாம்..
சுடாத பழம்-உன் சுயமான உழைப்பால் வருவது..

சுட்ட பழம்-நாவல் பழம் கீழே விழும் போது மண் ஓட்டும்..அதனை எடுத்து தின்னும் முன் வாயால் ஊதும் போது மற்றவர் பார்க்கும்போது பழம் சுடும் போல...

சுடாத பழம்-அப்படியே தின்னலாம்..

சுட்ட பழம்-மனமற்ற ஞானி
சுடாத பழம் -மனமுள்ள மனிதன்..

அனுராகவன்
22-09-2010, 03:47 PM
:D - காசு
காசு கொடுத்தால் நாவல் கிடைக்கும்..
அது இல்லையேல் சாதரண ஈதான் அமரும்.:lachen001::lachen001::lachen001:

விகடன்
07-10-2010, 09:45 AM
மரத்தின் கீழே விழுந்திருக்கும் பழத்தை எடுத்து ஊப்... ஊப்... என்று ஊதினீர்களாயின், அது சுட்ட பழம்!


பார்த்த பக்திப்படத்தை மறக்காமல் வைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

radha rani
08-10-2010, 07:04 AM
பச்சிளங் குழந்தை--- சுடாத பழம்
முதியவர் --- சுட்ட பழம்

அமரன்
08-10-2010, 11:50 PM
ஐயத்தை தீர்த்தால் ஆயிரம் பொற்காசா..

சாரி.. நீங்க இடம் மாறி வந்திடீங்க.

இங்க கூலிப்படை இல்லை:)

கீதம்
09-10-2010, 12:27 AM
ஐயத்தை தீர்த்தால் ஆயிரம் பொற்காசா..

சாரி.. நீங்க இடம் மாறி வந்திடீங்க.

இங்க கூலிப்படை இல்லை:)

யாரவர் ஐயம் என்பதில் எனக்கொரு ஐயம்!

அமரன்
09-10-2010, 08:53 PM
யாரவர் ஐயம் என்பதில் எனக்கொரு ஐயம்!

ஐயாம் என்று வந்து சொலுங்களே ஐயம்.

பூமகள்
14-10-2010, 05:29 PM
ஐயம் சொல்றேன்.. ஐயாம்..!! :)

krishnaamma
18-10-2010, 06:05 PM
உங்கக்கிட்ட இருக்கிற பழத்தை உங்களுக்கே தெரியாம சுட்டா...அது சுட்ட பழம்.

நானே காசு குடுத்து வாங்கினா அது சுடாத பழம்...ஹி...ஹி...!!!:lachen001:

எனக்கும் கூட இதுதான் சரி என படுகிறது :)

krishnaamma
18-10-2010, 06:07 PM
அது சரி , இங்கு தமிழில் எப்படி type செய்வது? நான் வோர்ட் இல் அடித்து பேஸ்ட் பண்ணினேன் .
:confused: