PDA

View Full Version : வீதிகளின் தேவதைகள் என்னை விரட்டுகின்றார்கள்



அகத்தியன்
15-09-2010, 01:32 PM
அழகான பெண்களினை
எப்போதும் என் கண்கள் தொடர்கின்றன.
அலைகின்ற மனசைக் கூட்டிக்கொண்டு.

வீதிகளில் நிறைகின்ற அழகுகளில்
கண்களும் மனமும் சருகாய் அலைய
நான் மட்டும் வேறாகி

கூர்மையான பார்வைகள்,
கதை பேசும் கண்கள்
மெலிதாய் தெரியும் புன்னகை
என எல்லாம் தேடி
இன்னும் முன்னேறும் மனது-கண்ணின் துணை கொண்டு.

கனவுகளின் தொல்லை முடியாத
சில நடு நிசிப்பொழுதுகளிலும்
வீதிகளின் தேவதைகள்
என்னை விரட்டுகின்றார்கள்

வசீகரன்
16-09-2010, 07:40 AM
வீட்டுல சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்க சொல்லுங்க அகத்தி...!

(ஒரு அனுபவஸ்தனின் அறிவுரை):):)

அகத்தியன்
14-10-2010, 05:56 AM
வீட்டுல சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்க சொல்லுங்க அகத்தி...!

(ஒரு அனுபவஸ்தனின் அறிவுரை):):)

ம்ம்........ இதுக்கு இப்பிடி எல்லாம் அர்த்தம் எடுக்கலாமா வசி? நீர் ரொம்ப துரத்தப்பட்டிருக்கீர் போலுள்ளதே!!!!!!!!!!!:p:p

ஆதவா
14-10-2010, 01:59 PM
அழகான பெண்கள் நம்மை தொந்தரவு செய்வது ஒன்றும் புதிதில்லை இதை பென்ஸ் சரியாகச் சொல்லுவார்


ஆண்கள் அடிப்படையாகவே எழிதாக காதலில் விழுந்து, கஸ்டபட்டு மீழ்பவர்கள், அது அவங்க தப்பு கிடையாது கடவுள் அப்படி படச்சுட்டார் "டெஸ்டடேரோன்" போன்ற ஹார்மோன்கள் அவனை கொடுமை படுத்தும் போது அவன் எழிதாக விழுந்து ஆகனும், அதிலும் அப்படியே அழகை நாடி போகதான் செய்யும்....
...

கனவுகள் ஒரு சிறு சம்பவத்தின் கீற்று. மூளை தன்னை கழுவப் பயன்படுத்தும் பொழுது அந்த கீற்றுகள் ஒன்றோடொன்று இணைந்து நடிக்கின்றன. தொடர்ந்து கனவில் (அதுவும் மச்சத்தோடு) வந்தால் பேசாமல் அந்த பெண்ணைக் காதலித்துவிடுங்கள். ஜாக்கிரதை, அந்த பெண்ணுக்கு கல்யாணம் ஆகியிருக்கப் போகீறது!!
ஆக, கனவில் வருவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. கவலைப்படாதீர்கள் அகத்தியன்.