PDA

View Full Version : தொலைபேசிகளின் மௌனங்கள்



அகத்தியன்
14-09-2010, 05:18 AM
தொலைபேசிகள் மௌனிக்கும் போது
எனக்குள் சில திணுக்கிடல்கள் ஏற்படுகின்றன.
கவலைகள் சூழ்கின்றன.
ஒரு குழந்தை போல அதை வெறித்தவாறு நிற்கின்றேன்.
இதோ எனக்கான அழைப்பு வருகின்றது என்ற பிரமையுடன்.
ஆனால் அது மௌனித்தவாறே இருக்கின்றது.

நீண்ட மௌனம் எனக்கும் என் தொலைபேசிக்கும்
அதன் வெற்றி பற்றி எப்போதும் கவலை கொள்கின்றேன்.
ஆனாலும் அது நிகழவில்லை.

அறையில் நானும் என் தொலைபேசியும் மௌனமும்
வேறு எந்த பிரசன்ன்ஙகளினையும் நாங்கள் விரும்பவில்லை.
என் காத்திருப்பு நீண்டே போகின்றது.
ஆனாலும் அது முடிவதாக இல்லை.

kulirthazhal
14-09-2010, 05:51 AM
காத்திருப்பின் சுகங்களும், மௌனங்களின் கொடுமையும் ஆற்றல் மிக்கது... எதிர்பார்ப்புகள் உள்ளவரை.... உங்களை மயங்கசெய்த தேடுதல் என்னவோ... சிறப்பான கவிதை, தொடருங்கள்....

வசீகரன்
16-09-2010, 07:52 AM
காத்திருப்பின் சுகங்களும், மௌனங்களின் கொடுமையும் ஆற்றல் மிக்கது... எதிர்பார்ப்புகள் உள்ளவரை.... உங்களை மயங்கசெய்த தேடுதல் என்னவோ... சிறப்பான கவிதை, தொடருங்கள்....

அகத்தியனின் கவிதை சுகத்தை சொல்லவில்லை... தனிமையும்... வெறுமையான மௌனத்தையும் சொல்வதாக தெரிகிறது...!
இந்த சூழல் நன்கன்று...!

அது ஒரு தேவையற்ற கொடுமையான தனிமை அதில் இருந்து மீள்வதுவே நன்கு..!

suriya_2411
16-09-2010, 08:13 AM
அந்த தொலை பேசியின் சிணுங்கள் அவளது அழைப்பாக இருக்குமென நிதமும் ஏங்குகிறேன் - அப்படி தானே அகத்தியன்